Global Tamil Movement

Global Tamil Movement உலகத் தமிழர்களின் உரிமைகளுக்காக வினைத்திறனுடன் போராடுவதே எமது உயரிய நோக்கமாகும். Raise Tamils Voic

அனைவருக்கும் வணக்கம்!உலகத் தமிழர் இயக்கம் எனும்  எமது அமைப்பின் பெயரையும் இலட்சினையையும் பயன்படுத்தி 12/02/2024 அன்று பொ...
19/10/2025

அனைவருக்கும் வணக்கம்!

உலகத் தமிழர் இயக்கம் எனும் எமது அமைப்பின் பெயரையும் இலட்சினையையும் பயன்படுத்தி 12/02/2024 அன்று பொன். செல்வன் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வட்சப் இலக்கத்தினால் உருவாக்கப்பட்ட இக் குழுவிற்கும் உலகத் தமிழர் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் தெரியப்படுத்துகிறோம்.

மேலும் அக்குழுவில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் உலகத் தமிழர் இயக்கம் பொறுப்பாகாது. தமது சுய இலாபங்களுக்கு எமது அமைப்பின் இலட்சினையை பெயரையும் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்தும் அக்குழு அப்பெயரில் செயற்படுமாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான
உலகத் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த உறவுகளினால் அப் போலி குழு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே இந்த தகவலை தெரியப்படுத்துகிறோம்.

நன்றி

நிர்வாகம்
உலகத் தமிழர் இயக்கம்

உலகத் தமிழர் அனைவருக்கும் வணக்கம்!உலகத் தமிழர் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கும் உலகத...
12/10/2025

உலகத் தமிழர் அனைவருக்கும் வணக்கம்!

உலகத் தமிழர் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கும் உலகத் தமிழர் இயக்கத்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இது நிசா பீரிஸ் என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த நபரின் உலகத் தமிழர் இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் அவரை அமைப்பில் இருந்து வெளியேற்றியும் 17.08.2024 அன்று எம்மால் அறிக்கை வெளியிடப்பட்டது. ஒரு வருட காலம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது உலகத் தமிழர் இயக்கத்தின் பெயரை குறித்த நபர் பயன்படுத்தியுள்ளார். இதனை வன்மையாக கண்டிப்பதோடு உலகத் தமிழர் இயக்கத்தின் நிர்வாகத்தின் அனுமதி இன்றி இனிவரும் காலங்களில் அமைப்பின் பெயர் பயன்படுத்தப்படுமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்துவிட்டு யாரும் தமித்தேசிய முகமூடி போர்த்தி முதலைக் கண்ணீர் வடித்து பதிவுகளை போட்டு யாரும் தம்மை யோக்கியவான்களாக காட்டி நீண்ட நாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது.

தமது வெளிப்பாட்டுக்காகவும் தனிப்பட்ட வியாபாரத்திற்காகவும் தமிழர்களின் நீதிக்கான செயற்பாடுகளை பயன்படுத்துபவர்கள் உலகத் தமிழர் இயக்கத்தின் பெயரை பயன்படுத்துவதை நாம் என்றும் அனுமதிக்கப் போவதில்லை.

நன்றி

நிர்வாகம்
உலகத் தமிழர் இயக்கம்

14/07/2025

என்னை முடக்குவதன் ஊடாக தமிழர்களின் நீதிக்கான செயற்பாடுகளை முடக்குவதற்கு பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் ?

சதிவலையில் இருந்து மீண்டு வந்தார் பொஸ்கோ!மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான ...
04/07/2025

சதிவலையில் இருந்து மீண்டு வந்தார் பொஸ்கோ!

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களின் சட்டத்துக்கு முரணான கைதும் தடுத்து வைப்பும் அவரின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக முடக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதை நாம் முன்னரே உலகத் தமிழர்களுக்கு தெரியப்பட்டுத்தியிருந்தோம். அதனை பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் இன்று விடுதலையானதும் உறுதிப்படுத்தினார்.

பொஸ்கோ மரியதாசின் கைதின் பின்னணியில் வல்லாதிக்க சக்திகள் மற்றும் பேரினவாத சிறீலங்கா அரசு மாத்திரமன்றி அவர்களின் அடிவருடிகளின் காட்டிக்கொடுப்புகளும் சூழ்ச்சிகளும் காரணம் என்பதையும் நாம் இந்த இடத்தில் உலகத் தமிழர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
குறிப்பாக பிரித்தானியாவை தளமாக கொண்டுள்ள மேற்குலக அடிவருடி அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரின் உண்மைக்கு புறம்பான முறைப்பாடே பிரதான காரணமாக அமைந்தது. குறித்த சூழ்ச்சி தொடர்பான முழு விபரங்களையும் பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் விரைவில் பொதுவெளியில் வெளிப்படுத்துவார். சட்டரீதியான சில நகர்வுகளுக்காகவே நாமும் இவ்வளவு காலம் பொறுமையாக காத்திருந்தோம். இனிவரும் நாட்களில் அனைத்து விபர்ங்களும் எம்மால் வெளிப்படுத்தப்படும்.

இந்த சூழலில் பொஸ்கோ மரியதாசின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் செயற்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி
உலகத் தமிழர் இயக்கம்

Adresse

Route De Peney 4
Vernier
1214

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Global Tamil Movement erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen