Sapiens Health Foundation

Sapiens Health Foundation Sapiens Health Foundation was started in the year 1997 with the idea of helping patients with kidney diseases. in several institutions all over the country.

The foundation has been conducting awareness lectures, Salt reduction campaign etc.

15/07/2026
Dear Colleagues and Friends,We are delighted to inform you that our preprint article “Advancing Public Health Through Bu...
04/07/2026

Dear Colleagues and Friends,
We are delighted to inform you that our preprint article “Advancing Public Health Through Building Physician Capacity for Salt Reduction and Low Sodium Substitutes” is now available on medRxiv 🎉.

The study highlights physician-led workshops in Chennai, Mumbai, and Delhi, strengthening knowledge and counselling skills for salt reduction and low-sodium substitutes. It underscores the vital role of physicians as champions in reducing hypertension and cardiovascular disease.

📖 Read the preprint here:
👉 https://www.medrxiv.org/content/10.64898/2026.06.18.26355944v1

We invite you to read, share, and help spread this important public health message 🌍💙.

Warm regards,
Dr. Rajan Ravichandran
Sapiens Health Foundation, Chennai
www.sapiensfoundation.org
www.losalter.org

Excessive sodium intake is a major contributor to hypertension, cardiovascular disease, and other non-communicable diseases (NCDs), posing a persistent public health challenge. Physicians, as trusted health advisors, are central to promoting salt reduction strategies in routine clinical practice. Th...

World Salt Awareness Week 2026 - Release of Salt Reduction Guide and 90sec video at IOB Central office, Chennai on 13th ...
03/06/2026

World Salt Awareness Week 2026 - Release of Salt Reduction Guide and 90sec video at IOB Central office, Chennai on 13th May. Event Lecture by Dr. Rajan Ravichandran, Chairman, Sapiens Health Foundation.

Sapiens Health Foundation an NGO based in Chennai celebrated the Wo...

Tamil Magazine – Mangayar Malar – August 2013மருத்துவ ஸ்பெஷல்: கிரேஸி மீட்ஸ் ஆர்.சி!“சால்ட் விஷயத்துல அசால்ட்டா இருக்கலா...
16/04/2026

