24/10/2024
*சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் மரநடுகை*
மேற்படி நிகழ்வு ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரி வளாகத்தில் 23.10.2024 புதன்கிழமை காலை 11.00மணியளவில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் SM. இர்ஷாத் (இஸ்லாஹி), B.A (Hons), (றியாழி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அஹ்மத் அவர்கள் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக வாழைச்சேனை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் எஸ். சிறீ கண்ணன் அவர்களும் அதிதிகளாக
பாடசாலை ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், சிறாஜ் பசுமைக் கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப்படுத்தல்" எனும் விழிப்புணர்வை மையப்படுத்தி சிறாஜ் அறபுக் கல்லூரியின் சிறாஜ் பசுமைக் கழகத்தினால் கடந்த ஏப்ரல் மாதமளவில் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு புத்தக தொகுதியும் பாடசாலை நூலகத்திற்கு இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதம அதிதி, விசேட அதிதி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், கல்லூரி நிருவாக உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், சிறாஜ் பசுமைக் கழக உறுப்பினர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன், விஷேடமாக ஓவியப்போட்டியில் கலந்து சிறப்பித்த மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Green Club HappyAID - Agency for Internal Development Siraj Arabic College Cycling Green