சுப்பர்மடம் இது எமது கிராமம்

சுப்பர்மடம் இது எமது கிராமம் சுப்பர் மடம் புலம்பெயர் வாழ் மக்கள் ஒன்றியம்

This began from 2013
சுப்பர்மடம் கல்வி சமுக முன்னேற்ற அமைப்பு.
14/01/2021
From this date the name has been changed. Now
சுப்பர் மடம் புலம்பெயர் வாழ் மக்கள் ஒன்றியம்


எமது ஊரின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள்
கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திக்கான
உதவிகள் வழங்குதல்,
மேலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல்

நிதி பங்களிப்பு செய்த அனைத்து உறவுகளுக்கும் எமது  நன்றிகள்! எமதூரின் முன்பள்ளி ஆசிரியர் வேதனத்தை வழங்கி உதவிய எமது உறவுக...
01/10/2026

நிதி பங்களிப்பு செய்த அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றிகள்!

எமதூரின் முன்பள்ளி ஆசிரியர் வேதனத்தை வழங்கி உதவிய எமது உறவுகளுக்கு, எமது உறவுகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆசிரியர் வேதனத்திற்கான பங்களிப்பை தற்போது வழங்கிய குடும்பங்கள்:

1) ரவீந்திரன் கோமதி குடும்பத்தினர் ஆனி மாதம்

2). சத்தியமூர்த்தி புவனராசா குடும்பத்தினர். ஆடி மாதம்

3. சிவபாதம் சித்திரவடிவேல் சிவகுமார் குடும்பத்தினர் வைகாசி மாதம்

அனைவருக்கும்
எமதூரின் முன்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவாக, ஆசிரியர் வேதனத்தை வழங்கி உதவியமைக்கு உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுப்பர்மடம் புலம்பெயர் வாழ் மக்கள் ஒன்றியம்
சுப்பர்மடம் சனசமூக நிலையம்
மற்றும் முன்பள்ளி நிர்வாகம்.

வேலைப்பளு காரணமாக, சில பங்களிப்பு பதிவுகளைப் பொதுத்தளத்தில் பகிர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

27/09/2026
எமதூர் புலம்பெயர்வாழ் உறவுகளுக்கு பணிவன்பான வணக்கங்கள் சித்திவிநாயகர் முன்பள்ளியின் புதிய கட்டிடம் அமைத்தல் தொடர்பாகஎமது...
25/09/2026

எமதூர் புலம்பெயர்வாழ் உறவுகளுக்கு பணிவன்பான வணக்கங்கள்

சித்திவிநாயகர் முன்பள்ளியின் புதிய கட்டிடம் அமைத்தல் தொடர்பாக
எமது ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் ஊரில் தங்கியிருந்த காலப்பகுதியில், தற்போது சித்திவிநாயகர் முன்பள்ளி அமைந்துள்ள காணியானது, அப்போதைய சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஊடாக கோயிலுக்கு வழங்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆலயத்திற்கு இடப்பற்றாக்குறை காரணமாக புலம்பெயர் உறவுகளால் வாங்கி கொடுக்கப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான தோட்டக் காணி நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முன்பள்ளியின் பயன்பாட்டிற்காக சட்டரீதியாக மாற்றி வழங்கப்பட்டது.
இதற்குரிய ஆவணங்கள் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் உள்ளது
எனவே, புலம்பெயர்உறவுகளால் வாங்கி வழங்கப்பட்ட காணியில் புதிய முன்பள்ளிக் கட்டிடத்தை அமைப்பதற்காக, புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எமது மூத்தோரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று, அவர்களில் சிலரின் மேற்பார்வையுடன், சுப்பர்மடம் புலம்பெயர்வாழ் மக்கள் ஒன்றியத்தின் நிதி சேகரிப்பு மற்றும் அனைத்து ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக, வெகுவிரைவில் கட்டிடப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு
எமது முன்பள்ளிச் சிறார்களின் எதிர்கால நலனையும், எமது ஊரின் கல்வி வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் சில புதிய மாற்றங்களுடன் முன்பள்ளியைச் சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதற்காக, சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தின் ஊடாக, முன்பள்ளி நிர்வாகத்துடனும் கலந்தாலோசிக்கப்பட்டு, இவ்வேலைத்திட்டம் அனைவரது கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லப்படும்.
எமதூர் உறவுகள் அனைவரினதும் பங்களிப்பும், கருத்து ஆலோசனைகளும் இவ்வேலைத்திட்டத்தில் இருக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
இப்பணியை நல்ல முறையில் ஆரம்பித்து, சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து சுப்பர்மடம் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்புகின்றோம்
நன்றி.

என்றும் உங்களுடன்
சுப்பர்மடம் புலம்பெயர்வாழ் மக்கள் ஒன்றியம்.

23/09/2026

சுப்பர்மடம் எங்கள் ஊரே
Song

வாழ்த்துக்கள்! எமது ஊரைச் சேர்ந்த திரு. மதுரலிங்கம் நந்தரூபன் அவர்கள்,University of East London பல்கலைக்கழகத்தில் MSc In...
19/09/2026

வாழ்த்துக்கள்!

எமது ஊரைச் சேர்ந்த திரு. மதுரலிங்கம் நந்தரூபன் அவர்கள்,
University of East London பல்கலைக்கழகத்தில் MSc International Business Management முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார்.
அவரது இந்தச் சிறப்பான கல்விச் சாதனைக்காக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், அவரது கல்வி மற்றும் தொழில்துறையில் பல உயரங்களைத் தொட்டு வெற்றிபெறவும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துக்கள்!

தகவல் உறவினர்.

தியாக தீபம் திலீபன் நினைவு நாள்
15/09/2026

தியாக தீபம் திலீபன் நினைவு நாள்

15/09/2026

தியாக தீபம் திலீபன் நினைவு நாள்

14/09/2026

Supparmadam Temple

வாழ்த்துக்கள்! எமது ஊரைச் சேர்ந்ததிரு. சுபாஸ் திருச்செல்வன் அவர்களுக்கு,சட்டமாணி (LL.B Honours) பட்டப்படிப்பிற்கு தேர்வு...
14/09/2026

வாழ்த்துக்கள்!

எமது ஊரைச் சேர்ந்த
திரு. சுபாஸ்
திருச்செல்வன் அவர்களுக்கு,
சட்டமாணி (LL.B Honours) பட்டப்படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
The Open University of Sri Lanka பல்கலைக்கழகத்தில்,
LL.B (Honours) Degree
என்ற பட்டப்படிப்பிற்கான Orientation Ceremony-யில் இணைந்துள்ள சுபாஸ் திருச்செல்வம் அவர்கள்,
எதிர்காலத்தில் சட்டத்துறையில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, சிறந்த வெற்றிகளைப் பெற்று, எமது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

தகவல் உறவினர்

Address

London

Opening Hours

Monday 8am - 10pm
Friday 10am - 10pm
Saturday 9pm - 5am

Alerts

Be the first to know and let us send you an email when சுப்பர்மடம் இது எமது கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to சுப்பர்மடம் இது எமது கிராமம்:

Shortcuts

Share