புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா

  • Home
  • Canada
  • Toronto, ON
  • புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா
Directions Website Contact the organization

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா கனடா வாழ் அனைத்து புங்குடுதீவு உறவுகளை இவ்முகநூல் பகுதியில் இணையவும்

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் எங்கள் மண்ணின் மைந்தனுமாகிய அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்களின்...
10/18/2024

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் எங்கள் மண்ணின் மைந்தனுமாகிய அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்களின் மறைவு தாங்கொணாத் துயரளிக்கின்றது. அன்னார், முன்னாள் இலங்கை புகையிரத சேவை அதிகாரியும் டொரண்டொ போக்குவரத்துச் சபை முன்னாள் உத்தியோகத்தரும் ஆவார். இவர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று அரியபல சேவைகளை ஆற்றியவர். மண்ணின் மீதும் தாயக மக்களின் மீதும் மிகுந்த பற்றுடன் சேவை செய்த இப்பெருமகனாருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா  மாசி 18, 2024கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 20...
02/25/2024

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா

மாசி 18, 2024

கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 2024 - 2025 ஆண்டிற்கான புதிய நிர்வாகசபைத் தெரிவும் மாசி மாதம் 18ம் நாள், 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. புங்குடுதீவு மண்ணை நோக்கிய சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நன்னீர் தேக்கத்திற்கான கள்ளியாறு திட்டம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகமளித்த இக்கூட்டத்தில் வர்த்தகரும் சமூக‌ சேவையாளருமான உதயராஜா குணராஜா அவர்கள் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புகைப்படங்களை பார்வையிட: https://pungudutivuworld.com/gallery-detail.php?id=44 =nature&slide=0

தலைவர்: திரு. உதயராஜா குணராஜா
செயலாளர்: திரு. கயிலநாதன் கோபாலபிள்ளை
பொருளாளர்: திருமதி. கவிதா செந்தில்
உபதலைவர்: திரு. தமிழ்செல்வன் குலேந்திரன்
உபசெயலாளர்: திருமதி. சந்திரா அன்பழகன்

நிர்வாகசபையினர்:
திரு. சந்திரமோகன் செல்வரட்ணம்
திருமதி. கேசவராணி சிவராஜா
திருமதி. செல்வி குமாரன்
திரு. தீபன் கோபாலபிள்ளை
திரு. நித்தியானந்தன் சுப்பிரமணியம்
திரு. பகீரதன் நாகேசு
திரு. தீபன் குணபாலசிங்கம்
திரு. குகனேசன் கணபதிப்பிள்ளை
திரு. சத்தியசீலன் கதிர்காமு
திரு. பிரபாகர் சண்முகநாதன்
திரு. கிருபானந்தன் ஆறுமுகம்
திரு. ஸ்ரீநிகேதன் பாலசிங்கம்
திரு. சோம சச்சிதானந்தன்
திரு. பகீரதன் அரியபுத்திரன்
திரு. வில்வ மோகன்
திரு. ஐங்கரன் கதிர்காமநாதன்

போசகர்கள்:
சிவசிறி பஞ்சாட்சர கிருஸ்ணராஜா குருக்கள்
திரு. மதியழகன் கந்தையா
திரு. நடா சந்திரகுமார்
திரு. உமாசங்கர் கனகரட்ணம்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நன்றி,
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
25.02.2024

வருடாந்த‌ பொதுக் கூட்டம் 2024!

அனைவருக்கும் அன்பு வணக்கம்,குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும்.நாளைக் காலை நடைபெறவுள்ள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம...
02/18/2024

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும்.

நாளைக் காலை நடைபெறவுள்ள சங்கத்தின் வருடாந்த
பொதுக்கூட்டம் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும்.

அனைவரும் வருகை தந்து சங்கத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!
நன்றி,

அன்புடையீர் அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றோம்.
02/09/2024

அன்புடையீர் அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றோம்.

என்றென்றும் இருப்பாய் எம் மனங்களில்…
01/31/2024

என்றென்றும் இருப்பாய் எம் மனங்களில்…

என்றென்றும் இருப்பாய் எம் மனங்களில்….
01/20/2024

என்றென்றும் இருப்பாய் எம் மனங்களில்….

நிர்வாக சபை பொதுக் கூட்டம் 2024வணக்கம் அன்பு உறவுகளே!காலம்: மாசி 18, 2024             ஞாயிறு காலை 9:30இடம்: பின்னர் அறிய...
01/14/2024

நிர்வாக சபை பொதுக் கூட்டம் 2024

வணக்கம் அன்பு உறவுகளே!

காலம்: மாசி 18, 2024
ஞாயிறு காலை 9:30

இடம்: பின்னர் அறியத்தரப்படும்.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடாவின் பொதுக்கூட்டம் வருகின்ற மாசி மாதம் 18ம் நாள் காலை 9:30 மணிக்கு ஸ்காபுரோவில் நடைபெறவுள்ளது எனபதனை அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.

அனைவரையும் தவறாது சமூகமளித்து தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

2024/2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் பொதுமக்களால் தெரிவு செய்யப்படுதல் மற்றும் நடப்பாண்டு நிர்வாகத்தின் வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் மன்றில் முன்வைப்பதற்குமான பொதுக்கூட்டமாகும்.

