கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம்

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்.📌💜

17/07/2025

யார் இந்த இராவணன்⁉️

வரலாற்று திரிபுகளை தகர்த்து….
புனைவுகளை புறம்தள்ளி……

நம் பெருமைமிகு அடையாளமாகிய இலங்காதிபதி இராவண மன்னனின் மீதான ஒரு நேர்கொண்ட பார்வை❤️

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக🔥

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் வழங்கும்✨💙

“இராவணாயணம்” - காண்டம் 01 🔥🔥🔥

விரைவில்📌

இன்றைய தினம் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் விவாதச்சுற்று போட்டியொன்று நடைபெற்று இருந்தது….இந்து சமய கலாச்சார அலுவல்...
13/07/2025

இன்றைய தினம் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் விவாதச்சுற்று போட்டியொன்று நடைபெற்று இருந்தது….

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் ஆகியோர் இணைந்து நடாத்திய இந்த மாபெரும் விவாத சுற்றுத் தொடரை, நடுவர்களாக வந்து நடாத்தித் தருமாறு கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் ஐ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, எம் மன்றத்தின் திறமையான 5 நடுவர்களை கொண்ட ஒரு குழாம் இந்த விவாதச்சுற்றில் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தது…..🔥

இன்றைய காலகட்டத்தில், போட்டிகளில் நடுவர்களாக பங்குபற்றும் பலரின் மேல் ஏற்படும் அதிருப்திகளுக்கு மாற்றீடாக, திறமையான, விவாதம் தெரிந்த, எவ்வித அரசியல் சமரசமும் இல்லாத, 100% நடுநிலமையான நடுவர்களை உருவாக்கி, களத்துக்கு கொண்டுவரும் பணியில் என்றைக்கும் எம் மன்றம் முழுமூச்சாய் செயற்படும்❤️

பாடசாலையின் பெயர், பெற்றோரின் பெயர், பெற்றோரின் தொழில் பார்த்து தீர்மானிக்கப்படும் வெற்றிகள் களையப்பட்டு, திறமை மட்டுமே வெல்லும் நாளை உருவாக்குவதே எம் கனவு📌

“சொல்லினால் செம்மை செய்வோம்”✨💙

15/06/2025
இந்த சமூகம் பேச மறந்த கதைகள்🥹தாயுமானவனாய்…..தாயாக தந்தை மாறும் புது காவியம் இது♥️இன்று…..தந்தையர் தினம்♥️ஆணின் சிரிப்பிற...
15/06/2025

இந்த சமூகம் பேச மறந்த கதைகள்🥹

தாயுமானவனாய்…..
தாயாக தந்தை மாறும் புது காவியம் இது♥️

இன்று…..
தந்தையர் தினம்♥️

ஆணின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வலிகளையும் பேசுவோம் வாரீர்✨

இன்று மாலை 7 மணிக்கு📌

“சொல்லால் செம்மை செய்வோம்” ✅

நேற்றைய தினம் 10.05.2025 அன்று திருகோணமலை தமிழ் சங்கத்தின் கடின உழைப்பின் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பின்னர், தமிழர் தம் ...
11/06/2025

நேற்றைய தினம் 10.05.2025 அன்று திருகோணமலை தமிழ் சங்கத்தின் கடின உழைப்பின் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பின்னர், தமிழர் தம் பெருமைகளை மீட்டெடுக்கும், அடையாளப்படுத்தும் “வசந்த விழா” வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது♥️

தமிழுக்கான இந்த விழா முன்னெடுப்பு முயற்சிகளில், கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் ஆகிய நாமும் எம்மால் இயன்ற பங்களிப்புகளை வழங்கி இருந்தோம்💜

நேற்று இரவு நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவரின் விசேட அழைப்பின் பேரில், யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் தலைவரை எம் மன்றம் சந்தித்திருந்தது✨

இதன் போது, திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவரின் வார்த்தைகள் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று….

