கானகக் கல்வி

கானகக் கல்வி பல்லுயிர்பெருக்கம் மற்றும் காடு, பறவைகள் வனவிலங்குகள் அவசியம் குறித்த கதையோடு கானக உலா

*உலக_வன_உயிரின_தினம்_மார்ச்__3:*ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செ...
03/03/2026

*உலக_வன_உயிரின_தினம்_மார்ச்__3:*

ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.

காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.

இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,

2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,

3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது, வன விலங்குகலின் உயிரை பரிக்கும் " மதுபான பாட்டில் களை " வனப் பகுதியில் வீசாமலும் இருப்பது,

காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக

யானை வாழிடம் என்றால் என்ன? வழித்தடம் என்றால் என்ன? என தெரிந்து கொள்வோம்.யானையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போகாதவர...
23/11/2025

யானை வாழிடம் என்றால் என்ன? வழித்தடம் என்றால் என்ன? என தெரிந்து கொள்வோம்.
யானையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போகாதவர்கள் எவரும் இல்லை.அத்தனை பெரிய உருவம் கொஞ்சமாகவா உண்ணும்.வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 250 கி முதல் 300 கி வரை உணவு உண்ணும்.அதுப் போல 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் தண்ணீரும் தேவையெனில் ஒரு பெரிய யானைக் கூட்டத்திற்கு எவ்வளவு தேவைப்படும். அப்படியானால் ஒரு யானைக்கூட்டம் ஒரே இடத்தில் இருந்தாலும் காடு அழிந்துவிடும் அல்லவா? இயற்கையாவவே ஒரு யானைக்கூட்டம் இடம் விட்டு இடம் நகரும் தன்மை கொண்டது.அப்படி ஒரு வாழிடத்திலிருந்து இன்னொரு வாழிடத்திற்கு செல்லும் பாதையைத்தான் வழித்தடம் என்கிறோம்.இதனை ஆங்கிலத்தில் corridor என்பார்கள்.அதுப்போல் வாழிடத்தை habitat என்கிறோம்.
காட்டில் யானைகளே வழிகளை போடுகின்றன.அந்த வழியை பின்வரும் குளம்படி விலங்கினங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. யானைகள் சாலைகளை கடப்பதில்லை. காடுகள்தான் சாலைகளை கடக்கின்றன.ஒரு நாளின் வேளையில் 18 மணி நேரம் நடந்துகொண்டே உணவு உண்ணும்.குறைந்தது 10 கிமீ முதல் 70 கிமீ தூரம் வரை ஒரு நாளில் கடந்து விடும்.

அப்படி காட்டில் நடக்கும்போது யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதை கள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம். யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.
யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன்பெறு கின்றன.

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு, மனிதர்களின் நுகர்வு கலாச்சாரம், தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல், ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப் படுகின்றன.
லட்சக்கணக்கான ஆண்டுகளாக அது கடந்து செல்லும் தனது பாதையை அவைகள் ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது.

" காடறிதல் "காடு அழகா இருக்குமா? பயங்கரமா இருக்குமா? என்னும் கேள்விக்கு அழகா இருக்கும் என்று இயல்பாக பதில் வந்தது ஒரு கு...
11/10/2025

" காடறிதல் "காடு அழகா இருக்குமா? பயங்கரமா இருக்குமா? என்னும் கேள்விக்கு அழகா இருக்கும் என்று இயல்பாக பதில் வந்தது ஒரு குழந்தையிடம்..

உடுமலைப்பேட்டையை கடந்தவுடன் வருகிறது ஆனைமலை புலிகள் சரணாலயம். அந்த காட்டை கடந்து வந்தால் கேரள எல்லையில் அமைந்துள்ளது சின்னாறு வனப்பகுதி.
சுற்றிலும் மலைகள்.

அங்கிருந்து துவங்குகிறது நமது பயணம்.

*பயணம்*
பாதங்கள் பெறும் வரம்..
*பயணம்*
மனதை உடலை சமன் செய்யும் தராசு..
*பயணம்* நினைவடுக்குகளின் இனிப்பு மழை.. *பயணம்*
அனுபவம் சொல்லித்தரும் புறப்பள்ளி..

