07/08/2026
அனைவருக்கும் வணக்கம்..
கடந்த 2024-2025 கல்வி ஆண்டில் திருவாடானை வட்டம் சின்னக்கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பொருளாதார சூழ்நிலை காரணமாக மேல்படிப்பு படிக்க இயலாத சூழ்நிலையை அறிந்து நண்பர் திரு ஆர். ஶ்ரீதர் VAO மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில் திருச்சியில் செயல்பட்டு வந்த அறக்கட்டளையின் உதவியுடன் மேல்படிப்பு படிப்பதற்கான உதவிகள் செய்து வந்தார்கள் .
தற்பொழுது மூன்றாம் ஆண்டு படித்து வரும் அம்மாணவனுக்கு தங்கும் அறைக்கும் (விடுதி)மற்றும் சிற்றுண்டிக்கு இந்த வருடம் செலுத்த வேண்டிய தொகையில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக மேற்படி மாணவன் தினந்தோறும் சுமார் 50+50 கிலோமீட்டர் தூரம் தினமும் சென்று வரும் நிலையில் உள்ளதை அறிந்த
நண்பர் திரு ஆர். ஶ்ரீதர் அவர்கள் நமது MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு திரு. சரவணன் ச தலைமையாசிரியர் அவர்களிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
பின்பு MSV விழுதுகள் அறக்கட்டளையின் நண்பர் திரு போ. சேமாங்கோட்டை இராஜமாகேந்திரன் அறந்தை வைகோதாசன் அவர்கள் அந்த மாணவனை தொடர்புகொண்டு உண்மைநிலையை ஆராய்ந்து மாணவனுக்கு தேவையான நிதியுதவியை ஏற்பாடு செய்து ஏற்கனவே உதவி செய்த நண்பர் ஆர்.ஸ்ரீதர் VAO அவர்களுடன் MSV விழுதுகள் அறக்கட்டளையின் நாகுடி Kamal Kannan , புதுவயல் அன்புக்கரசன் இவர்களுடன் இணைந்து நண்பர் மருத்துவர் திரு அறிவழகன் அவர்களின் மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு ரூபாய் 17,000 காண காசோலை 04/08/2026 அன்று வழங்கப்பட்டு மாணவனின் உயர்கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ச்சியாக MSV விழுதுகள் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டி MSV விழுதுகள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருக்கும் கொடைஉள்ளங் கொண்டவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
#திருவாடானை
#சிவகங்கை