Sammanthurai Sadaqa Welfare Fund

Sammanthurai Sadaqa Welfare Fund Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai Sadaqa Welfare Fund, Charitable organisation, E35/2/C/1, Ampara Road, Udanga/01, Sammanthurai.

மக்களின் நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வாதாரம் குறைந்தவர்களுக்கு மருத்துவ செலவுகள், அன்றாட தேவைகள், கல்வி மற்றும் அவசரநிலை உதவிக்கான நிதி விநியோகிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே நோக்கமாகும்

21/08/2026

அழைப்பு

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் 2ஆவது மாபெரும் இரத்த தான முகாமுக்கான அழைப்பு !

Dr. ILM. RIZWAN
Acting Chairman

Dr. KL. RAMEES
Director of Administration

19/08/2026
18/08/2026

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அன்பிற்கினிய சம்மாந்துறை வாழ் சகோதர, சகோதரிகளே!

🩸 உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்! 🩸

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் — SSWF — ஏற்பாடு செய்யும் இரண்டாம் கட்ட இலவச இரத்ததான முகாம், இன்ஷா அல்லாஹ், 2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் லுஹர் தொழுகை வரை, சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இவ்விரத்ததான முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் முழுமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.

மேலும், சம்மாந்துறையின் நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா, மஜ்லிஸுஷ் ஷூரா, பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடனும், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினரால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முச்சபைகளுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், எமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பொதுநல வேலைத்திட்டங்களை முச்சபைகள், சமூக அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாகவும் இவ்விரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்பான சகோதர, சகோதரிகளே!

நாம் வழங்குகின்ற ஒரு யூனிட் இரத்தம், நாளை ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமையலாம்.

விபத்துக்களில் காயமடைந்தவர்கள், அவசர சிகிச்சை பெறுபவர்கள், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள், இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலருக்கு, நாம் வழங்குகின்ற இரத்தம் உயிர்காக்கும் உதவியாக அமைந்துவிடலாம்.

அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

“யார் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் போன்றவராவார்.”

— ஸூரத்துல் மாயிதா, 5:32

எனவே, தகுதியுடைய அனைவரும் இந்த மனிதநேயப் பணியில் முன்வந்து இரத்ததானம் செய்து, ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண், பெண் இருபாலரும், இந்த அறிவிப்புடன் திரையில் காண்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.

அல்லது,

2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் லுஹர் தொழுகை வரை, சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நேரடியாக வருகை தந்து இரத்ததானம் செய்யலாம்.

நீங்கள் வழங்கும் இரத்தம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டு, தேவையுடைய நோயாளர்களின் உயிர்காக்கும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

🩸 உதிரம் கொடுப்போம்…
உயிர் காப்போம்…
மனிதநேயத்தால் ஒன்றிணைவோம்! 🩸

அல்லாஹ் எமது இந்த நற்பணியை ஏற்றுக்கொண்டு, இதில் பங்குகொள்ளும் இரத்ததானிகள், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், முச்சபையினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நிறைவான நற்கூலியை வழங்குவானாக.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

ஏற்பாடு:
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது *இரத்ததான முகாம்,...
17/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது *இரத்ததான முகாம், எதிர்வரும் 29.08.2026 சனிக்கிழமை, பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முழுமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.*

இந்நிகழ்வு, சம்மாந்துறை *நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்-ஷூரா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் நிலையம் மற்றும் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது*.

இந்த உயரிய மனிதநேயப் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:

“*ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுபவர், மனிதகுலம் முழுவதையும் காப்பாற்றியவரைப் போன்றவர்.*”
(திருக்குர்ஆன் 5:32)

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“*அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மக்கள், மக்களுக்கு அதிக நன்மை செய்பவர்களே*.”

எனவே, உயிர்களைக் காக்கும் இந்த உயரிய மனிதநேயப் பணியில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு எமது ஊர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முச்சபைகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் தனது அனைத்து நலத்திட்டங்களையும், முச்சபைகள், அரச நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து, முறையான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே இவ்விரத்ததான முகாமும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆகையால், இம்மனிதநேயப் பணியில் பங்கெடுத்து உயிர்களைக் காக்கும் நோக்கில், *முன்பதிவு செய்து இரத்ததானம் வழங்க முன்வருமாறு சம்மாந்துறை வாழ் அனைத்து சகோதர, சகோதரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

முன்பதிவிற்குத் தேவையான விபரங்கள்

*முழுப் பெயர்*:
*தேசிய அடையாள அட்டை இலக்கம்*:
*தொலைபேசி இலக்கம்*:
*பாலினம்* :
*முகவரி*:
*இரத்த வகை*:
*இறுதியாக இரத்ததானம் வழங்கிய திகதி*: (தெரிந்திருந்தால்)

மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள எமது *WhatsApp* இலக்கங்களுக்கு அனுப்பி வைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மேலதிக தகவல்களுக்கு எமது பொறுப்பாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

*WhatsApp மூலம் முன்பதிவு செய்ய*

📱 +94 77 638 4022
📱 +94 78 843 5555

*நேரடித் தொடர்புகளுக்கு*

செயலாளர்:
A. M. றிகாஸ்
📞 076 702 3241

நிர்வாகத் தலைவர்:
மௌலவி A. B. M. றம்சீன் ( காசிபி )
📞 076 012 4037

பதில் தவிசாளர்:
Dr. I. L. M. றிஸ்வான்
📞 077 645 8985

சட்டப் பணிப்பாளர்:
சட்டத்தரணி A. J. M. நவாஸ்
📞 077 741 1782

*முன்பதிவு செய்ய இயலாதவர்களும், நிகழ்வு தினத்தில் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நேரடியாக வருகை தந்து பதிவு செய்து இரத்ததானம் வழங்கலாம்.*

“*உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்*!”

அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவற்றிற்கான நற்கூலியை வழங்கி, நமக்கெல்லாம் நன்மையையும் பரக்கத்தையும் அருள்வானாக. ஆமீன்.

அன்புடன்,
*சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம்* (SSWF)

14/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது இரத்ததான முகாம், எதிர்வரும் 29.08.2026 சனிக்கிழமை, பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முழுமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்-ஷூரா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் நிலையம் மற்றும் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

இந்த உயரிய மனிதநேயப் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:

“*ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுபவர், மனிதகுலம் முழுவதையும் காப்பாற்றியவரைப் போன்றவர்.*”
(திருக்குர்ஆன் 5:32)

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“*அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மக்கள், மக்களுக்கு அதிக நன்மை செய்பவர்களே*.”

எனவே, உயிர்களைக் காக்கும் இந்த உயரிய மனிதநேயப் பணியில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு எமது ஊர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முச்சபைகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் தனது அனைத்து நலத்திட்டங்களையும், முச்சபைகள், அரச நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து, முறையான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே இவ்விரத்ததான முகாமும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆகையால், இம்மனிதநேயப் பணியில் பங்கெடுத்து உயிர்களைக் காக்கும் நோக்கில், முன்பதிவு செய்து இரத்ததானம் வழங்க முன்வருமாறு சம்மாந்துறை வாழ் அனைத்து சகோதர, சகோதரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவிற்குத் தேவையான விபரங்கள்

முழுப் பெயர்:
தேசிய அடையாள அட்டை இலக்கம்:
தொலைபேசி இலக்கம்:
முகவரி:
இரத்த வகை:
இறுதியாக இரத்ததானம் வழங்கிய திகதி: (தெரிந்திருந்தால்)

மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள எமது *WhatsApp* இலக்கங்களுக்கு அனுப்பி வைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மேலதிக தகவல்களுக்கு எமது பொறுப்பாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

*WhatsApp மூலம் முன்பதிவு செய்ய*

📱 +94 77 638 4022
📱 +94 78 843 5555

*நேரடித் தொடர்புகளுக்கு*

செயலாளர்:
A. M. றிகாஸ் ( தாதி உத்தியோகத்தர் )
📞 076 702 3241

நிர்வாகத் தலைவர்:
மௌலவி A. B. M. றம்சீன் ( காசிபி )
📞 076 012 4037

பதில் தவிசாளர்:
Dr. I. L. M. றிஸ்வான்
📞 077 645 8985

சட்டப் பணிப்பாளர்:
சட்டத்தரணி A. J. M. நவாஸ்
📞 077 741 1782

*முன்பதிவு செய்ய இயலாதவர்களும், நிகழ்வு தினத்தில் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நேரடியாக வருகை தந்து பதிவு செய்து இரத்ததானம் வழங்கலாம்.*

“*உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்*!”

அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவற்றிற்கான நற்கூலியை வழங்கி, நமக்கெல்லாம் நன்மையையும் பரக்கத்தையும் அருள்வானாக. ஆமீன்.

அன்புடன்,
*சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம்* (SSWF)

*வேலைத்திட்ட இலக்கம் – 64*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அடிப்படை வசதி குறைந்த செந்நெல் கிராமத்தைச் சேர்...
11/08/2026

*வேலைத்திட்ட இலக்கம் – 64*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

அடிப்படை வசதி குறைந்த செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த, தனது 3 குழந்தைகளைப் பராமரித்து வரும் ஒரு சகோதரி, சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்திடம் (SSWF) கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

தனது பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கி வருகின்ற போதிலும், வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையிலான தூரம் காரணமாக தினமும் பாடசாலைக்கு நடந்து செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், உரிய நேரத்தில் பாடசாலைக்குச் சென்று கல்வியைத் தொடர உதவும் வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றைப் பெற்றுத் தருமாறும் அவர் விண்ணப்பித்திருந்தார்.

அவ்விண்ணப்பத்தின் அடிப்படையில் SSWF ஆய்வுக்குழு குறித்த குடும்பத்தின் நிலைமையை நேரடியாக ஆய்வு செய்து, அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமான நிலையில் இருப்பதையும், மாணவர் பாடசாலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் உறுதிப்படுத்தி தனது அறிக்கையை நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது.

அதனைத் தொடர்ந்து நிர்வாகம் மேற்கொண்ட கலந்தாலோசனையின் அடிப்படையில், SSWF உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்கள் முழுமையான சதகா பங்களிப்பை வழங்க முன்வந்தனர். அப்பங்களிப்பின் மூலம் புதிய துவிச்சக்கர வண்டி கொள்வனவு செய்யப்பட்டு, குறித்த மாணவரின் கல்விப் பயணத்திற்கு உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நற்காரியத்திற்காக தங்களது சதகாவை வழங்கிய அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும் எமது நிதியத்திற்கு தொடர்ந்து சதகா வழங்கி வரும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அல்லாஹு தஆலா இருவுலகிலும் வெற்றிகளையும், அவர்களது செல்வம், வாழ்வு மற்றும் குடும்பங்களில் நிறைவான பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

இவ்வாறான மனிதநேய மற்றும் கல்விசார் நலத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, உங்களது மாதாந்த சதகாக்களையும் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களுக்காக கோரப்படும் சதகா பங்களிப்புகளையும் தொடர்ந்து வழங்கி, SSWF மேற்கொள்ளும் நற்பணிகளில் நீங்களும் பங்குதாரர்களாக இணைந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Media InfoLine
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)

🎓 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அ...
09/08/2026

🎓 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF) தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்புச் செல்வங்களே!
நீங்கள் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும் கடின உழைப்பும் சிறந்த வெற்றியாக மாறட்டும். பரீட்சையை நம்பிக்கையுடனும் அமைதியான மனதுடனும் எதிர்கொண்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உங்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அல்லாஹ் உங்கள் கல்விப் பாதையை இலகுவாக்கி, அறிவிலும் ஆற்றலிலும் பரக்கத் செய்து, சிறந்த பெறுபேறுகளையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவானாக. ஆமீன். 🤲

வாழ்த்துக்களுடன்,
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)
Sammanthurai Sadaqa Welfare Fund

Address

E35/2/C/1, Ampara Road, Udanga/01
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai Sadaqa Welfare Fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share