தவ்ஹீத் ஜமாஅத் - அதிரை

தவ்ஹீத் ஜமாஅத் - அதிரை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிய சிறந்த இணையதளம்!

20/02/2026
Say no to “Happy New Year.” All days are the same; there is nothing special about one day.
01/01/2026

Say no to “Happy New Year.” All days are the same; there is nothing special about one day.

04/12/2025
திருப்பரங்குன்றம் மற்றுமொரு அயோத்தியா?இது தமிழ்நாடு. ஒரு போதும் அயோத்தியாகாதுமதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாய் திகழும் ...
04/12/2025

திருப்பரங்குன்றம் மற்றுமொரு அயோத்தியா?

இது தமிழ்நாடு. ஒரு போதும் அயோத்தியாகாது

மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாய் திகழும் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, மதக்கலவரத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. அதற்கு அடித்தளம் போடும் வகையில் மதுரை திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா இடத்தை வைத்து மதத்தின் பெயரால் கலவரம் உண்டாக்க சங்கப்பரிவார அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு,கோழி பலியிடுவதால், அங்கே அசைவம் சாப்பிடுவதால் இந்துக்களின் மனதை முஸ்லிம்கள் புண்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து பெரிய போராட்டத்தை நடத்தி கலவரத்திற்கு திட்டமிட்டார்கள்.

முருகமலையில் தர்கா இருக்கலாமா? அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று வன்ம விதையை தூவினார்கள்.

ஆனால் தமிழக மக்களின் சகோதரத்துவ உணர்வை அவர்களால் அசைக்க முடியவில்லை, அப்பகுதியில் வாழும் இந்து மக்களே இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். காலங்காலமாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் எங்களது பகுதியில் கலவரத்தை தூண்டுவதற்காகவே இதனை செய்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வெளியூரிலிருந்து இறக்குமதி செய்த சங்கிகளை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய இவர்கள் இதில் பெரும் தோல்வியை சந்தித்தார்கள்.

அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசு தடை செய்கிறது என்று பொய் கூறி இந்துக்களே ஒன்று திரளுங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தது. காலம் காலமாக திருப்பரங்குன்றம் மலையில் எந்த பகுதியில் தீபம் ஏற்றப்படுமோ அந்த நடைமுறையில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. கோவில் நிர்வாகமே அதை தங்குதடையின்றி செய்து வருகிறது.

ஆனால் சங்கப்பரிவார அமைப்புகள் வழமையை மீறி தர்கா அமைந்துள்ள பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றியே தீருவோம் என்று வெறிபிடித்து அலைந்தார்கள். இதை கோவில் நிர்வாகிகளோ வெகுஜன இந்து மக்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே பாபர் மஸ்ஜிதை போல நீதிமன்றத்தின் மூலம் தனது காரியத்தை சாதிக்கலாம் என்று எண்ணி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கேட்கும் பகுதியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இவர் பல்வேறு தீர்ப்புகளின் மூலமாக ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஆதரவாக செயல் படுவதாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு உள்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அக்குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் வகையிலேயே இந்த விவகாரத்தில் அவரது உத்தரவு அமைந்துள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் அவர்களே நேரடியாக களத்தில் சென்று ஆய்வு நடத்தி விசாரித்த விதம், வழக்கு தொடர்ந்த மதவாதிகளின் மட்டமான முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற தீர்ப்பின் மூலம் அனுமதி அளிப்பது அர்சியல் சாசன சட்டங்களை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதே விவகாரத்தில் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு தர்கா அருகில் தீபம் ஏற்றுவதை கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது. இருநீதிபதிகள் வழங்கிய உத்தரவையும் பொருட்படுத்தவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சங்கப்பரிவாரங்களின் குரலையே நீதிபதியும் பிரதிபலித்துள்ளார்.

மதமோதல் மட்டும் தான் தமிழகத்திற்கு தேவை என்ற சங்பரிவார சிந்தனை கொண்டர்வர்களுக்கு தனது உத்தரவின் மூலம் தீனிபோட்டுள்ளார்.

இதையடுத்து நீதிமன்றமே உத்தரவிட்டு விட்டது. எனவே காவல்துறை பாதுகாப்புடன் தர்கா அருகில் நாங்கள் தீபம் ஏற்றியே தீருவோம் என்று நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியும் தனது பரிவார ஆட்களை திரட்டியும் வந்தனர்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் மலை உச்சியில் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல. அது நில அளவைக்கல் எனும் அடிப்படையில் அங்கு தீபம் ஏற்ற மறுத்ததுடன் நல்லிணக்கத்தை காப்பதற்காக நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அறிவித்தார்கள்.

தாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை எனும் ஆதங்கத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப்பரிவாரத்தினர் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பரபரப்பை உண்டுபண்ணியதுடன் காவலர்களை தாக்கி ரவுடியிசத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இருந்த போதிலும் அவர்களை தர்கா அருகே செல்லவிடாமல் காவல்துறை தடுத்து விட்டது.

இரவு நீண்ட நேரம் காவலர்களுடன் மல்லுக்கட்டியும் கூட
தாங்கள் நினைத்தை செய்ய இயலவில்லை.

ஆன்மீகம் எனும் பெயரில் இவர்கள் செய்ய வித்திடும் மதக்கலவரத்திற்கு மதுரை மக்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்கள்.

இவர்கள் பற்ற வைக்க நினைத்த கலவரத்தீயை தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து முறியடித்துள்ளது.

உள்ளபடியே தமிழக அரசும் காவல்துறையும் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு தமிழக மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

தமிழக பாஜகவும் சங்கப்பரிவார அமைப்புகளும் நீதிமன்ற உத்தரவை சாதகமாக்கி திருப்பரங்குன்றத்தை மற்றுமொரு அயோத்தியாக்கலாம். அதன் மூலம் இந்து – முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை கெடுத்து அதில் குளிர்காயலாம் என நினைக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலவரமூட்ட நினைக்கும் கயவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தமிழ்நாடு. ஒரு போதும் அயோத்தியாகாது.

இறைவனின் திருப்பெயரால்…….. *தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்)* *நாம் செய்ய வேண்டியது என்ன?*பீக...
31/10/2025

இறைவனின் திருப்பெயரால்……..

*தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்)*
*நாம் செய்ய வேண்டியது என்ன?*

பீகாரில் எஸ்ஐஆர் மூலம் நடத்தப்பட்ட நிகழ்வு " ஜனநாயகப் படுகொலை" என்பதை நாம் அறிவோம்.

அங்கு Special Intensive Revision (SIR) மூலம் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் இதுவரை சரியாக பதிலளிக்கவில்லை.

நீக்கப்பட்டவர்களின் அடையாள எண் மற்றும் காரணம் என்னவென்பதை தேர்தல் ஆணையம் சரியான முறையில் வெளியிடவில்லை.

இந்நிலையில் அடுத்த 12 மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு அதை செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று.

தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுவரை எஸ்.ஐ.ஆரை அனுமதிக்க மாட்டோம் - சட்டப்படி எதிர்கொள்வோம் என்று சொல்லி வந்தாலும் இப்போது அனைத்தையும் தாண்டி அது களத்திற்கு வந்துவிட்டது.

தமிழகத்தில் என்னென்ன தேதிகளில் எவ்வாறு எஸ்.ஐ.ஆர் எடுக்கப்படும் என்கிற பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வீடுவீடாக சென்று எஸ்.ஐ.ஆர் பணிகளை முன்னெடுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கும் எல்லையற்ற அதிகார வரம்பிற்கும் உச்சநீதிமன்றம் உரிய கடிவாளமிட தவறிவிட்டதன் விளைவே இது.

தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழகத்தில் தீவிரம் அடையவுள்ள நிலையில் இனி சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தாண்டி ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

ஏனெனில் எஸ்.ஐ.ஆர் என்பது வெறுமனே வாக்காளர் திருத்தம் மட்டும் அல்ல. பெயர் திருத்தம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் மட்டும் இதில் நடைபெறுவதில்லை. மாறாக குடியுரிமை தொடர்புடைய அம்சமும் மறைமுகமாக அதில் அடங்கியுள்ளது. வாக்காளர் இந்திய குடிமகன் தானா என்ற சந்தேகத்தை உறுதி செய்யும் பணியையும் இதில் செய்கின்றனர்.

ஆகவே தான் வாக்காளர் அடையாள அட்டையை தாண்டி வேறு சில ஆதாரங்களை கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் ஆதாரத்தை வழங்காத பட்சத்தில் நம்மை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விடுகிறார்கள். அது வாக்காளர் நீக்கம் மட்டும் அல்ல. நமது குடியுரிமை மீது எழுப்பும் சந்தேகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயக பங்களிப்பு செய்ய வாக்குரிமை தான் அனைத்திலும் முக்கியமானது. நம்முடைய கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் செவி சாய்ப்பதும் இந்த வாக்குகளுக்காகத்தான்.

எனவே எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது நமது வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் விழிப்புணர்வு வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள், வரும் 2025 நவம்பர் மாதம் 4 தேதி முதல் 2025 டிசம்பர் மாதம் 4 தேதி வரை வீடு வீடாக வந்து ஆவணங்கள் கேட்பார்கள்.

தமிழகத்தில் 2002 ல் சில மாவட்டங்களிலும், 2005 ல் சில மாவட்டங்களிலும் (SIR) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.elections.tn.gov.in/ElectoralRolls.aspx

2002 & 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து தற்போதைய பட்டியலிலும் பெயர் இருப்பவர்கள் கூடுதலாக எந்த ஆவணமும் வழங்க வேண்டியது இல்லை.

ஒருவேளை அவர்களின் பெயர்கள் 2002 & 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இல்லை என்றாலும், அவர்களுடைய பெற்றோர் பெயர் இடம் பெற்று இருந்தால் அவர்களும் கூடுதலாக ஆவணம் எதுவும் அளிக்க வேண்டியதும் இல்லை.

அவர்கள் கணக்கெடுப்புப் படிவத்தை (enumeration form) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

https://voters.eci.gov.in/enumeration-form

2002 & 2005 ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் அவர்கள் மட்டுமே, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 சான்றுகளில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

1. பிறப்புச் சான்றிதழ் (Birth certificate issued by a municipal body, panchayat or another government authority)
2. பாஸ்போர்ட் (Passport issued by the ministry of external affairs)
3. கல்விச் சான்றிதழ் (Matriculation or higher education certificate from a recognised board or university)
4. அரசு / பொதுத்துறை ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை (Govt./PSU employee or pensioner ID card)
5. நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ் (Permanent Residence Certificate)
6. வன உரிமைச் சான்றிதழ் (Forest Right Certificate)
7. சாதிச் சான்றிதழ் (Caste certificate (SC/ST/OBC) issued by a competent authority)
8. குடும்பப் பதிவேடு (Family register issued by local bodies)
9. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் (Land or house allotment certificate from a government office)
10. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC - National Register of Citizens) – (இருக்கும் பட்சத்தில்)
11. 01.07.1987-க்கு முன் அரசு/வங்கி/தபால் அலுவலகம்/LIC போன்ற பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்கள். (Government or PSU identity documents dated before 1987)

ஆதார் அட்டை முக்கிய சான்றாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்வதில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆதார் அட்டையானது அடையாளச் சான்றாக (Proof of Identity) மட்டுமே கருதப்படும். அது குடியுரிமை, பிறந்த தேதி அல்லது வசிப்பிடத்திற்கான சான்றாக (Proof of Citizenship, Birth, or Residence) ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே ஆதாருடன் சேர்த்து மேற்கண்டவற்றில் இதர ஆதாரங்கள் எதையேனும் இரண்டை வைத்திருப்பது இந்த நடைமுறையை எளிதாக்கும். பிற ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இது சம்பந்தமான மேலதிக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீடியோ வடிவில் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ஒரு மாத காலம் இந்த தகவல்களை திரட்ட போதுமான காலமாக இல்லை. மழைக்காலத்தில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை எடுப்பதே தேர்தல் அதிகாரிகளின் போதாமையை வெளிப்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்து பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. பெங்களூர் மகாதேவ்புரா தொகுதியில் நடைபெற்ற மோசடிகள் யாவும் தேர்தல் ஆணையத்தை களங்கப்படுத்தியுள்ளது. அதிலிருந்து தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இல்லை. தமிழகத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பீகாரை போல தமிழகத்திலும் தனது தில்லுமுல்லு வேலையை காட்ட முனைந்தால் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

இப்படிக்கு,
முஜிபுர் ரஹ்மான்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

15/09/2025

வருடிக்கொடுக்கும் நீதிமன்றமும் வரம்பு மீறத்துடிக்கும் வெறுப்பரசியல் வெறியர்களும்


ஏகனின் திருப்பெயரால்

வக்ஃப் சொத்தில் வரம்பு மீறும் ஒன்றிய அரசு,
வருடிக் கொடுக்கும் நீதிமன்றம்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கிறது என்று நாடெங்கிலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வந்தது.

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் விருப்பமும் வழக்கு தொடுத்தவர்களின் நோக்கமும் ஒன்றே ஒன்று தான். முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தை சூறையாடும் நோக்கத்தில் கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.

விசாரணையின் துவக்கத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பிய பல கிடுக்குப்பிடி கேள்விகளும் அத்தகைய நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தது.

வக்ஃப் வாரியத்தில் ஏன் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள்? இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பி நம்பிக்கையூட்டியது.

வக்ப் பை யூசர் (Waqf by user) என்ற சட்டத்திருத்தத்தை விமர்சிக்கும் வகையில் 13 முதல் 15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவைகளுக்கு இப்போது ஆவணங்களைத் தருவது சாத்தியமில்லாதது என்று கூறி புதிய சட்டத்தின் ஓட்டைகளை அம்பலப்படுத்தியது.

இதன் அடிப்படையில் முஸ்லிம்களின் மத சுதந்திரத்தையும் தங்கள் சொத்தை தாங்களே நிர்வகிக்கும் உரிமையையும் ஒருசேர பறிக்கும் இந்த வக்ஃப் கொள்ளைச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடும் என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் வக்ஃப் சட்டம் தொடர்பான விசாரணை இன்று (15.09.25) வந்தது. அதில் வக்ஃப் சட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வக்ஃப் சட்டத்தில் உள்ள ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம் 5 ஆண்டுகளுக்கு பிறகே வக்ஃப் செய்ய முடியும் என்ற திருத்தம் மற்றும் வக்ஃப் சொத்தில் அரசு உரிமை கோரினால் அதில் கலெக்டருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் புதிய திருத்தம் ஆகியவற்றை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இது கூட இடைக்கால நிறுத்திவைப்புதான்.

மேலும் மாநிலத்தின் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பு 3 ஐ தாண்டக்கூடாது என்று கருத்துக்கூறி முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

மாநில வக்ஃப் வாரியத்தில் சி.இ.ஓ வாக ஒரு முஸ்லிம் அல்லாதவர் நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் குறித்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் இக்கருத்துகள் மத்திய அரசை வருடிக் கொடுப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

விசாரணையின் முந்தைய அமர்வுகளில் இந்து அறக்கட்டளையிலும் திருப்பதி தேவஸ்தானம் போர்டிலும் இஸ்லாமியர்களை உறுப்பினர்களாக அங்கீகரிப்பீர்களா ? என்று உச்சநீதிமன்றம் தானே எழுப்பிய கேள்விக்கு முரணாக இப்போது கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது.