Tamil Magazine – Mangayar Malar – August 2013
மருத்துவ ஸ்பெஷல்: கிரேஸி மீட்ஸ் ஆர்.சி!
“சால்ட் விஷயத்துல அசால்ட்டா இருக்கலாமா?”
சந்திப்பு, தொகுப்பு: மங்களீஸ்வரி புகைப்படம்: ‘க்ளிக்’ ரவி
"சென்னையின் மிகப் பிரபலமான சிறுநீரக மருத்துவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன். அவர் என்னுடைய சிறந்த நண்பர் மட்டுமல்ல; திறமையான டாக்டர்... நல்ல மனிதர்... சமூக ஆர்வலர். நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் தொண்ணூறு மெடிக்கல் டவுட்ஸ் கேட்பேன். அவரும் தொள்ளாயிரம் விளக்கங்கள் தருவார். இன்னிக்கு சாயங்காலம் அவரைச் சந்திக்கப் போறேன். நீங்களும் வர்றீங்களா?" என்று கிரேஸி மோகன் கேட்டதும், "தேன் குடிக்க செதியா?" என்று நரியிடம் கேட்பது போல இருந்தது. உடனே தலையாட்டிவிட்டுப் பறந்தோம்.
கிரேஸி: டாக்டர்... நம்ம நகைச்சுவை எழுத்தாளர் தேவன் இருந்தாரில்லையா? அவருக்கு வயிறு ரொம்பப் பெருசா இருக்கும். மகோதரம்னு சொல்வாங்க... ஆனா அது கிட்னி பிராப்ளம்னு ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சதாம்!
டாக்டர் ரவிச்சந்திரன்: ஆனா இப்ப அப்படி இல்ல. வீட்டிலேயே பயன்படுத்துற மாதிரி பி.பி., சுகர், ப்ரெக்னென்ஸி டெஸ்டிங் எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் கையடக்கமா வந்திருக்கிற மாதிரி, லேட்டஸ்ட்டா கிட்னி டெஸ்டிங் மிஷினும் வந்தாச்சு!
கிரேஸி: அடடே! எக்ஸலன்ட்!
டாக்டர் ரவிச்சந்திரன்: 'அல்புமின் செக்-அப்' டாக்டர் கிட்-னு பேரு. இதுல இருக்கிற ஸ்டிரிப்பை சிறுநீரில் அமிழ்த்திய உடனேயே கலர் மாறி, ரிசல்ட் பளிச்னு சொல்லிடும்... இப்ப அந்த கிட்டை காலேஜ் படிக்கிற பசங்ககிட்டக் கொடுத்து, சுயபரிசோதனை பண்ணிக்கிட்டு வரச் சொல்றோம். இதனால ஆரம்பத்துலயே கண்டுபிடிக்கப்பட்டு பலரது கிட்னி காப்பாத்தப்படுது!
கிரேஸி: அது ஏன் டாக்டர்... குறிப்பா காலேஜ் ஸ்டூடண்ட்ஸைத் தேர்ந்தெடுத்தீங்க?
டாக்டர் ரவிச்சந்திரன்: எல்லாம் ‘வரும் முன் காப்போம்’ முயற்சிதான். எங்களோட பிரசாரமும் அதை ஒட்டித்தான் அமையும். கிட்னியைப் பொறுத்த வரைக்கும் இரண்டு சிறுநீரகமும் முற்றிலும் செயலிழக்கும் வரை, எந்தவொரு அறிகுறியும் காட்டாமல், அமைதியா இருந்துட்டு, திடீர்னு கையை விரிச்சுடும்... அப்ப... மாற்றுச் சிறுநீரகம் தான் ஒரே வழின்னு ஆயிடும். அந்த அளவுக்கு கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக அல்புமின் டெஸ்ட்டை சின்ன வயசுலேயே பண்ணிடறோம்... இது ஜப்பான்காரங்களோட டெக்னிக். உலகத்திலேயே கிட்னி பிரச்சினையில் நம்பர் ஒன் நாடா அவங்க இருந்தாங்க. அப்புறம், அவங்க ஸ்கூல் லெவல்லேயே டிடெக்ட் பண்ணி சிகிச்சை தந்து, இப்ப அங்க சிறுநீரக நோய்களின் சதவிகிதம் ரொம்பவே குறைஞ்சு கருக்க... இப்ப இந்தியா டாப்பர் ஆயிடுச்சு!
கிரேஸி: சிறுநீரக நோய் பரம்பரையா வருமா?
டாக்டர் ரவிச்சந்திரன்: பரம்பரை கிடையாது. அப்படி வந்தாலும் பத்து சதவிகிதம் தான் சான்ஸ். பி.பி-யாலதான் வருது.
கிரேஸி: உப்பு அதிகமானா, பி.பி-யாகும், பி.பி அதிகமானா அது கிட்னி நோயைத் தீவிரமாக்கும்... சரிதானே ஸார்?
டாக்டர் ரவிச்சந்திரன்: கரெக்டா சொல்லீங்க... ஊறுகாய், சிப்ஸ் இதெல்லாம் சாப்பிடக்கூடாது. பி.பி-யைக் குறைக்கணும். ரெகுலரா எக்சர்சைஸ் பண்ணணும். வாக்கிங் போகணும். சிகரெட், மதுவுக்கு நோ சொல்லணும்.
