07/03/2026
2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது.
2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள்.
ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது.
எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரசு அன்று கொள்ளும், தெய்வம் நின்று கொள்ளும். நாங்களும் இப்படித்தான் கதறினோம்.
மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல.
சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது.
எங்கள் மாவீரர்செல்வங்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது...