04/12/2025
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது 2004-இல் குன்னூர் வந்திருந்தார்.
இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் காதுகளுக்கு செய்தி எட்டியது.
டாக்டர் அப்துல் கலாம் உடனே சாம் மானெக்ஷா-வை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு உடல் நலம் குறித்து விசாரித்து விட்டுப் புறப்படும் முன் -
சாம், "நீங்கள் இங்கே ஏதேனும் சிரமங்களை எதிர்கொள்கிறீர்களா? நீங்கள் இன்னும் சௌகரியமாய் இருக்க நான் ஏதாவது செய்ய முடியுமா? உங்களுக்கு ஏதேனும் புகார்கள் உள்ளதா?" என்று கேட்டார்.
சாம் மானெக்ஷா "ஆமாம் ... என்னிடம் உங்களுக்கு அளிக்க வேண்டிய ஒரு புகார் உள்ளது" என்று பதில் கூறினார்.
டாக்டர் கலாம் அக்கறையுடன் கேட்டார், "உங்கள் புகார் என்ன?"
சாம் மானெக்ஷா, 'ஐயா, என் உயிரினும் மேலான இந்தியத் திருநாட்டின் மிகவும் மரியாதைக்குரிய முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் என் முன்னே நிற்கிறார், ஆனால் என்னால் எழுந்து அவருக்கு வணக்கம் (Salute) செலுத்த முடியவில்லை என்பதுதான் என் புகார்" என்றார்.
இதைக் கேட்ட டாக்டர் கலாம் சாமின் கையைப் பிடித்தார் ... ஒரு கணம், இருவரின் கண்களிலும் கண்ணீர் தழுதழுத்தது.
அப்துல் கலாம் புறப்படும் போது, மானெக்ஷா குடியரசுத் தலைவர்யிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார்: "ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கான உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை".
ஃபீல்ட் மார்ஷல் பதவியில் உள்ள அதிகாரிகள் என்றுமே உண்மையிலேயே ஓய்வு பெறாததால், உயிருடன் இருக்கும் ஃபீல்ட் மார்ஷல்களுக்கு தலைமைத் தளபதிகளுக்கு இணையான முழு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
டெல்லிக்குத் திரும்பிய பின், டாக்டர் கலாம் சாம் மானெக்ஷா-வின் ஓய்வூதிய நிலுவைத் தொகை உட்பட முழு தொகையையும் ஒரு வாரத்திற்குள் செலுத்த ஏற்பாடு செய்தார். பாதுகாப்புச் செயலாளர் சுமார் ₹ 1.30 கோடிக்கான காசோலையுடன் சிறப்பு விமானம் மூலம் ஊட்டியின் வெலிங்டனுக்கு வந்தார்.
அந்த காசோலையைப் பெற்றவுடன் - சாம் மானெக்ஷா முழுத் தொகையையும் இராணுவ நிவாரண நிதிக்கு (Army Relief Fund) நன்கொடையாக வழங்கினார்.
மனோஜ் விஜயகுமார்
ஒரு பெரிய மனிதர் மற்றொரு பெரிய மனிதரின் பணியை எவ்வளவு ஆத்மார்த்தமாக மதித்தார் என்பதற்கும் இவர்கள் இருவரின் உயிரினும் மேலான நாட்டுப்பற்றிற்கும் இது சான்று.
Truly, they were the real heroes of our country. Salute to both of them.