Connecticut Tamil Uravugal

Connecticut Tamil Uravugal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Connecticut Tamil Uravugal, Community Service, Hartford, CT.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!💐💐– கனெக்டிகட் தமிழ் உறவுகள் (CTTU)�🌐 www.MyCTTU.org #தந்தையர்தினம்  #தந்தை    #தமிழ்உற...
06/21/2026

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!💐💐
– கனெக்டிகட் தமிழ் உறவுகள் (CTTU)�🌐 www.MyCTTU.org

#தந்தையர்தினம் #தந்தை #தமிழ்உறவுகள் 💙👨‍👧‍👦🌹

06/10/2026
06/08/2026

பேரவையின் புதிய நிர்வாகக் குழுவிற்கு (2026-2028) மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்பிற்கினிய தமிழுறவுகளுக்கு வணக்கம்,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2026–2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் !

இந்தப் புதிய தலைமைக் குழு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2026-28) தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, இளையோர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பான முன்னேற்றத்தை உருவாக்கும் என நம்புகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

🔹 எழிலன் ராமராஜன் – தலைவர்
🔹 கிங்ஸ்லி சாமுவேல் – துணைத் தலைவர்
🔹 வள்ளிக்கண்ணன் மருதப்பன் – செயலாளர்
🔹 பிரவீணா வரதராஜன் – இணைச் செயலாளர்
🔹 ஜான் பிரிட்டோ – பொருளாளர்
🔹 ஜான்சிராணி பிரபாகரன் – உதவிப் பொருளாளர்
🔹 சுபா சுந்தரலிங்கம் – இயக்குநர்
🔹 கதிர்வேல் குமாரராஜா – இயக்குநர்
🔹 ராஜேஷ் ஜெசுராஜ் – இயக்குநர்
🔹 சுபா காரைக்குடி – இயக்குநர்
🔹 அத்விகா சச்சிதானந்தன் – இளையோர் பிரதிநிதி
🔹 குகன் சிவகுமார் – இளையோர் பிரதிநிதி

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் சமூகத்திற்காகச் சேவை செய்ய முன்வந்த உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் பாராட்டத்தக்கது.

மேலும், தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட தேர்தல் அதிகாரிகள் திரு. முருகானந்தம் ராமச்சந்திரன், திரு. கோ. முருகேசன் மற்றும் திருமிகு விஜி அழகர் ஆகியோருக்கும், தேர்தல் செயல்முறையில் பங்கேற்ற அனைத்து பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர் தமிழ்ச் சங்கங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நிர்வாகக் குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!

தமிழால் ஒன்றிணைவோம்!
ஒற்றுமையுடன் முன்னேறுவோம்!

அன்புடன்,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

கனெக்ட்டிகட் தமிழ் உறவுகள் (CTTU) சார்பாக வாழ்த்துகள்💐💐💐💐💐 Federation of Tamil Sangams of North America - FeTNA
06/05/2026

கனெக்ட்டிகட் தமிழ் உறவுகள் (CTTU) சார்பாக வாழ்த்துகள்💐💐💐💐💐

Federation of Tamil Sangams of North America - FeTNA

Register at - https://mycttu.org🏓🔥 CTTU Pickleball & Ping Pong Tournament 2026 is Here! 🔥🏓Get ready for an action-packed...
05/22/2026

Register at - https://mycttu.org

🏓🔥 CTTU Pickleball & Ping Pong Tournament 2026 is Here! 🔥🏓

Get ready for an action-packed day filled with thrilling matches, exciting prizes, fun vibes, and unforgettable memories! Whether you're a beginner or a seasoned player, this tournament is for YOU.

✨ Why You Should Join:
✅ Cash Prizes & Trophies
✅ Singles & Doubles Categories
✅ All Skill Levels Welcome
✅ Meet New Players & Have Fun
✅ Family-Friendly Event

📅 Date: Saturday, May 30, 2026
📍 Venue: Vernon Pickleball Place, Vernon, CT
⏳ Registration closes: Tuesday, May 26, 2026

🎉 Early Bird Offer: Get 10% OFF when you register early!
👥 Group registrations? Call for exclusive discounts!

📲 Scan the QR code in the flyer to register now and secure your spot before slots fill up!

Bring your energy, your crew, and your competitive spirit — let’s make this tournament unforgettable! 🏆🔥

ஈதலும், இசைபட வாழ்தலும் கொண்ட எம்மினம்ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளைஎந்நாளும் மறவாது எதிர்வரும் தலைமுறைக்கு கடத்துவோம்...
05/19/2026

ஈதலும், இசைபட வாழ்தலும் கொண்ட எம்மினம்
ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை
எந்நாளும் மறவாது எதிர்வரும் தலைமுறைக்கு கடத்துவோம்!

#மே18 #முள்ளிவாய்க்கால் #நினைவுநாள்.
#தமி்ழர் #இனஅழிப்புநாள்

தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் இன்னுயிரிழந்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்ட...
05/19/2026

தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் இன்னுயிரிழந்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
#மே18
#முள்ளிவாய்க்கால்

Address

Hartford, CT

Telephone

+12037106166

Alerts

Be the first to know and let us send you an email when Connecticut Tamil Uravugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Connecticut Tamil Uravugal:

Share