Marhoom Ash-Sheikh Abdullah Mahmoodh Alim

Marhoom Ash-Sheikh Abdullah Mahmoodh Alim Page of Marhoom Ash-Sheikh Abdullah Mahmoodh Alim

It’s been a year since this beautiful soul departed from us 😥Please Make duas for his eternal life 🤲🏻اللهم إغفر له وإرحم...
13/01/2026

It’s been a year since this beautiful soul departed from us 😥
Please Make duas for his eternal life 🤲🏻
اللهم إغفر له وإرحمه 🤲🏽

கடந்த 23/02/2025 அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - புத்தளம் மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்ட்ட மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ...
02/03/2025

கடந்த 23/02/2025 அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - புத்தளம் மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்ட்ட மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் நினைவு நிகழ்ச்சி

மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்ச்சி
22/02/2025

மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்ச்சி

2010ம் ஆண்டு நடைபெற்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை நடைபவனியின் போது …… Zahira College, Puttalamاللَّهمَّ اغفرْ لَهُ وار...
14/02/2025

2010ம் ஆண்டு நடைபெற்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை நடைபவனியின் போது ……
Zahira College, Puttalam

اللَّهمَّ اغفرْ لَهُ وارحمهُ ، وعافِهِ واعفُ عنهُ ، وأكْرِم نُزَلَهُ ، ووسِّع مُدَخلَهُ ، واغسلْهُ بالماءِ والثَّلجِ والبَردِ ، ونقِّهِ منَ الخطايا كما نقَّيتَ الثَّوبَ الأبيضَ منَ الدَّنسِ ، وأبدِلهُ دارًا خَيرًا مِن دارِهِ ، وأهلًا خَيرًا مِن أهلِهِ ، وزَوجًا خَيرًا مِن زَوجِهِ ، وأدخِلهُ الجنَّةَ ونجِّهِ منَ النَّارِ

ඔහු අපූරු මිනිසෙක්…මානව හිතවාදියෙක් – සමන් සෙනෙවිරත්න මහතා කියයි________________________________________________________...
29/01/2025

ඔහු අපූරු මිනිසෙක්…මානව හිතවාදියෙක් – සමන් සෙනෙවිරත්න මහතා කියයි
__________________________________________________________________

අභාවප්‍රාප්ත වූ අබ්දුල්ලා ආලීම් මවුලවිතුමා මා හඳුනාගත්තේ පුත්තලම දිස්ත්‍රික් අන්තර් ආගමික කමිටුවේ රැසිවීම් වලදීය. ඒ සඳහා මඟ පෑදුවේ එවකට ජාතික සාම මණඩලයේ වැඩසටහන් විධායිකා ලෙස කටයුතු කළ රෙජිනා රාමලිංගම් මහත්මියයි. අබ්දුල්ලා ආලීම් මවුලවිතුමා සමස්ථ සමාජය දෙස බැලුවේ එකම සහෝදර කැලක් දෙස බලන කරුණාබර බැල්මකිනි. මට එතුමා සිහිවන, ප්‍රධාන සිදුවීමක් තිබේ. මීට වසර 6කට පෙර එනම් 2019 දී අපි නැගෙනහිර පළාතේ චාරිකාවකට රටේ විවිධ පළාත් වලින් සර්’ව ආගමික නායකයින් කණ්ඩායමක් කැඳවාගෙන ගියෙමු. ඒ පාස්කු ප්‍රහාරය සිදුවී මාස 2ක් පමණ ඉක්ම වූ පසුය.

මෙම කණ්ඩායම අතර බහුතරය වූවේ රටේ විවිධ ප්‍රදේශවලින් සහභාගිවූ ස්වාමීන් වහන්සේලාය. මෙම කණ්ඩායම තුළ අබුදුල්ලා අලීම් මවුලවිතුමාද විය. නැගෙනහිර ප්‍රදේශයේ විවිධ ගම්මානවල සංචාරය කළ මෙම කණ්ඩායම කාත්තන්කුඩි ගම්මානයට ගියේ සර්’ව ආගමික සමුළුවක් පැවැත්වීමටයි. මෙය කාත්තන්කුඩිහි පැවැති පළමු සර්’ව ආගමික සමුළුව වන අතර විශේෂත්වය වූවේ පාස්කු ප්‍රහාරය සිදුවී මාස දෙකකට පසු මෙය පැවැත්වීමයි. එවකට මම මෙම ව්‍යාපෘතියේ කළමණාකරු ලෙස කටයුතු කෙළෙමි. අපි සමඟ මෙම වැඩසටහනට ජයතිලක බණ්ඩාර කලාකරුවානන් ද සහභාගිවූවේ සමුළුව අවසානයේ සාම ගීත ප්‍රසංගයක් පැවැත්වීමටය. මෙම සමුළුව පැවැත්වූ ස්ථානයට නුදුරින් පාස්කු ප්‍රහාරයේ ප්‍රධාන සැකකරුගේ පුහුණු මධ්‍යස්ථානය ද පැවතියේය.

සමුළුව ආරම්භ කිරීමට මොහොතකට පෙර කණ්ඩායමක් පැමිණ ගීත ගයනා නොකරන මෙන් අපෙන් ඉල්ලා සිටියේය. කාත්තන්කුඩි ප්‍රදේශයේ සංගීත ප්‍රසංග පැවැත්වීම තහනම් යැයි ඔවුහු අප සමඟ පැවසූහ. මේ නිසා වැඩහටහන මෙහෙයවන මා අසීරුතාවයකට පත් විය. අපි සමග පැමිණි සෙසු අය තුෂ්නිම්භූත වී බලා සිටියේ වැඩසටහන අතරමඟ නවතා දැමීමට සිදුවේදෝයි යන බිය සහිතවය. මා අබ්දුල්ලා අලීම් මවුලවිතුමා සමඟ මේ සම්බන්ධයෙන් සාකච්ඡා කළේ ප්‍රශ්නයට විසඳුමක් සොයා ගැනීමේ අභිලාෂයෙනි. අවසානයේදී එතුමාගේ සාධනීය මැදිහත් වීමත් කාත්තන්කුඩි ජමියතුල් උලමා සභාවේ මැදිහත්වීමත් නිසා සැලසුම් කළ පරිදි වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමට අපිට හැකි විය. මේ නිසා දෙපාර්’ශවය අතර හොඳහිත වර්’ධනය විය.

මෙම සටහන එතුමාට උපහාර පිණිස ලියමි.
සමන් සෙනෙවිරත්න
වැඩසටහන් අධ්‍යක්ෂ,
ප්‍රජාතන්ත්‍රවාදය සඳහා අවකාශය ආයතනය

Thanks : https://www.facebook.com/share/p/12K9XhCRR2c/?mibextid=wwXIfr

புத்தளம் மக்கள் மன்றம் Puttalam People's Forum (PPF) புத்தளம் மக்கள் மன்றத்தின் உதயதுக்குக் காரணமாக அமைந்தது வடமேல் மாகா...
25/01/2025

புத்தளம் மக்கள் மன்றம்
Puttalam People's Forum (PPF)

புத்தளம் மக்கள் மன்றத்தின் உதயதுக்குக் காரணமாக அமைந்தது வடமேல் மாகாண சபைத் தேர்தலாகும். 1999 ஜனவரி 25 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்தன. இது பற்றிக் கலந்துரையாடுவதற்காக மத்ரஸதுல் காஸிமிய்யாவில் ஒன்றுகூடிய சில சகோதரர்கள், தொடர்ந்தும் இம் மத்ரஸாவில் சமூக விவகாரங்கள் பற்றிக் கலந்துரையாடத் தொடங்கினர்.