இதை எப்படி புரிந்து கொள்வது என்பதை உச்சநீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தானம் செய்ய தடை என்ற புதிய சட்டத்தை உச்சநீதி மன்றம் மவ்னமாக கடந்து செல்கிறது.

இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ள திருத்தங்களை தவிர ஏனைய சட்டப்பிரிவுகளிலேயே வக்பை நாசமாக்கும் பல பாதகமான அம்சங்கள் உள்ளன. அவற்றுக்கு உரிய தீர்வை நீதிமன்றம் ஏற்படுத்திதரவில்லை.

வக்ஃப் பை யூசர் (Waqf by user) செல்லாது என்று சொல்லும் புதிய சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளையே மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஆவணங்கள் தர சாத்தியமில்லாத காலத்தில் வாய்மொழியாக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு என்ன?

வக்ஃப் செய்வதற்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற புதிய சட்டவிதியை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நபர்தானா? என்பதற்கான விதிகளையும் வழிகாட்டல்களையும் மாநில அரசுகள் வகுக்கும் வரை இவ்விதி நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஒருவர் தனது மதத்தை சொல்வதன் மூலம் அவர் முஸ்லிமா? இல்லையா? என்பது தெரிந்து விடும். அதை தவிர இஸ்லாத்தை பின்பற்றும் நபர் என்பதற்கான விதிகளை மாநில அரசுகள் எப்படி வகுக்க முடியும்?

அப்படி வகுக்கும் என்றால் இது முஸ்லிமுக்கு மட்டுமா ? பிற மதங்களை சார்ந்தவர்களுக்கும் அப்படியான விதிகள் வகுக்கப்பட உள்ளதா என பல குளறுபடிகளை கொண்ட கருத்தாகவே இது உள்ளது.

பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தனது சாட்டையை சுழற்றியது போல வக்ஃப் சட்டத்தில் செய்யவில்லை.
வக்ஃப் விவகாரத்தில் மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உச்சநீதிமன்றம் வருடிக் கொடுக்கும் நிலை தான் உள்ளது.

வக்ஃப் சொத்தை சூறையாடும் மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றால் மக்களின் எழுச்சி மிக்க ஜனநாயக போராட்டங்கள் தான் தீர்வாக அமையும்.

இப்படிக்கு,
அ.முஜீபுர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ‏لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ‏(மறுமைநாள்) அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும...
14/09/2025

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ‏
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ‏

(மறுமைநாள்) அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும். தமது உழைப்பிற்காக திருப்தி கொள்ளும்.

(அல்குர்ஆன்: 88:8,88)

وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا‏
”நம்பிக்கைக் கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.”

(அல்குர்ஆன்: 17:19)

ஒரு மாவட்டத்தினுடைய புள்ளியை ஒரு கிளை எடுக்கிறது என்று சொன்னால் அதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மாநாட்டால் என்ன பயன் என்று கேட்கக் கூடியவர்களுக்கு உங்களது உழைப்பால் பதில் கூறியிருக்கிறீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

*கிரகணத் தொழுகை* # சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ...
07/09/2025

*கிரகணத் தொழுகை*

# சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

#கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

#பள்ளியில் தொழ வேண்டும்

#இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

#இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

#ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்

#நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்

#கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

*இவற்றுக்கான #ஆதாரங்கள் வருமாறு:*

‘நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்…

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் – முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

‘நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1515

‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்;தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற வாழ்வுரிமை மீட்பு மாநாடு! பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்
07/09/2025

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற வாழ்வுரிமை மீட்பு மாநாடு!

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்

07/09/2025

Address

TNTJ Adirampattinam
Adirampattinam

Telephone

+919543612716

Website

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் - அதிரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share