Pottuvil Foreign Islamic Foundation - PFIF

  • Home
  • Pottuvil Foreign Islamic Foundation - PFIF

Pottuvil Foreign Islamic Foundation - PFIF Non-Profit Organization

அவசர உதவி தேவை: ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காக்க முன்வாருங்கள்! 🔴கண்டி, மகாவலி கல்வி இயற்கல்லூரியில் ஆசிரியப் பயிலுநராக உ...
08/05/2026

அவசர உதவி தேவை: ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காக்க முன்வாருங்கள்! 🔴

கண்டி, மகாவலி கல்வி இயற்கல்லூரியில் ஆசிரியப் பயிலுநராக உள்ள முகைதீன் பாவா ஹம்னா (வயது 23) அவர்களுக்கு தற்போது இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கான மொத்தச் செலவு 1.5 கோடி ரூபாய் (1.5 Crore) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவரின் உயிரைக் காக்க, உங்களால் இயன்ற சிறிய தொகையையேனும் வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பிரதான பொறுப்பாளர்:
சகோதரர் Yaser S Hameed – 77445834
பிரதேசவாரியான பொறுப்பாளர்கள்:

சகோதரர் Shifan (66540285) – Najma, Mansoora மற்றும் அருகாமைப் பகுதிகள்
சகோதரர் Fawzi (66790473) & சகோதரர் Nifras (30497693) – Industrial Area மற்றும் அருகாமைப் பகுதிகள்
சகோதரர் Inthiyas (77198224) & சகோதரர் Niyas (66996863) – Al Aziziya, Ain Khalid, Mamoura மற்றும் அருகாமைப் பகுதிகள்

(மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் மேற்குறிப்பிட்ட பொறுப்பாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.)

கத்தார் வாழ் பொத்துவில் சமூகம் சார்பாக, 31 மே 2026க்கு முன்னர் குறைந்தபட்சம் 1 மில்லியன் ரூபாய் பங்களிப்பு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு சகோதரியின் கடினமான தருணத்தில் உங்கள் இரக்கமுள்ள கரங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் பங்களிப்பை PFIF மூலம் செலுத்தி, இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்று அன்பின் சான்றாய் விளங்குமாறு மனமார வேண்டுகிறோம்.

மத்திய குழு
PFIF – Qatar

08/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

PFIF அவசரக் கூட்டம்

ஒழுங்கமைக்கப்பட்டதற்கு ஏற்ப, PFIF இன் அவசரக் கூட்டமானது தலைவர் அவர்களின் இல்லத்தில், மூத்த மற்றும் புதிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் 07/05/2026 மாலை 8:00 மணியளவில் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1.⁠ ⁠PFIF இன் உருவாக்க நோக்கம் மற்றும் சமகாலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் PFIF ஐ திறன்படச் செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

2.⁠ ⁠பொத்துவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு கத்தாரில் இயங்குவதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

3.⁠ ⁠தற்போதைய நிர்வாகத்தை சீரமைத்தல் அல்லது புதிய நிர்வாகம் அமைத்தல் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும்,
அவசரகால மருத்துவ நிதி சேகரிப்பு

கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொத்துவில் சகோதரி ஒருவருக்கான அவசரகால மருத்துவ உதவி நிதி திரட்டும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குவதற்கு ஒரு அவசரகால குழு நியமிக்கப்பட்டது. அதோடு, பிரதேசவாரியான நிதி சேகரிப்பு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர்.

PFIF தலைவரின் வழிகாட்டலிலும், கலந்துகொண்ட உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரிலும் பின்வருமாறு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன:

பிரதான பொறுப்பாளர்:
சகோதரர் Yaser S Hameed – 77445834

பிரதேசவாரியான பொறுப்பாளர்கள்:

•⁠ ⁠சகோதரர் Shifan (66540285) – Najma, Mansoora & அருகாமை பகுதிகள்
•⁠ ⁠சகோதரர் Fawzi (66790473) & சகோதரர் Nifras (30497693) – Industrial Area & அருகாமை பகுதிகள்
•⁠ ⁠சகோதரர் Inthiyas (77198224) & சகோதரர் Niyas (66996863) – Al Aziziya, Ain Khalid, Mamoura & அருகாமை பகுதிகள்

(மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் மேலே குறிப்பிட்ட பொறுப்பாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.)

கத்தார் வாழ் பொத்துவில் சமூகம் சார்பாக, 31 மே 2026 க்கு முன்னர் குறைந்தபட்சம் 1 மில்லியன் ரூபாய் பங்களிப்பு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு சகோதரியின் கடினமான தருணத்தில் உங்கள் இரக்கமுள்ள கரங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் பங்களிப்பை PFIF மூலம் செலுத்தி, இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்று அன்பின் சான்றாய் விளங்குமாறு மனமார வேண்டுகிறோம்.

மத்திய குழு
PFIF – Qatar

07/05/2026

Address

Doha/

Telephone

+97477445834

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pottuvil Foreign Islamic Foundation - PFIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pottuvil Foreign Islamic Foundation - PFIF:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share