காலப்போக்கில் இக்கலந்துரையாடலில் பலர் இணைந்துகொண்டனர். ஒவ்வொரு விடயத்துக்குமென உப குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவே பின்னர் புத்தளம் மக்கள் மன்றமாக மாறியது. 20.06.2000 ஆம் ஆண்டு அன்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

புத்தளம் தள வைத்தியாசாலை, மின்சார சபை, , தொழில் திணைக்களம், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய (DPDHS) இடமாற்றம், கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயம், IBM காணிப் பிரச்சினை, வலயக் கல்விப் பணிமனை பிரிக்கப்படல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அவசியம், கணினி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டல், ஆசிரிய நியமனம், எமது பிரதேச செயலகங்களில் தமிப் மொழி மூல அமுலாக்கள், தமிழ் பேசும் பொலிஸார் நியமனம், பிரதான பாதைகளில் வரவேற்பு வளைவுகள் அமைத்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பாகக் காலத்துக்கு காலம் கலந்துரையாடப்பட்டு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

துண்டுப்பிரசுரங்கள் மூலமும் அவ்வப்போது சமூக விழிப்பூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வாக்காளர் பதிவின் முக்கியத்துவம், பாராளுமன்றத் தேர்தலின்போது அமைதி காத்தல், ஈத்தம்பழ விநியோகம், குனூத்துன் நாஸிலா, குடிசன மதிப்பேடு, சுகாதார பணிப்பாளர் காரியாலய இடமாற்றம் போன்றன அவற்றுள் சிலவாகும்.

புத்தளம் மக்கள் மன்றம், 21.03.2001 இல் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் (NGO) பதியப்பட்டு அதன் மூலம் பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 13.08.2001 இல் புத்தளம் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்திலும் (Consortium) மக்கள் மன்றம் தன்னை இணைத்துக்கொண்டது.

பாலர் பாடசாலைகளுக்குக் கற்பித்தல் துனைச் சாதனங்கள் வழங்கள், புனித ரமழான் மாத பேரீத்தம்பழ விநியோகம், உள்ளூர் இடம்பெயர்ந்தோர் உறவை வலுப்படுத்தல், உலுக்காப்பள்ளம் பிரதேச மஸ்ஜிதுகள் சம்மேளனம் அமைப்பதற்கான முயற்சி, புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தல் உட்பட போன்ற பல செயற்பாடுகளில் மக்கள் மன்றம் ஈடுபட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்கள் உள்ளடங்கலாகப் பல உள்ளூர், தேசிய மட்டக் கலந்துரையாடல்களிலும் மக்கள் மன்றம் பங்கேற்றத்துடன் குறிப்பாக, இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்கான கலந்துரையாடலில், வடபுல முஸ்லிம்களுக்குப் புகலிடம் கொடுத்த புத்தளமும் கவனத்திற்கொள்ளப்பட்டதல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

புத்தளம் மக்கள் மன்றத்தின் தாபகத் தலைவர் மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆவார். அத்துடன் மெளலவி அப்துர் ரஹ்மான், பொறியியலாளர் மர்ஹூம் K.M.M. சாபிர் ஆகியோரும் தாபகர்கள் வரிசையில் நினைவுகூரப்படவேண்டியோராவர். அதன் பொதுச் செயலாளராக இஸட்.ஏ. ஸன்ஹிர் பணியாற்றினார். இணைச் செயலாளர்களாக எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, M.O.J.M. நிஜாம் ஆகியோர் கடமையாற்றினர்.

புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் வாலிபர் சங்கக் கட்டிடம் (தைக்காப் பள்ளி) 07.05.2000 ஆம் ஆண்டு, ஆசிரியர் M.A.M. நிஸாம், அல்ஹாஜ் A.M.M. பஸல், A.G.M. பாதிஹ், A.N.N.M. பவ்மி ஆகியோரால் கையளிக்கப்பட்டு அன்று முதல் மக்கள் மன்ற செயலகமாக இயங்கி வந்தது.

இக்கட்டிடத்தில் மன்றத்தின் மூலம் பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, மருத்துவ சேவை, தாய் சேய் நல சேவை போன்றனவும் நடத்தப்பட்டன.

அலிசப்ரி றஹீம் அவர்களின் அன்பளிப்பில், குருநாகல் வீதியிலும் மன்றத்தின் காரியாலயம் சில காலம் இயங்கிவந்துள்ளது. இதில் S.A.M. மர்சூக், N.M. இன்சாப் ஆகியோர் காரியாலய உதவியாளர்களாகப் பணியாற்றினர்.

