City of Batti

City of Batti பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

26/05/2026

வாழ்வாதார செயற்திட்டம் - 46

"சுயதொழில் முயற்சி மூலம் ஒரு தாயின் பொருளாதார வாழ்வை பலப்படுத்துதல்"

அம்பாறை மாவட்டம், சொறிக்கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் கணவனை இழந்த ஒரு தாய், தனது குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இடியாப்ப வியாபாரத்தை சுயதொழிலாக மேற்கொண்டு வந்தார். எனினும், போதிய உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் அவரது தொழில் முயற்சி பெரும் சவால்களைச் சந்தித்திருந்தது.
இவ்விடயம் தொடர்பாக எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து, இமயம் அமைப்பு தனது 46-வது வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

வழங்கப்பட்ட உதவிகள்:
அக்குடும்பத்தின் இடியாப்ப வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி, நிலையான வருமானத்தை ஈட்டும் பொருட்டு பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன:
இடியாப்ப உரல் மற்றும் பிழியும் உபகரணங்கள்
பெரிய அளவிலான இடியாப்பத் தட்டுகள் (தட்டு அடுக்குகள்)
இடியாப்பம் அவிப்பதற்கான பெரிய அலுமினியப் பானைகள் மற்றும் கரண்டிகள்
இடியாப்பத் தயாரிப்பிற்குத் தேவையான மா மூட்டைகள்

கள ஒருங்கிணைப்பு:
இமயம் அமைப்பின் தன்னார்வல உறுப்பினர் திரு ரஜிதன்

நிதியுதவி: அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் சேகரிக்கப்பட்டு, நிதியுதவியைக் கொண்டு, (லண்டனில்) வாழும் எமது சமூகப்பற்றுள்ள தமிழ் உறவுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தாயகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மற்றும் போரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் இமயம் அமைப்பு தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் மற்றுமொரு வாழ்வாதார உதவித் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த உன்னதப் பணிக்கு நிதியுதவி வழங்கி வரும் அனைத்து நல்வுள்ளங்களுக்கும், களத்தில் நின்று உழைக்கும் எமது தன்னார்வலர்களுக்கும், இமயம் அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நன்றி,
✍️ சமூகவலைத்தள பிரிவு,
இமயம் (Imayam)

26/05/2026

வாழ்வாதார செயற்திட்டம் - 45

"துன்பங்கள் கடந்து, சுயதொழில் மூலம் சுடர்விடும் ஒரு பெண்ணின் நம்பிக்கை"

திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமதி. அனுஜா. தனது தாய், தந்தையரை இழந்ததோடு, கணவரையும் இழந்து தவிக்கும் இவர், கண் பார்வைக் குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய சவாலான சூழ்நிலையிலும், சுயதொழில் மூலம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற அவரின் வாழ்வாதாரக் கோரிக்கையினை ஏற்று,

இமயம் அமைப்பு தனது 45-வது வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
வழங்கப்பட்ட உதவிகள்:
அனுஜா அவர்களின் வாழ்வாதாரத்தை சுயசார்புடையதாக மாற்றும் பொருட்டு, பின்வரும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன:
சுயதொழிலுக்கான கோழி வளர்ப்பு உதவிகள் (கோழிகள் மற்றும் அதற்கான வாழ்வாதார ஏற்பாடுகள்)
நிகழ்வு விபரம்:
நிதியுதவி வழங்கியவர்: திரு. நிஷாந்தன் (செயற்பாட்டு உறுப்பினர், இமயம் அமைப்பு)

கள ஒருங்கிணைப்பு: திரு. ரஜிதன் (தன்னார்வல பணியாளர், இமயம் அமைப்பு)

தாயகத்தில் உள்ள தன்னார்வலர்கள் மூலம், வறுமையினாலும் இயற்கைச் சவால்களினாலும் பாதிக்கப்பட்ட உண்மையான தேவையுடையோரை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், லண்டனில் வாழும் எமது உறவுகளின் மேலான ஒத்துழைப்புடன் இமயம் அமைப்பு இத்தகைய பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அனுஜா அவர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்த உதவி வழங்கிய நல்வுள்ளங்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். ❤️
நன்றி,

✍️ சமூகவலைத்தள பிரிவு,
இமயம் (Imayam)

வாழ்வாதார செயற்திட்டம் – 44"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"  திருமதி ஜெயதா மணிவண்ணன்...
11/04/2026

வாழ்வாதார செயற்திட்டம் – 44

"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"

திருமதி ஜெயதா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாளில் அவரது நிதி பங்களிப்புடன், இமயம் அமைப்பின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் புளியடிச்சேனை எனும் கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஒரு பிள்ளையின் தாயாரான அழகுராணி அவர்களுக்கு சுயதொழிலான கைக்குத்தரிசி விற்பனைக்காக நெல் மூட்டைகள் உதவியாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை இமயம் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினரான திரு. ரஜீதன் அவர்கள் வழங்கி வைத்தார்.

இத்தகைய உதவிகள் மூலம் தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இமயம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

நன்றி.

சமூகவலைத்தள பிரிவு
Imayam

08/04/2026

வாழ்வாதார செயற்திட்டம் – 43

"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"

செல்வி ரூத் கவாஸ்கர் மற்றும் வினோஜன் வாமதேவன் அவர்களின் நிதி பங்களிப்புடன், இமயம் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த க. யோகேஸ்வரி அவர்களுக்கு சுயதொழில் முன்னேற்றத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், இமயம் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் திரு. ரஜீதன் அவர்கள் வழங்கி வைத்தார்.

இத்தகைய உதவிகள் மூலம் தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இமயம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

நன்றி.

சமூகவலைத்தள பிரிவு
Imayam

வாழ்வாதார செயற்திட்டம் – 42"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"திருமதி நிருபமா முகில்வண்...
20/03/2026

வாழ்வாதார செயற்திட்டம் – 42

"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"

திருமதி நிருபமா முகில்வண்ணன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன், இமயம் அமைப்பின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நாவற்காடு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி ஜீவரத்தினம் ஜீவநந்தினி அவர்களுக்கு சுயதொழில் முன்னேற்றத்திற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. ஆர். திரவியராஜ் அவர்களும், கிராம சக்தி அமைப்பின் தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட இமயம் அமைப்பின் உறுப்பினர் திரு. வசந்தன் அவர்களும் இணைந்து இன்று பயனாளிக்கு வழங்கி வைத்தனர்.

இத்தகைய உதவிகள் மூலம் தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இமயம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

நன்றி.

சமூகவலைத்தள பிரிவு
Imayam

இமயம் அமைப்பு: வாழ்வாதார செயற்திட்டம் -    41"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"அம்பாறை...
11/03/2026

இமயம் அமைப்பு: வாழ்வாதார செயற்திட்டம் - 41

"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காயத்திரிபுரம், திருக்கோவில்-4. கிராமத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயின் வாழ்வாதாரக் கோரிக்கையினை ஏற்று, இமயம் அமைப்பு தனது 41வது வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

வழங்கப்பட்ட உதவிகள்:
அக்குடும்பத்தின் சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தேவைக்கேற்றால்போல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன:

நிகழ்வு விபரம்:
• திகதி: கடந்த செவ்வாய்க்கிழமை (24/02/2026)
• ஏற்பாடு: திரு. வசந்தன் (அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இமயம்)
• நிதியுதவி: இமயம் அமைப்பு (பிரித்தானியா வாழ் சமூகப் பற்றுள்ளோரின் பங்களிப்புடன்)
தாயகத்தில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் உண்மையான தேவையுடையோரை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், லண்டனில் வாழும் எமது உறவுகளின் மேலான ஒத்துழைப்புடன் இமயம் அமைப்பு இத்தகைய பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
உதவி வழங்கிய நல்வுள்ளங்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி,
சமூகவலைத்தள பிரிவு
இமயம் (Imayam)

இமயம் அமைப்பு: வாழ்வாதார செயற்திட்டம் - 40"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"அம்பாறை மா...
11/03/2026

இமயம் அமைப்பு: வாழ்வாதார செயற்திட்டம் - 40

"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வினாயகபுரம்-4 கிராமத்தைச் சேர்ந்த, கணவனை இழந்த ஒரு தாயின் வாழ்வாதாரக் கோரிக்கையினை ஏற்று, இமயம் அமைப்பு தனது 40-வது வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

வழங்கப்பட்ட உதவிகள்:

அக்குடும்பத்தின் சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வருவன வழங்கி வைக்கப்பட்டன:
• தையல் உபகரணங்கள்
• தையலுக்குத் தேவையான துணி வகைகள்

நிகழ்வு விபரம்:

• திகதி: கடந்த செவ்வாய்க்கிழமை (24/02/2026)
• ஏற்பாடு: திரு. வசந்தன் (அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இமயம்)
• நிதியுதவி: இமயம் அமைப்பு (பிரித்தானியா வாழ் சமூகப் பற்றுள்ளோரின் பங்களிப்புடன்)
தாயகத்தில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் உண்மையான தேவையுடையோரை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், லண்டனில் வாழும் எமது உறவுகளின் மேலான ஒத்துழைப்புடன் இமயம் அமைப்பு இத்தகைய பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
உதவி வழங்கிய நல்வுள்ளங்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி,
சமூகவலைத்தள பிரிவு
இமயம் (Imayam)

13/02/2026

Address

Leicester Square
Leicester
LE41AL

Website

Alerts

Be the first to know and let us send you an email when City of Batti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to City of Batti:

Shortcuts

Share