E-Kalvi

E-Kalvi e-Kalvi Charity Fund Inc. (Jaffna University Graduates association-Victoria, Australia). Charity to promote education in the war affected regions of Sri Lanka

உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களுக்கான இலவச வீடியோ வகுப்புகள் =============================================...
17/10/2022

உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களுக்கான இலவச வீடியோ வகுப்புகள்
=============================================================================
(வீடியோ இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன - புதிய link கள் தொடர்ந்து இந்த post இல் பதிவுசெய்துகொண்டிருக்கப்படும்)
வீடியோ link களுக்கு செல்வதற்கு முதல், இந்த மாதிரியான கல்வி வளங்கள் அனைத்து தரப்பினருடனும் பகிரப்படவேண்டியதன் அவசியத்திற்கான ஒரு சிறிய விளக்கம். இதை வாசித்தபின் link களுக்கு செல்லவும்,
கடந்த 2019ம் ஆண்டு அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பினரின் பேராசிரியர் துரைராஜா ஞாபகார்த்த புலமைப்பரிசிலை பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். அப்போது COVID-19 காலம் என்பதால் online மூலமாக சகல பீட மாணவர்களிடமும் இருந்து 10 புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. பொறியியலாளர் அமைப்பினர் வழங்குவதால் தனியாக பேராதனை பொறியியல் பீடத்தின் 5 மாணவர்களையும் மீதி 5 மாணவர்களை ஏனைய அனைத்து பீடங்களில் இருந்தும் மிகவும் வறிய மாணவர்கள் எனும் அடிப்படையில் தெரிவு செய்ய முடிவு செய்தோம். விண்ணப்பங்களை ஆராய்ந்து மாணவர்களை தெரிவுசெய்ய தொடங்கும்போது ஆச்சரியம். மற்ற பீடங்களை ஒப்பிடும்போது பொறியியற் பீட மாணவர்கள் ஓரளவு வசதியானவர்களாகவே எங்களுக்கு வந்த விண்ணப்ப தரவுகள் தந்தன. நாங்கள் வேறு மாதிரி நினைத்திருந்தோம். எனவே இந்த ஆச்சரியத்தின் காரணத்தை தெரிந்துகொள்ள பல மாணவர்களிடம் விசாரித்தோம். ஒரு மிகப்பெரிய மற்றும் கவலைக்கிடமான உண்மை வெளிவந்தது. காரணம் என்னவென்றால் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் படிக்க மிகவும் வசதியானவர்களாலே மட்டும் முடிகிறதாம். வறிய மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான பணம் இல்லையாம். ஏனெனில் தனிப்பட்ட வகுப்புகள் (Private Tuition) செல்வதற்கு மாணவர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறதாம். பாடசாலை பாட ஆசிரியர்கள் தங்களிடம்தாம் தனியார் வகுப்புகளுக்கும் வரவேண்டும் என மாணவர்களையும் பெற்றோர்களையும் கட்டாயப்படுத்துதல், மனசாட்சி அற்ற விதத்தில் மணித்தியாலத்திற்கான கட்டணங்களை (Tuition fees) அறவிடுவது, தன்னிடம் தனியார் வகுப்புகளுக்கு வராத மாணவர்களை பாடசாலையில் பழிவாங்குதல், இதனால் ஒரே பாடத்திற்கு ஒன்றிட்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியம் போன்றன காரணமாக சொல்லப்பட்டது. இலங்கையில் இலவச கல்வி இப்போது எவ்வளவு பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது என உணரக்கூடியதாக இருந்தது. பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாத, மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் என்று கற்றுக்கொடுக்கும் பல ஆசிரியர்களும் பிறதேசங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் பாடசாலை கல்வி இப்போது சில ஆசிரியர்களின் பெரும் வியாபாரமாக ஆகிவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று நான் வாசித்த Rivanisha Sundharam அவர்களின் பதிவும் இதைத்தான் சொல்கிறது (Click Here - https://tinyurl.com/Rivanisha-FB-Post).
ஆனாலும் காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. கல்விகற்பதற்கான வளங்கள் இலவசமாக மாணவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது. மாணவர்கள் உண்மையை உணர்ந்து முயற்சிகள் செய்தால் பெரும் பணம் கொடுத்து கல்வியை பெறுவதை தவிர்த்து கொள்ளலாம். மாணவர்களிடம் அதிக கொள்ளையிடும் ஆசிரியர்களை பாடசாலை அதிபர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். வறிய மாணவர்களும் தாங்கள் விருப்பமானதை கற்றிட வழிவகை செய்திட வேண்டும். பல்வேறு கனவுகளுடன் கணிதம், விஞ்ஞானம் கற்க வரும் மாணவர்களின் ஆசைகளை ஆசிரியர்கள் களைந்திட அனுமதிக்ககூடாது (நான் இங்கு குறிப்பிடுவது எல்லா ஆசிரியர்களையும் அல்ல). இந்த விடயங்களில் பெற்றோரும் மிக கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.
மாணவர்கள் இலவசமாக உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் பாடங்களை கற்க நிறைய இணைப்புகளை இத்துடன் தந்திருக்கிறேன். இவை வடமாகாண கல்வி திணைக்களம், யாழ் இந்து கல்லூரி, குருகுலம் by Channel NIE, e -Tech Lab எனும் தளங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பட்டியல். 100 ரூபாவிற்கு dialog தரும் unlimited youtube package (https://www.dialog.lk/unlimited-youtube-for-all-dialog...) ஒன்றின் மூலம் 1000 இற்கும் அதிகமான பாட அலகுகளை கீழே தரப்பட்டுள்ள linkகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த youtube பக்கங்கள் தொடர்ந்து புதிய பாட அலகுகளை உள்ளடக்கி கொண்டிருக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இதனை share செய்துகொள்ளுங்கள். இது தவிர இன்னும் நிறைய இணைய வளங்கள் இருக்கும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் (commentஇல்) பதிவு செய்யுங்கள்.
நன்றி
கலாநிதி S. K. நவரட்ணராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்
பொறியியற் பீடம்
பேராதனை பல்கலைக்கழகம்
1) இணைந்த கணிதம் - Combined Maths (250+ Videos)
https://www.youtube.com/watch?v=2I9t3kKWgCk...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/.../UC2e0XCmPMHdo6Y9.../playlists...
https://www.youtube.com/c/RtnAHarishanSir
2) பெளதிகவியல் – Physics (356+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
3) இரசாயனவியல்- Chemistry (297+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
4) உயிரியல் – Biology (250+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
5) பொறியியல் தொழினுட்பவியல் - Engineering Technology (102+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
6) உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் - Biosystems Technology (122+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
7) விவசாய விஞ்ஞானம் - Agricultural Science (89+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
😎 தொழினுட்பவியலுக்கானவிஞ்ஞானம் - Science for Technology (80+ Videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
9) தகவலும் தொடர்பாடலும் தொழினுட்பவியலும - ICT (62+ videos)
https://www.youtube.com/playlist...
https://www.youtube.com/playlist...
10) E-Tech Practicals (16+ Videos)
https://www.youtube.com/playlist...
11) Jaffna Hindu College Online Classes
Online Class - 2020 Batch (15+ Videos)
https://www.youtube.com/playlist...
Online Class - 2021 Batch (38+ Videos)
https://www.youtube.com/playlist...
Online Class - 2022 Batch (30+ Videos)
https://www.youtube.com/playlist...
12) நூலக நிறுவனத்தின் ஆவணகம் - பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள்
http://aavanaham.org/open-educational-resources
13) e-Kalvi by Jaffna University Graduates Association-Victoria Inc. (JUGA-Vic Inc.)
https://www.ekalvi.org/e-lessons/
14) Siraguhal சிறகுகள்
https://www.youtube.com/.../UCGBH-NpzqX0xU8O.../playlists
15) A/L Chemistry by Mr. Fahumudeen
https://www.youtube.com/.../UCV1xrZE9wNeJZZlH-1cduXw/videos
16) Science orbit for Subject Notes, Model & Past Exam Papers, etc.
http://www.scienceorbit.lk
17) A/L Physics by Physics Podiyan
https://www.youtube.com/c/physicspodiyan/playlists...
Please make use of these resources.
Thank you.
Dr. S.K. Navaratnarajah, PhD
Senior Lecturer
Faculty of Engineering
University of Peradeniya