மக்கள் மன்ற உறுப்பினர்களுள், மர்ஹூம் M A.W. ஷாஜஹான், மர்ஹூம் S M முபாரக் (ஆசிரியர்) மர்ஹூம் M.L. ஹாஜா சஹாப்தீன், மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் (Cheap Side), மர்ஹூம் S.M.A. ஹசன் (GS), மர்ஹூம் C.S.M.A. அஸீஸ் மரைக்கார், மர்ஹூம் S.A.C. யாகூப், ஆகியோருடன் S.R.M. சலீம் (ஆசிரியர்), S.M.A. அஸீஸ் (கரைத்தீவு) M.H.A. ரஷீத், Z.A.M. றஸ்மி, M.H. ஹுதைபா, A.M. S.R.M. முஸம்மில், A.M. ஜவாத், S.I.L. முஸம்மில், M.T.N. அமீன், M.S.M. யாசிர், A.A. முஹ்தார், A.S.A. ஹுதா, M.S. அபூஸாலிஹ், M.R.M. மலிக், M.A.A. லத்தீப், M.C.M. மஹ்ரூப் போன்றோரும் ஏனையோரும் பிரதான பங்களிப்பை வழங்கினர். 'புத்தளம் மக்கள் மன்றம்' என்ற பெயரை முன்மொழிந்தவர் ஷரீப் அப்பாஸ் ஆவார்.

மன்றத்தின் உதவியாளர்களாக A.J.M. இனூஸ் , M.T.M. சாப்ரான், A.L.M. ஹஸீப், M.R.M. தஸ்னீம் ஆகியோர் காலத்துக்கு காலம் பணியாற்றியுள்ளனர். 15.05.2002 இல் Puttalam People's Forum News Bulletin என்ற பெயரில் செய்திக் கையேடு ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

© Z.A. Zanhir - 22. 01. 2025

Thanks Zanhir Sir
https://www.facebook.com/share/p/18RH329KR6/?mibextid=wwXIfr

மறைந்த அப்துல்லாஹ் ஹஸரத் தன்னைப் போலவே தன் பிள்கைளையும் உருவாக்கிச் சென்றுள்ளார்: இரங்கல் உரையில் சுந்தரராம குருக்கள்___...
22/01/2025

மறைந்த அப்துல்லாஹ் ஹஸரத் தன்னைப் போலவே தன் பிள்கைளையும் உருவாக்கிச் சென்றுள்ளார்: இரங்கல் உரையில் சுந்தரராம குருக்கள்
___________________________________________________________

சில தினங்களுக்கு முன், நோய்வாய்ப்பட்ட நிலையில் காலமான புத்தளம் மாவட்ட முன்னாள் உலமா சபைத் தலைவரும் காசிமிய்யா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவருமான அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று நேற்றைய தினம் (21) காசிமிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்நினைவேந்தலில் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுக்கும் தங்களுக்கும் இருந்த ஆழமான உறவு பற்றியும் அவர்களால் புத்தளம் பகுதியில் ஏற்பட்ட நல்ல விளைவுகள் பற்றியும் தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் சிலாகித்து கூறினார்கள்.

காசிமிய்யா அரபுக்கல்லூரியின் தற்போதைய அதிபர். அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுந்தரராம குருக்கள் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில், இந்து மத பணிகளுக்காக தான் புத்தளத்துக்கு வருகை தந்தது முதல் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் மறைவு வரை தங்களுக்கிடையில் இருந்த ஆத்மார்த்த உறவு பற்றிக் குறிப்பிட்டதுடன் அவருடைய இழப்பு உண்மையிலேயே சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் தனிப்பட்ட வகையில் குடும்பத்துக்கும் ஒரு இழப்பு என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அப்துல்லாஹ் ஹஸரத் எவ்வாறு வாழும் காலத்திலேயே பல விடயங்களில் முன்மாதிரியாக இருந்தாரோ அதேபோல தன்னுடைய பிள்ளைகளையும் கூட அவ்வாறு உருவாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதற்கான உதாரணங்களையும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பயணத்தின் போது அப்துல்லாஹ் ஹஸரதின் மூத்த மகன் தன்னை வரவேற்ற முறை ,தனது தந்தையைப் போன்ற கெளரவத்தை தனக்கு வழங்கியதையெல்லாம் சிலாகித்து உணர்வுபூர்வமாக பேசிய அவர், இந்த முன்மாதிரி எல்லோராலும் காட்டப்பட முடியாதது. இந்தளவு தூரம் தன் பிள்ளைகள் பிறரை மதிக்கின்ற நிலைக்கு உருவாக்கி சென்றுள்ளமையானது உண்மையில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.