கிரேஸி: சிறுநீரக பாதிப்புலயே இரண்டு விதம் இருக்கு இல்லையா?
டாக்டர் ரவிச்சந்திரன்: ஆமாம்... க்ரானிக், அக்யூட்னு இரண்டு விதமிருக்கு. தற்காலிகமானது அக்யூட். விபத்து, விஷம் போன்றவற்றால் அது திடீரென்று செயலிழந்து போவது... க்ரானிக் என்பது நாள்பட செயலிழப்பது.
கிரேஸி: உப்பே இல்லாமல் சாப்பிட்டா டிமென்ஷியா, அல்ஸைமர் எல்லாம் வந்திடும்னு பயமுறுத்துறாங்களே?
டாக்டர் ரவிச்சந்திரன்: அதெல்லாம் பொய்! உப்பே இல்லாத உணவுன்னு எதுவுமில்லை. பச்சைக் காய்கறி, தானியத்துலயும் வேண்டிய அளவு இயற்கை உப்பு இருக்குத்தான் செய்யுது. உப்பில்லாமல் சாப்பிட்டா பி.பி. குறைஞ்சு, லேசா மயக்கம் வரலாம். அவ்வளவுதான்.
கிரேஸி: சில வெளியிடங்கள்ல பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால சிறுநீரை அடக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படுது. அது மாதிரி தொடர்ந்து நடந்தா சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
டாக்டர் ரவிச்சந்திரன்: நோ சான்ஸ்! சிறுநீரகத்தைச் சேகரிக்கும் பிளாடர் அப்படியெல்லாம் டேமேஜ் ஆகாது. என்ன... இந்தப் பெண்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஆகலாம்.
கிரேஸி: பி.பி குறையணும்னா, வாக்கிங் கம்பல்சரின்னு சொல்றீங்க... வீட்டுக்குள்ளேயே நடக்கலாமா?
டாக்டர் ரவிச்சந்திரன்: என்னைப் பொறுத்தவரை வாக்கிங்கிறது அதற்கான ஷூவை அணிந்து கொண்டு கையைக் காலை வீசி, பிரிஸ்க்கா தெருக்களில் பூங்காக்களில் அதிகாலையில் அரைமணிநேரம் நடப்பதுதான். ஆனால், நடக்காமலே இருக்கிறதுக்கு, வீட்டுக்குள்ளே நடப்பது எவ்வளவோ பெட்டர்!
கிரேஸி: நிறையத் தண்ணீர் குடிக்கிறதும் ரிஸ்க்னு சொல்வீங்களே?
டாக்டர் ரவிச்சந்திரன்: ஆமாம்! ஒரேயடியா ஒரு லிட்டர் தண்ணீரை மடக் மடக்கென்று குடிக்கிறது எல்லாம் தேவையற்ற வேலை. கிட்னிக்கு அதிக வேலை தரும் எந்த விஷயமும் தப்பானது. அதையே கொஞ்சம் கொஞ்சமா குடிக்கலாம். தாகத்துக்கு ஏத்த தண்ணி... கிட்னிக்கு எந்த உப்பு...னு வாழ்ந்தா சிறுநீரகப் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். அது சரி கிரேஸி, உங்களுக்கு எப்படி இவ்ளோ மெடிக்கல் நாலெட்ஜ் வந்தது?
கிரேஸி: உங்களுடைய www.sugarbp.org என்கிற பிளாக்கை அடிக்கடி படிக்கிறேன் டாக்டர். வெரி இன்ட்ரஸ்டிங்.
"உப்பென்றும் சீனியென்றும் உண்டுத் திரிவோரே செப்பாகி கிட்னி சிதைந்திடும்! - இப்பவே ராஜன் ரவிச்சந்திரன் சொன்னார்போல் போஜனம் செய்யப் பழகு..."
டாக்டர்: கடைசியா அடிச்சீங்க ஒரு சூப்பர் வெண்பா பஞ்ச்!
(சிரித்தபடி விடைபெறுகிறார்கள்)

World Kidney Day 2026 - Theme VideoKidney Health for All: Caring for People, Protecting the Planet.
13/03/2026

World Kidney Day 2026 - Theme Video
Kidney Health for All: Caring for People, Protecting the Planet.

Sapiens Health foundation a prominent NGO from Chennai celebrated the World Kidney Day 2026 on March 10th . The theme for the World Kidney Day is Kidney Heal...

Address

Chennai
600020

Alerts

Be the first to know and let us send you an email when Sapiens Health Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share