14/06/2023
கடலூர் நெல்லிக்குப்பம் பிரதான சாலையிலிருந்து VST motors பின்புறம் உள்ள ராம் நகரம் சுப்புலட்ஷ்மி நகர், அருணாச்சலம் நகர், ரெயின்போ நகர், பழனியாண்டவர் சிட்டி, மீராகிருஷ்ணன் நகர் பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் ஒரே முக்கிய சாலை மிகக் குறுகலாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துடன் நகருக்கு வர வேண்டியுள்ளது.
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் இந்த சாலை வழியாக வரமுடியாததால் தீபன் நகர் வழியாக பல நகர்களை கடந்து வரவேண்டியுள்ளது.
இந்த நகர்களின் தெற்கே கெடிலம் ஆறு உள்ளதால் மழை காலங்களில் மக்கள் நகருக்கு வெளியே வர இந்த சாலையை மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
கெடிலம் ஆற்றின் கரைகள் பலவீனமாக உள்ளதால் வடமேற்கு பருவ மழையின் போது வெள்ளம் வரும் அபாயம் உள்ளது. அவசர காலங்களில் மக்கள் வெளியேறவும், பேரிடர் மீட்பு குழு உள்ளே நுழையவும் முடியாத அளவுக்கு உள்ள இந்த குறுகலான சாலையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சரி செய்து
15 அடி பாதையில் 10 அடி ஆக்கிரமிப்பு.....இந்த ஒற்றை கோரிகையோடு தான் இன்று மாவட்ட ஆட்சியரை பார்க்க சென்றோம்.... இரண்டு மணி நேரம் காத்திருந்து தான் அவரை பார்க்க முடிந்தது...
மனுவை வாங்கிக் கொண்டார் ...ஆனால் பேச முடியவில்லை.....
பல நகர்களில் இருந்து கோரிக்கைகள் வந்திருந்தன.... பேருந்து நிலையமும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளும் பேசப்பட்டது....
மீண்டும் முயற்சி எடுக்க வேண்டும்....
நம் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்....