“இந்த மன்ற பிள்ளைகள் எமக்கு மிகப்பெரிய பக்கபலம்…. இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நடந்து முடிய இந்த பிள்ளைகள் தான் மிக முக்கிய காரணம்” 😍

கடந்த நாள் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றோம்….
சிறப்பு அதிதிகள் அதிகாலை 3 மணிக்கு திருகோணமலை வந்து இறங்கினாலும், அந்த அதிகாலையிலும் உடனே சென்று இன்முகத்திடன் வரவேற்றதில் இருந்து……
அத்தனை வேளை உணவுகளையும் பொறுப்பெடுத்து, உரிய நேரத்தில் பரிமாறி உபசரித்ததில் இருந்து….
நிகழ்வுக்கு வந்த பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வந்து புகைப்படம் எடுத்த , முதலாவது படத்தில் உள்ள வரவேற்பு பதாதை அமைத்ததில் இருந்து…..
தொழில்நுட்பம் சார் உதவிகள், மேடை துணை அலங்கரிப்பு வேலைகள், வெளி சூழல் அலங்கரிப்புகள் என்பவற்றை திறம்பட செய்து கொடுத்ததில் இருந்து…..அழைப்பிதழ்கள் நேரில் கொண்டு சென்று ஒவ்வொருவராக கொடுத்ததில் இருந்து……அழைக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விருந்தினர்களை, பெயர்கள் முதற்க்கொண்டு எழுதி ஒழுங்குபடுத்தியதில் இருந்து……..

சொல்லிக்கொண்டே போக ஏராளம் ஏராளம்……

ஆனால்,
எங்கள் முகம் வெளியே தெரியாமல் இருப்பதில் நாங்கள் மிக கவனமாக இருந்தோம்😍
இது தமிழ் சங்கத்தின் நிகழ்வு….
அங்கே இருக்கும் பெரியோர்களின் கனவு…..

இந்த நிகழ்வின் ‘ஒவ்வொரு அங்கத்திலும்’…..
‘ஒவ்வொரு அங்கத்திலும்’ எம் மன்றம் தன்னால் ஆன அத்தனை ஒத்தாசைகளையும் நல்கியது…..
ஆனால், எந்த ஒரு புகைப்படத்திலும் எம் முகம் தெரியாதவாறாக மிக கவனமாக பார்த்துக்கொண்டோம்🤗♥️

நேற்று யாழ்ப்பாண தமிழ் சங்க தலைவர் கூறிய மிக முக்கியமான வார்த்தைகள்…..

“மிக தரமான ஒரு அணியாக, ஒரு மன்றமாக இந்த பிள்ளைகள் சேர்ந்திருக்கிறார்கள்….. தமிழ் சங்கமும், வயதில் கூடியவர்களையே மீண்டும் மீண்டும் உள்வாங்குவதை தவிர்த்து, இப்படிப்பட்ட ஆளுமை உள்ள குழந்தைகளை உள்ளுக்கு கொண்டு வரோணும்…. யாருக்கு தெரியும்???? இன்னும் 10,20 வருசத்துக்கு பிறகு இந்த குழந்தைகள் கூட தமிழ் சங்கத்தின் தலைவராக இருக்க முடியும்” 😍♥️

நாங்கள் விருதுக்கு வேட்டையாடவில்லை….
பெயர் வெளியில் வர வேண்டும், புகைப்படத்தில் முகம் வர வேண்டும் என்று எதையும் செய்யவில்லை….

ஆனால்……
ஆளுமை மிக்க பெரியோர், எம்மை அவதானித்து இருக்கிறார்கள்….
நேரில் அழைத்து பாராட்டுகிறார்கள்……😍🙏

எப்போதும் எம் மன்றத்தின் தாரக மந்திரம் இது தான்….
“கடமையை செய்♥️
பலனை எதிர்பாராதே💜”

திருகோணமலை தமிழ் சங்கம் மிகப்பெரும் விருட்சமாய் கிளை பரப்ப,,,,

“ஸ்ரீ இராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல”
எம் மன்றத்தால் ஆன அத்தனை உதவிகளையும் நல்குவோம்♥️

வீழ்வது “நாமாயினும்”
வாழ்வது தமிழாகட்டும்♥️✨

01/06/2025
திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் அரையிறுதி, இறுதிச் சுற்றுக்கள் மற்றும் பரிசளிப்பு வைபவ நி...
31/05/2025

திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் அரையிறுதி, இறுதிச் சுற்றுக்கள் மற்றும் பரிசளிப்பு வைபவ நினைவுகள்✨💜 பகுதி 3

11.05.2025📌

திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் அரையிறுதி, இறுதிச் சுற்றுக்கள் மற்றும் பரிசளிப்பு வைபவ நி...
26/05/2025

திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் அரையிறுதி, இறுதிச் சுற்றுக்கள் மற்றும் பரிசளிப்பு வைபவ நினைவுகள்✨💜

11.05.2025📌

திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் காலிறுதி சுற்றின் நினைவுகள்✨💜10.05.2025📌
24/05/2025

திருகோணமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “தர்க்கச்சுழல் 2025” இன் காலிறுதி சுற்றின் நினைவுகள்✨💜

10.05.2025📌

22/05/2025

கண்ட கனா கண் முன்னே😍

தமிழர் தம் தலைநகராம் திருகோணமலை மண்ணில் ஒரு மாபெரும் மேடை🔥
அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், ஆளுமைகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டோரும் கலந்து சிறப்பித்த,,,,,,

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் வழங்கிய “தர்க்கச்சுழல் 2025” பிரம்மாண்டத்தின் தொகுப்பு, இதோ உங்கள் பார்வைக்காக🎁💜

காத்திருங்கள் “தர்க்கச்சுழல் 2026” க்காக✨

பல்வேறுபட்ட ஆச்சர்யங்களுடன், திறமைக்கான தீனியாக பல மாறுபட்ட விவாத வடிவங்களுடனும், மக்கள் பேராதரவுடனும் உங்களை காண வருகிறோம் 2026 இல்……♥️

“போட்டி முடிந்து வெறும் 1 வாரத்துக்குள்ளேயே, பார்வையாளர்களாக இருந்த இளம் சமூகத்தை ஞாயத்துக்காக குரல் கொடுக்கும் அளவுக்கு மாற்றி இருக்கின்றது இந்த மேடை” என்ற பங்குபற்றிய விவாதிகளின் கருத்துக்களோடு, வெற்றிகரமாக நிறைவுறுகின்றது

“தர்க்கச்சுழல் 2025” 😍

புத்தம் புதிய மன்றம்….😍புத்தம் புதிய மேடை….🎁வெறும் 2 மாத கடின உழைப்பு….🤗2 மாகாணங்களுக்கிடையிலான பாலம்….💜எப்படி சாத்தியமா...
20/05/2025

புத்தம் புதிய மன்றம்….😍
புத்தம் புதிய மேடை….🎁
வெறும் 2 மாத கடின உழைப்பு….🤗
2 மாகாணங்களுக்கிடையிலான பாலம்….💜

எப்படி சாத்தியமானது இந்த வெற்றி❓❓❓

வெளியில் தெரியாத வலிகள் என்ன❓
சொல்லாத கதைகள் என்ன❓

யார் நாங்கள்❓
எங்கள் மன்றத்தின் இலக்கு என்ன❓
எதிர்கால திட்டங்கள் என்ன❓

கருத்தா கனக்க கதைச்சிட்டம்…..
கொஞ்சம் கலகலப்பாவும் கதைப்பம் என்ன🫣😃

இன்று மாலை 7.00 மணிக்கு….
எம் மன்றத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையாக💜

வட, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாத களமாகிய ‘தர்க்கச்சுழல் 2025’ இல் களம் கண்டு, 123 பாடசாலைகளில் மிக...
16/05/2025

வட, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாத களமாகிய ‘தர்க்கச்சுழல் 2025’ இல் களம் கண்டு, 123 பாடசாலைகளில் மிகச்சிறந்த விவாத அணியாக வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொள்கின்றனர் “ வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் மாணவ, மாணவிகள் “ 😍🔥✨

விவாத உலகின் எதிர்காலம், இந்த மாணவர்களின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளதை நினைத்து பேருவகை அடைகின்றோம்😌💜

இந்த மாணவ, மாணவிகளின் திறமைகளை பாராட்டி, கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கின்றது கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம்💙

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share