12/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களான முகமது அஜ்மல் ,முகமது ஜாஹித் மற்றும் முகமது தெளஃபிக் ஆகிய மூவரும் போட்டித் தேர்வில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக தட்டச்சு (Typing) பயிற்சி வகுப்புகள் கலந்துகொண்டு பயிற்சி செய்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வில் இரு மாணவர்கள்(MOHAMED JAHID- ENGLISH Jr,MOHAMED THOWFEEK-TAMIL and ENGLISH jr) வெற்றி பெற்றுள்ளனர். தட்டச்சு தேர்வின் மூலம் தட்டச்சு சான்றிதழை பெற்றால் போட்டித் தேர்வில் எளிமையாக வென்று அரசு அதிகாரி ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது