ABDUL MAJEED ACADEMY

ABDUL MAJEED ACADEMY Abdul Majeed Academy aspires to see a world with vast knowledge, deep comprehension, clear thought,

VISION :
Abdul Majeed Academy aspires to see a world with vast knowledge, deep comprehension, clear thought, great wisdom, best discretion, keen vision, everlasting foresight, objective analysis, intellectual discussion, expert consultation, methodical planning, meditative approach, altruistic dedication, diligence, perseverance, piety, sincerity, morality and discipline. MISSION :
Abdul Majeed

Academy works through its educational programmes to facilitate a milieu where knowledge in its entirety, practice in its true essence, effective learning, effectual teaching, comprehensive research, hands-on moulding and efficient training meet together.

01/04/2026
'தன்மானம் காத்திடு!' ஷாபிஈ கவி மழை==================='ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' எனும் தொனிப்பொருளில்...
13/02/2025

'தன்மானம் காத்திடு!' ஷாபிஈ கவி மழை
===================

'ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' எனும் தொனிப்பொருளில் அப்துல் மஜீத் அக்கடமி ஒழுங்குசெய்த சிறப்பு நிகழ்ச்சி சென்ற 2025.02.05 புதன்கிழமை மாலை வெகு விமரிசையாக நடந்தேறியது.

அக்கடமியின் பணிப்பாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது. விசேட நிகழ்வாக 'தன்மானம் காத்திடு! - இமாம் ஷாபிஈ கவி மழை' இடம்பெற்றது. பெரும் கவிஞரான இமாம் அவர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளில் சுயகௌரவத்தை அவரவர் காத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் கருத்தாழமிக்க, சத்துள்ள கவிதைகள் சில தெரிவுசெய்யப்பட்டு விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அக்கடமியின் பணிப்பாளரும் கவிஞருமான அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் இதனை சிறப்பாக நடத்திவைத்தார். இமாம் அவர்களின் அரபுக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தி அவற்றின் விளக்கங்களையும் அவர் எடுத்துரைத்து இமாம் அவர்களை ஒரு கவி இமயமாகப் பார்க்கவைத்தார்.

இமாம் அவர்களின் ஈகை 'கொடைவள்ளல் இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)' எனும் மகுடத்தில் அக்கடமியின் ஷரீஆப் பிரிவின் அதிபர் அஷ்-ஷைக் எம். நஜீப்தீன் அவர்களால் சுருக்கமாக, அழகாக முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் இடையிடையே அக்கடமி மாணவர்களால் இசைக்கப்பட்ட இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கவிதையும், அஷ்-ஷைக் எச் . அப்துல் நாஸர் அவர்களின் இமாம் அவர்களைப் பற்றிய கவிதையும் சபையோரை மகிழ்வித்தன. மாணவர்களான எம்.என். மஹ்தி, என்.எம். அப்துல்லாஹ், எம்.ஆர்.எம். ரிப்கி, எம்.என்.எம். பஸீஹ், என். ஹம்தூன், எம்.ஜே.எம். ஜவ்கத் ஆகியோர் கவிதைகளை இராகங்களுடன் கலந்து செவிக்கும் சிந்தனைக்கும் விருந்துவைத்தனர்.

அக்கடமியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.எம். தாவுதீன் அவர்களின் கருத்துரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் என்.எம். அப்துல்லாஹ் அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்வுகள் யாவும் இமாம் அவர்களுக்கான விசேட துஆவுடன் நிறைவுபெற்றன. துஆவை அஷ்-ஷைக் எம். முஸாதிக் முப்தி செய்தார்.

அக்கடமியின் ஷரீஆப் பிரிவின் ஆசிரியரான அஷ்-ஷைக் எச்.ஆர்.எம். ஸனூஸ் அவர்களின் உற்சாகமான வரவேற்புரையும், மற்றுமொரு ஆசிரியரான அஷ்-ஷைக் எப். பராஜ் அஹ்மத் அவர்களின் உணர்வுபூர்வமான நன்றியுரையும் ஈண்டு குறிப்பிட வேண்டியவை.

நிகழ்ச்சிகளை ஆரம்பம்முதல் இறுதிவரை அழகுற தொகுத்து வழங்கினார் அக்கடமி மாணவர் எம்.என்.எம். மிக்தாத்.

அக்கடமியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் புத்தளம் நகரத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆலிம்கள், கல்விமான்கள், கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வுகள் முகநூல் வாயிலாக நேரலை செய்யப்பட்டது.

யாவருக்கும் நன்றிகள்.

1446.08.14
2025.02.13

أقامت أكاديمية عبد المجيد مسابقات متنوعة بين طلابها في 2024/12/01م بمناسبة اليوم العالمي للغة العربية - 2024م.The Abdul ...
08/12/2024

أقامت أكاديمية عبد المجيد مسابقات متنوعة بين طلابها في 2024/12/01م بمناسبة اليوم العالمي للغة العربية - 2024م.

The Abdul Majeed Academy organized various contests among its students on 01.12.2024 to mark the World Arabic Language Day - 2024.

Address

146 B, Semmanthidal Road
Puttalam
61300

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94323137711

Alerts

Be the first to know and let us send you an email when ABDUL MAJEED ACADEMY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABDUL MAJEED ACADEMY:

Share