அது மட்டுமன்றி புத்தளம் நகரில் இந்துக்களின் மத ஊர்வலத்துக்கு இருந்து வந்த இடைஞ்சலை அழகாக தீர்த்து வைத்தமை அன்னாரின் அளப்பரிய சேவையாகும் எனவும் நினைவு கூர்ந்தார்.

அதேபோல காசிமிய்யா மாணவர்கள் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுடைய முன்மாதிரியை பின்பற்றி அவர்களும் இப்பணியில் ஈடுபட்டு அவர்களைப் போல பணிகளை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட சர்வம மத ஏனைய உறுப்பினர்களான புத்தியாகம ரத்ன தேரரும் கிறிஸ்தவ மத தலைவர்களான அருட்தந்தை கெனடி ,மற்றும் யொஹான் ஜெயராஜ் ஆகியோரும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் பற்றிய நல்ல நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

காசிமிய்யா அரபுக்கல்லூரியின் நிர்வாக சபைத்தலைவர் எஸ்.ஆர். எம்.முஹம்மில், நிர்வாக உறுப்பினர் அஷ்ஷைக். பாரிஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இந் நிகழ்ச்சியில், மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினரான அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

இங்கிலாந்தை வசிப்படமாகக் கொண்ட அப்துல்லாஹ் ஹஸ்ரத்துடைய மூத்த மகன் கலாநிதி அயிஷான் மஹ்மூத் நன்றியுரை வழங்கினார்.

புத்தளம் பிரதேசத்தில் எவ்வளவு ஆழமான சமூக நல்லிணக்கம் காணப்படுகிறது என்பதனை பறைசாற்றுகின்ற மற்றுமொரு மிகச்சிறந்த நிகழ்வாக இந்த நினைவேந்தல் நிகழ்வு அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.

https://tamil.newsnow.lk/2025/01/மறைந்த-அப்துல்/

Thanks for Publishing : www.newsnow.lk

Assalamu AlaikkumDear Family, Friends, and Community,We want to express our deepest gratitude for the overwhelming suppo...
20/01/2025

Assalamu Alaikkum

Dear Family, Friends, and Community,

We want to express our deepest gratitude for the overwhelming support you have shown our family during this challenging time following the passing of our beloved *Wappa Marhoom Mahmood Aalim Abdullah*. Your kindness, empathy, and assistance have been a source of comfort and strength for us.

To the doctors, nurses, and hospital staff, thank you for your compassion and dedicated care. Your efforts have made a difficult situation more bearable.

To our family members and friends, your presence and love have been invaluable. The way you rallied around us, helping with every detail, has truly touched our hearts.

To the madrasa staff and both current and former students, as well as the members of Jamiathul Ulama and all Islamic organisations, your prayers and support have provided us with solace and peace during our grief.

A special thank you to our inter-religious community, whose unity and compassion demonstrate the true meaning of humanity.

We are grateful to every single person who sent us messages, called, attended the funeral, and paid their respects. Your solidarity brought us immense comfort and reminded us of the love that surrounds us.

Thank you once again for standing by us during this difficult time. Your support has meant the world to us.

Please remember to include our Wappa in your valuable duas.

Though we know that we cannot replace our Wappa, as a family, we will do our best to continue fulfilling his wishes.

*"O Allah, forgive him and have mercy on him, pardon him and forgive him, make honorable his reception and widen his grave, light it for him" 🤲🏽*
Jazakallahu Khairan.

With heartfelt appreciation,
*DHARUL MAHMOOD*
20th of January 2025

Address

169/5, Mahmoodh Alim Place, Mannar Road
Puttalam
61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marhoom Ash-Sheikh Abdullah Mahmoodh Alim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share