e-கல்வி திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்திவரும் சொறிக்கல்முனை Holy Cross மகா வித்தியாலத்தின் அதிபர் அருட்சகோதரி M ச...
06/10/2022

e-கல்வி திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்திவரும் சொறிக்கல்முனை Holy Cross மகா வித்தியாலத்தின் அதிபர் அருட்சகோதரி M சிறியபுஷ்பம் அவர்களுக்கு சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருது கிடைத்துள்ளது. அவருக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அதிபர் இது பற்றி எமக்கு அனுப்பிய தகவல் கீழே
The Award is given for the uninterrupted education activities during COVID-19 period when the schools were closed. Considerable credit goes to e kalvi for the immense support to conduct online education.God bless every one who supported the school.
Rev.Sr.Sriyapuspam
Principal

எந்தப் பாடசாலையை தந்தாலும் என்னால் சிறந்தவொரு பாடசாலையாக ஆக்கி காட்ட முடியும் என்று நிரூபித்தவர். எண்ணிமக்கல்வியின் முன்...
06/10/2022

எந்தப் பாடசாலையை தந்தாலும் என்னால் சிறந்தவொரு பாடசாலையாக ஆக்கி காட்ட முடியும் என்று நிரூபித்தவர். எண்ணிமக்கல்வியின் முன்னோடிகளில் ஒருவர். வாழ்த்துகள் நல்லையா அமிர்தநாதன் சேர்.

No one works as hard as a teacher yet teaching is one of the most under-appreciated jobs in the world. Happy teachers' d...
06/10/2022

No one works as hard as a teacher yet teaching is one of the most under-appreciated jobs in the world. Happy teachers' day 2022!

Google வரைபடத்திலும் கூட அறியமுடியாத ஒரு பெரும் காட்டுப்பகுதியில் தனித்து விடப்பட்ட இப் பாடசாலை e-கல்வி தொண்டு நிதியத்தா...
15/09/2022

Google வரைபடத்திலும் கூட அறியமுடியாத ஒரு பெரும் காட்டுப்பகுதியில் தனித்து விடப்பட்ட இப் பாடசாலை e-கல்வி தொண்டு நிதியத்தால் இன்று எல்லோரையும் ஒருகணம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவ் வரலாற்று சாதனையை படைத்த வீரங்கனைகளுக்கும், தன்னலமற்ற மதிப்புமிக்க அதிபர் திரு ஜீவநேசன், மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எமது மனம் நிறைந்த பராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
உண்மையில் இந்த இடத்திற்கு வருவதற்கு e-கல்வி ஆசிரியர் Dr அனுஷா மேடம் அவர்களும் அவரது துணைவரான சிறி சேர் அவர்களது நிதி அனுசரணையே ஒரு உந்து சக்தியாக அமைந்தது.
இந்நிலையத்தை அடையாளம் கண்டு அங்கு e-கல்வி நிலையத்தை ஆரம்பிக்க முழு மூச்சுடன் உழைத்த முன்னாள் e-கல்வி உப தலைவர் ரூபன் அவர்களுக்கும் நன்றிகள்.
அவர்கள் பற்றிய செய்திஇணைப்பு கீழே.
https://tamilwin.com/article/tamil-area-school-everyone-look-back-in-history-1663185067

13/09/2022
12 committee members including the president, vice president, Secretary, Assistant Secretary, and project coordinator ar...
14/08/2022

12 committee members including the president, vice president, Secretary, Assistant Secretary, and project coordinator are leaving the e-Kalvi Management Committee!
Mr T Dharmakulasingam will head the charity for the following year. Mr V Elango will be the Secretary.

Dear e-Kalvi Charity Donors, Well-wishers, friends and Members,please find the annual report written beautifully by the ...
13/08/2022

Dear e-Kalvi Charity Donors, Well-wishers, friends and Members,
please find the annual report written beautifully by the e-Kalvi project coordinator Dr N Athavan at the following link.
https://www.ekalvi.org/reports/AnnualReport2022_Final.pdf

Dear donors, wellwishers, friends and members,Please find our latest Newsletter at the following Link. Without you, our ...
13/08/2022

Dear donors, wellwishers, friends and members,
Please find our latest Newsletter at the following Link. Without you, our achievements would not have been possible.
Thank you all for your generous support.
Our previous Newsletters can be found on our website.
https://www.ekalvi.org/reports/eKalvi_Newsletter_2_1.pdf

🔴கிழக்கு மாகாணத்தில் உள்ள வாகரை பிரதேசத்தில் இயங்கும் ஒரு பாடசாலையில் இருந்து ஒரு மடல் 🔴எமது பாடசாலை மாணவர்களுக்கு Zoom ...
09/08/2022

🔴கிழக்கு மாகாணத்தில் உள்ள வாகரை பிரதேசத்தில் இயங்கும் ஒரு பாடசாலையில் இருந்து ஒரு மடல்

🔴எமது பாடசாலை மாணவர்களுக்கு Zoom மூலம் கணித பாடத்தினை தொடர்ச்சியா கற்பித்துக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய அனுஷா மேடம் அவர்கள் எமது பாடசாலைக்கு குடும்பத்தினருடன் வருகை தந்திருந்த வேளை அவர்களது துணைவரான சிறி சேர் அவர்கள் மாணவர்ளை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்னும் நோக்கோடு உதை பந்து அடங்கிய விளையாட்டு உபகரணங்களை எமது மாணவர்களுக்கு வழங்கியிருந்தார் அதனைப்பயன்படுத்தி பயிற்சியினை மேற்கொண்டு பெண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் வலயமட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று மாகாணமட்டதிற்கு தெரிவாகி இருந்தனர்.ஆனால் பாதணி இன்றியே விளையாடினார்கள். இதனை அவதானித்த அனுஷா மேடம் அவர்களது துணைவர் சிறி சேரும் இணைந்து எமது மாணவர்களுக்கான பாதணியினை தற்போது தந்து உதவியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் எமது மாணவர்கள் சார்பிலும் பாடசாலை சமூகம் சார்பிலும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
🔴மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க.பாடசாலை

Address

Monash, VIC

Alerts

Be the first to know and let us send you an email when E-Kalvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to E-Kalvi:

Share