Iwontmiss-Jallikattu

Iwontmiss-Jallikattu Why you don't miss Jallikattu,Madurai,IT,Happenings,Agriculture
know the facts

07/03/2026

எந்த அரசு சேவை, அரசு அலுவலகங்களுக்கு போகாமல், அரசு ஊழியர்களை நேரில் சந்திக்காமல் உங்களுக்கு கிடைத்திருக்கிறது?

கட்டிட அனுமதி வாங்க ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் எல்லாம் முடியும் சமயம் நீங்க உங்கள் ஆவணங்களை நேரில் கொண்டு வாருங்கள் நாங்க சரி பார்க்க வேண்டும் என்று வர சொல்வார்கள். அங்கே தான் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவார்கள்.

மின் இணைப்பு வாங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பார்கள். அனைத்தும் முடியும் தருவாயில் மீட்டர் வந்துவிட்டது நீங்க AE சாரை பார்த்து பேசிடுங்க என்று சொல்லிவிடுவார்கள். ஒருவேளை நாம் நேரில் போகவில்லை என்றால் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இழுத்தடித்து நமது நேரத்தை விரயம் செய்ய வைப்பார்கள். இது தான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும் இன்று இ சேவையின் அவல நிலை.

சென்னை தவிர வேறு எங்குமே புகார் அளிக்க உருப்படியான சிஸ்டம் இல்லை. சென்னையிலும் முன்பை விட மோசமான நிலை தான். எல்லாம் ஒன்வே தான். நீங்க புகார் அளிக்கலாம். ஆனால அதை யாரும் வாசித்து பார்த்து நடவடிக்கை எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஆனால் புகார் சரி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி மட்டும் வரும். 100% புகார்களை சரி செய்து வருகிறோம் என்று சொல்லி இனி அமெரிக்காவுடன் தான் தமிழ்நாட்டை ஒப்பிட வேண்டும் என்று நகைச்சுவை செய்வார்கள்.

5 வருடங்களாக ஒரு முன்னேற்றமும் இல்லை. அடுத்த 5 வருடங்களுக்கு இதை எல்லாம் சரி செய்ய எந்த கட்சி உறுதி அளிக்க போகிறது? ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இந்த கேள்விகளை கேளுங்க மக்களே.

அறப்போர் Anti Corruption Manifesto என்ன சொல்கிறது என்பதை காணொளி வாயிலாக தெரிந்து கொள்ள - https://youtu.be/Y58zb_1-1Eg

அறப்போர் இயக்கத்தின் ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க - https://bit.ly/AntiCorruptionManifesto2026

Partners In Crime
16/02/2026

Partners In Crime

சென்னையில் உள்ள 100 கோடி பெருமான சொத்தை நெல்லை ராதாபுரத்தில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து ஆட்டையை போட முயற்சி செய்தது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி. அறப்போர் புகாருக்கு பிறகு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

ஆனால் இது வரை திமுக அரசு மோசடி செய்த நயினார் பாலாஜி மற்றும் இளையராஜா இருவர் மீதும் வழக்கும் போடவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் மற்றும் மோசடி என்று வந்துவிட்டால் திருடர்கள் முன்னேற்ற கழக அரசு யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள் போல.

Address

Alanganallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iwontmiss-Jallikattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share