காந்தளூர் பயணம் காந்தமாய் ஈர்க்கும்.. கண்களும் புன்னகைத்தது..
பயணம் செல்லும் முன்னும் பின்னும், எத்தனை எத்தனை வண்ணங்களாய் எத்தனை எத்தனை எண்ணங்கள்.

காடறிதல்
பள்ளிக்குச் செல்ல உடுமலைப்பேட்டையில் ஒன்று கூடுவோம்.
வெவ்வேறு
திசைகளிலிருந்து
வரும் வேடந்தாங்கல் பறவையாய், குழந்தைகள் முதல் முதியவர் வரை ஒன்றிணைந்து பயணிப்போம்.

சூடான இளம்
காலை வெயில்
ஜீப்பில் பயணம் தொடங்கும்.
*மலை*
பூமித்தாயின் மார்பல்லவா...
அவள் முன் குழந்தைகள் அல்லவா நாம்.. இயற்கை பசியாற கொஞ்சம் மேலேறுவோம்.
பார்க்கும் இடமெங்கும் மரங்கள் புதர்கள் பாறைகள் மலைகள்..
பள்ளங்களில் கவிழும் நம் உள்ளங்கள்..

கச்சாரம் அருவியில் கால் நனைப்போம் குளிரும்.பிறகு
உடல் நனைத்தால் தெரியும் அவ்விடம்
வானுக்கும் பூமிக்கும் இடையிலிருந்ததால் திரிசங்கு சொர்க்கமாய்.

ஒன்றாய்
சேர்ந்து பசியாறி
சற்றே கொஞ்சம் இளைப்பாறி..
மாலை வேளையில்
வான் பார்க்க
வட்டமாய் அமர்வோம்
காடறிதல் நாயகன் கதைகள் கேட்க ஆவலாய்... 'தாய் அணில் இல்லா நேரத்தில் குட்டி அனிலை குரங்கு
மடிஅமர்த்தி
கொஞ்சி காக்குமாம்'..
அப்படி
நாம் ஒன்றிணைந்து உரவாடுவோம்.
ஒவ்வொருவரின் அறிமுகத்திலும் ஒரு வாஞ்சை இருக்கும்
ஒரு வலிமை இருக்கும்..
ஏனெனில் இயற்கை புரிதல் உள்ளவர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும்.

இரவில் நிலா பார்த்து
அமுதம் பருகிய ஆனந்தம்.
பனியில் உறையாமல் சதாசிவம் ஐயாவின் பேருரையில்
இயற்கை இலக்கியம் கேட்டு உறைய வாருங்கள்.

மறுநாள் நிகழ்வை மனதிலிருத்தி
கண்கள் இளைப்பாறி காலை பசியாறி கிளம்புவோம்...

சிலமயில் தூரம்
காடு பார்க்க
நம் விரல் பிடித்து அழைத்துச் செல்வார் கோவை சதாசிவம் ஐயா..
குழந்தைகளின் உற்சாகம்..
பெண்களின் பேரார்வம்..
ஆண்களின் கண்ணியதோடு
காடு பார்க்க அமைதியாய் நடப்போம்.
கரையான் புற்றின் போராட்ட வாழ்வியலும்,..
நீர்மருது மரத்தின் ஆயிரம் ஆண்டின் நீட்சியும்,..
சதாசிவம் ஐயாவின் சொல்வழி கேட்டு அமைதியாய் அந்த காட்டை உள்வாங்குவோம்.

சின்னாற்றில் கால்கள் நனைத்து நீரமுதம் பருகுவோம்.
கண்கள் மூடி இதயத்தின் வழியே இயற்கை பேசுவதை உணர்வோம்.

பந்திக்கு முந்தும் ஆர்வத்தோடு
மந்திகள் பார்த்து மகிழ்ந்து விட்டு,
ஒருவருக்கொருவர் நன்றியும் வாழ்த்தையும் பகிர்ந்து விடைபெற மனமின்றி வீடு நோக்கிப் பயணிப்போம்.
காந்தளூர் காட்டில் உதிர்ந்த
சருகாய்..
இலையாய்..
ஏதேனும் ஒரு பூவிதழாய்..
இன்னும் நம் மனம் அங்கேயே அலைந்து கொண்டிருக்கும்.
எப்போது திரும்புமென தெரியாமல்...

இப்படியாக பல அனுபவங்கள் சுமந்து வரும் காடறிதல் பயணம்.

அது மட்டுமல்ல
யானைக்காடு எப்படி இருக்கும்?, நட்சத்திர ஆமைகள் வாழும் காட்டில் யானைகள் அதற்கு மதிப்பு கொடுத்து எப்படி நகர்ந்து செல்கிறது?
இப்படி பல கேள்விகளை நம் குழந்தைகள் கோவை சதாசிவம் ஐயாவிடம் கேட்கலாம்.

காலையில் பறவை பார்க்கலாம். இரவில் மின்மினிப் பூச்சிகள் பார்க்கலாம். நூறடி உயரத்தில் ஏறி நின்று யானைக்காட்டை 360 டிகிரி கோணத்தில் கண்டு இரசிக்கலாம்.

மிகத் தூய்மையாக ஓடிக்கொண்டிருக்கும் சின்னாறு நதியின் கரையில் அமர்ந்து அந்த நதியோடு பேசலாம். கலங்கமற்ற சின்னாறு நதி அமராவதியில் கலந்து பிறகு காவிரியில் கலக்கும் போது கலங்கப்பட்டுப் போவதை கதையாக நம்மிடம் சொல்வாள் அவள்.

வாருங்கள் இப்படி பல அனுபவங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காட்டில் குளிருடன் கூடிய மழைச் சாரலில் நனைவோம், குளிப்போம், இயற்கையுடன் இன்புற்று இருப்போம்

நாள் : டிசம்பர் - 13,14 2025
( சனி & ஞாயிறு)

தங்குமிடம், 5 வேளை சைவ உணவு,ஜீப் கட்டணம், தங்கும் இடம் என அனைத்தும் சேர்த்து வருகின்ற செலவுகளை பகிர்ந்து கொள்வோம்.

முன்பதிவுக்கு :
97903 88452

இயற்கையே போற்றி...என் வாழிடம், வழித்தடம் மறித்து, காடழித்து கான்கிரீட் குப்பை கொட்டி, மது போத்தல் உடைத்துப் போடும் அற்ப ...
27/08/2025

இயற்கையே போற்றி...
என் வாழிடம், வழித்தடம் மறித்து, காடழித்து கான்கிரீட் குப்பை கொட்டி, மது போத்தல் உடைத்துப் போடும் அற்ப மானிடனே...ஒரு ஆணியும் நீ அகற்ற வேண்டாம்.

விலகிப் போ, நான் வாழ்ந்து கொள்கிறேன்!

இப்படிக்கு யானை....

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி.மலை,குன்று,பெருங்காடு,புதர்க்காடு, ஊற்று , அருவி,ஆறு, ஏரி, கால்வாய்,கழிமுகங்...
31/07/2025

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி.
மலை,குன்று,பெருங்காடு,புதர்க்காடு, ஊற்று , அருவி,ஆறு, ஏரி, கால்வாய்,கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள்,வளைகுடா, பூசந்தி,சதுப்பு நிலங்கள், கடல், பெருங்கடல்,தீவு, தீபகற்பம், பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி இப்படி விதவிதமான புவியியல் அமைப்பும் எண்ணிலடங்கா உயிர்கள் வாழும் உறைவிடம்தான் நம் தேசம்.
வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லுயிரியம்’ என்கிற ‘பயோடைவர் சிட்டி’தான். மரங்கள், செடிகொடிகள், பாலூட்டிகள், புள்ளினம், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்&நில வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது. நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கிடைப்பதற்கரிய இயற்கையை சர்வநாசம் செய்து வருகிறோம்..

உலக நதிகள் தினத்தை முன்னிட்டு
காடறிதல் - கற்றல் வழி பயணம்
சூழலியல் எழுத்தாளர்
திரு.கோவை சதாசிவம் ஐயாவுடன்..

பயண தேதி: செப்டம்பர் - 27,28 -2025,(சனி& ஞாயிறுக் கிழமை)

செயல்பாடுகள்:
- முதல் நாள் குறிஞ்சி நில பயணம்
- இரண்டாம் நாள் முல்லை நில பயணம்
- இரண்டு நிலங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அறிதல்
- சோலைக் காடுகள் மகத்துவம் அறிதல்
- சூழலியல் நூல்கள் அறிமுகம்
- அருவிக் குளியல்
- ஆற்றுக் குளியல்
- பழத்தோட்ட பயணம்
- காணொளி காட்சி
- நிழல்பாவை கூத்து

பயணிக்கும் இடம்:
மன்னவன் சோலை, கச்சாரம்,கோயில் கடவு, காந்தளூர், சின்னாறு வனப்பகுதி.

தொடர்புக்கு-9790388452

நீருக்கும் நிலத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவை பிரிக்க முடியாது.தமிழ்நாடு நிலநடு கோட்டை ஒட்டிய பகுதி என்பதால் இங்கு வாழும் மனிதற்கு நீர்தான் முக்கிய ஆதாரம்.

கடலில் சேரும் நீர் வீண் அல்ல.
அதுதான் இயற்கை. நிலத்தில் பிறப்பெடுக்கும் நதி கடலில் சென்று சேர்ந்தே தீர வேண்டும்.
மீண்டும் அங்கிருந்து மழையாக பொழிய வேண்டும்.

தமிழர்களின் மரபில் இயற்கை குறித்த புரிதல் அதிகம் எனவே அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல கடலுக்கும் பல்லுயிருக்கும் சொந்தம்.

மக்களும் ஏனோ பார்ப்பதை எல்லாம் வாங்குகிற நுகர்வு கலாச்சாரத்திற்கு வந்துவிட்டோம். இங்கு எந்த பொருளை செய்தாலும் அதில் இயற்கையின் பங்குள்ளது.அதில் நீரின் பங்கும் உள்ளது.
எனவே உற்பத்தியில் நீரின் அளவும் அதிகமாகிறது.

வாருங்கள் இதைப்பற்றி அதிகம் பேசுவோம்.. மழைக்காடுகளில் எப்படி நத

*உலக 🐍பாம்புகள் தினம்* உலகம் முழுவதும் ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது பாம்புகள் ஊர்வன வகையைச...
16/07/2025

*உலக 🐍பாம்புகள் தினம்*
உலகம் முழுவதும் ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும் . பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பெரும்பாலன பாம்புகள் விஷத்தன்மை அற்றவை என்பது ஆயிவில் நிருபிக்கப்பட்டுள்ளது . பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக:- சினிமாக்களில் காட்டப்படும் பாம்புகதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3000 வகையான பாம்புகள் இருக்கின்றன இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன . இதில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும் . இவற்றில் 4 வகை பாம்புகள் அதிம் காணப்படும் விஷத்தன்மை கொண்டவைகள்

1 , நல்ல பாம்பு
2 , கண்ணாடி விரியன்
3 , கட்டு விரியன்
4 , சுருட்டை விரியன்

இவைகளுக்கு மட்டுமே விஷமுண்டு . இந்த நான்கு வகை பாம்புகள் மனிதர்கள் வசிப்பிடங்களைச் சுற்றியும் வாழும் தன்மை கொண்டவை . பெரும்பாலான பாம்புகள் மனிதனைக்கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன . நாம் அதை சீண்டாத வரை அது யாரையும் தீண்டுவதிலை . முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது . பாம்புகள் மனித நடமாட்டத்தை கண்டால் ஒளிந்து விடும் . நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை விட பாம்புகளுக்கு நம்மீது பயம் அதிகம் . இதில் விரியன் வகை பாம்புகள் நம்மை கண்டால் ஒளியாமல் அதே இடத்தில் சுருன்டுக்கொள்ளும் .
பாம்புகளை பார்த்தால் பிடிக்கவோ அடிக்கவோ கூடாது உடனே *வனத்துறைக்கு தகவல் கொடுக்கவும் .*

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அணைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் பட்டுள்ளது . அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தாலோ , அடித்தாலோ , ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொன்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
*நமது வனங்களும் வன உயிரினங்களும் மதிப்பு மிக்கவை அவற்றை அழியாது பாதுகாப்போம்*
நன்றி : Siraj Deen

Address

7/15. Kasi Street, Vellore Dist, Tamilnadu
Ambur
635802

Telephone

9790388452

Website

Alerts

Be the first to know and let us send you an email when கானகக் கல்வி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share