நன்றி,
புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் - கனடா
தை 14, 2024

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தும் மனமார்ந்த நன்றியும்,மாபெரும் வெற்றியளித்த "பூவரசம்பொழுது கலைவிழா 2023"நேர்த்தியான ஒரு...
01/01/2024

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தும் மனமார்ந்த நன்றியும்,

மாபெரும் வெற்றியளித்த "பூவரசம்பொழுது கலைவிழா 2023"

நேர்த்தியான ஒருங்கிணைப்பு, மண்டபம் நிறைந்த மக்கள், தரமான தொகுப்பாளர், நாட்டிய ஆசிரியைகளின் சிறப்பான நடனங்கள், மக்கள் கவனத்தை ஈர்ந்த நாடகம், நீதன் குழுவினரின் வாத்திய இசை, சிறுவர்களின் கண்கவர் ஜனரஞ்சக நடனங்கள் என விழா களை கட்டியது.

5:30 மணிக்கு விழாவை ஆரம்பித்து வெற்றி விழாவிற்கான‌ விதை இடப்பட்டது. மங்கல விளக்கினை ஏற்றி, கீதங்கள் பாடி, வரவேற்புரை, ஆசியுரை வழங்கி மிக வேகமாக நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

ரொரண்ரோ மக்களின் அதிக வரவேற்பினை பெற்றிருக்கும் ஆசிரியை வனிதா குகேந்திரனின் மாணவர்களின் வரவேற்பு நடனமும் எழுந்துவாடா பாடலிற்காக‌ அவர் வழங்கிய நடனமும் ஆரம்ப நிகழ்வினை சிறப்புறச் செய்தது. தாயக நினைவுகளை தாங்கி வந்த, ஆசிரியை பிரவீனா தீபனின் மாணவர்கள் வழங்கிய சிறப்பான நடனம் மக்கள் மனதில் நிலைத்த‌து. தொடர்ந்து சிவனை மையமாக வைத்து அழகிய நடனத்தை ஆசிரியை மலர்விழி வரதராஜனின் மாணவர்கள் வழங்கி நிகழ்வின் வீரியத்தை தக்க வைத்துக்கொண்டார்கள். பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆசிரியை கௌரி பாபுவின் மாணவர்கள் வழங்கிய நடனம் நிகழ்வினை உச்சஸ்தானிக்கு கொண்டு சென்றது.

கருத்து மிகுந்த பிரதம விருந்தினர் உரை, கண்ணியமான தலைவர் உரை, மதிப்பளித்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து பூவரசம் பொழுதின் அடையாளமாக "பூவரசன்" நாடகம் மேடையேறியது. நீண்ட‌ நாடகப் பாரம்பரியம் மிகுந்த புங்குடுதீவு கலைஞர்களின் தொடர்ச்சியாக புங்குடுதீவு மைந்தனால் எழுதி மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் கனடாவில் வாழுகின்ற புங்குடுதீவு மக்கள் அனைவரும் புங்குடுதீவை கட்டியெழுப்ப முன்வர‌வேண்டும் என அழகான கருத்தை விதைத்துச் சென்றது. இந்த நாடகத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த தரன் வில்வரத்தினம் அவர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். பின்னர் பூவரசம் பொழுது மலர் வெளியீடு செய்யப்பட்டது. சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டனர். இடைவேளை வரை நாடகமும் நாட்டியமுமாக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இடைவேளைக்குப் பின்னர், "Rhythm of Rishi 2023" கலைஞர்கள் நவநீதன் மற்றும் ரிஷி அவர்களின் வாத்திய இசைக்கச்சேரி மிகவும் சிறப்பாக ஆரம்பித்தது, தொடர்ந்து சஜீனா சுரேன் மற்றும் ஆரூஸ் சுரேன் சிறப்பாக சினிமாப் பாடலிற்கான நடனத்தை வழங்கி நிகழ்வினை அழகுறச் செய்தார்கள். அதனைத்தொடர்ந்து AJ style cine dance குழுவினர் அழகிய இசை நடனத்தை வழங்கினார்கள். விளம்பர அனுசரணையாளர்களிற்கு மதிப்பளித்தல் நிகழ்வு நடைபெற்றது. மீண்டும் தொடர்ந்து நடைபெற்ற‌ நீதன், ரிஷி இசைக்குழுவின் வாத்தியக் கச்சேரி எல்லோரின் பாரட்டையும் பெற்றுக்கொண்டது.

ஐந்து ஆண்டு கால இடைவெளியின் பின்னர் நடைபெற்ற "பூவரசம் பொழுது 2023" நிகழ்வு எல்லோராலும் வரவேற்கப்பட்டு அனைவரினது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

இவ்விழா சிறப்புற ஆதரவு வழங்கிய வர்த்தக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிகழ்வுகளை வழங்கிய ஆசிரியைகள், மாணவர்கள், கலைஞர்கள் நன்றி. ஊடக நண்பர்கள், புகைப்படக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. விழா சிறப்புற உழைத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

வருகை தந்து விழாவினைச் சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்.

12/30/2023

Address

3500 Mcnicoll Avenue
Toronto, ON
M1V5C7

Alerts

Be the first to know and let us send you an email when புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா:

Shortcuts

Share