05/05/2015
தமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவித்தல்!
********************************************************************
சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக உலமாக்கள், உமராக்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 02-05-2015 அன்று காலை 10 மணியளவில் புரசைவாக்கம் ஜும்ஆ பள்ளிவாசலில் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி தர்வேஷ் ரஷாதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. TNTJ அமைப்பினர் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களையும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தையும் எதிரிகள் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சீர் குலைத்து கொண்டிருப்பதால் இவர்கள் "முஸ்லிம்களே அல்ல" என நேரடியாக தெளிவாக முடிவெடுத்து இஸ்லாமிய சமுதாயத்திற்கு அறிவிக்குமாறு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையை இக்கூட்டம் ஏகமனதாக கேட்டுக் கொள்கிறது.
2. இந்த அமைப்பினருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருளாதார உதவிகள் செய்யக் கூடாதென இஸ்லாமிய சமுதாயத்தை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
3. மேலும் இவ்வமைப்பினருடன் திருமண உறவுகளை யாரும் வைத்துக் கொள்ள கூடாது என இஸ்லாமிய சமுதாயத்தை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
4. மேலும் இவ்வமைப்பினருடன் எத்தகைய ஒட்டு உறவுகளையும் இஸ்லாமிய சமுதாயம் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5. மஸ்ஜிதின் நிர்வாகிகள் இவர்களுக்கு திருமணம் போன்றவைகளுக்கு NOC கொடுக்க வேண்டாம் எனவும் மேலும் நமது கப்ருஸ்தானில் அடக்கம் செய்வதற்கு இவர்கள் அருகதையற்றவர்கள் எனவும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
6. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறிப்பாக இளைஞர்களையும், பெண்களையும் இவர்களின் தீங்கிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உலமாக்களும், உமராக்களும் இணைந்து செயல்படுத்த வேண்டுமெனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
ஜமாத்துல் உலமா பேரவை
சென்னை மாவட்டம்.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்