08/08/2026
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன் ...
கண்ணதாசன்
ஜெர்மனி கால்ஸ்ரூக நகரில் வசிப்பவரும் எமது மன்ற அங்கத்தவர்களுமான ஸ்ரீதாஸ் தயாளினி குடும்பத்தினர் தாயகம் சென்றிருந்த போது 15மூதாதையர்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துதருமாறு எம்மிடம் கேட்டிருந்தனர்.அதற்கேற்ப எம்மால் முத்தையன்கட்டு,உருத்திரபுரம்,பரந்தன் ஆகியஇடங்களில் இருந்து தெரிவு செய்துகொடுக்கப் பட் ட 15 மூதாதையர்களுக்கு 08.08.2026 சனிக்கிழமையன்று ஒவ்வொருவருக்கும் தலா 5756ரூபா பெறுமதியிலான உலருணவுப்பொதிகளை ஸ்ரீதாஸ் தயாளினி குடும்பத்தினர் வழங்கியதுடன், வந்த மூதாதையர்களுக்கு மதிய உணவினையும் வழங்கியிருந்தனர். தூர இடமான முத்தையன்கட்டில் இருந்தது வந்தவர்களுக்கான வாகன செலவினையும் கொடுத்துதவியிருந்தனர்.ஸ்ரீதாஸ் தயாளினி குடும்பத்தினர்தாயகம் செல்லும்போதெல்லாம் எமது மன்றத்தினுடாக தாயகஉறவுகளுக்கு எதாவது சிறு உதவியாவது செய்துவருவது வழமை அவர்களின் இன் நற்செயலுக்காக எமது மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.