PMTWS

PMTWS Cooperative Association

2026-08-10 திங்கட்கிழமை இன்று நடைபெற்ற நிருவாக சபைக் கூட்டத்தில் தலைவர், உபதலைவர்கள் மற்றும் ஏனைய முக்கிய நிருவாக சபை உற...
10/08/2026

2026-08-10 திங்கட்கிழமை இன்று நடைபெற்ற நிருவாக சபைக் கூட்டத்தில் தலைவர், உபதலைவர்கள் மற்றும் ஏனைய முக்கிய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் சிறுவர்த்தகர்களுடைய நலன்விருத்தி, பெரும் வர்த்தகர்களுடைய மீளிணைப்பு மற்றும் வர்த்தக சங்கத்தினை அனைத்து வர்த்தகர்களுக்குமான தீர்வாக மாற்றுவதற்குமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜனாதிபதியினுடைய “அத்தம 2026“ எனப்படும் நாடாளாவிய ரீதியிளான தேசிய தூய்மை தின நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இன்று(08/08/2026) ...
08/08/2026

ஜனாதிபதியினுடைய “அத்தம 2026“ எனப்படும் நாடாளாவிய ரீதியிளான தேசிய தூய்மை தின நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இன்று(08/08/2026) பொத்துவில்-12 நகர்ப்பகுதியில் பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தக நலன்புரிச் சங்கத்தினுடைய(பொத்துவில் வர்த்தக சங்கம்)பங்குபற்றுதலுடன் முதலாவது நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் போது பொத்துவில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க வளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தக நலன்புரிச் சங்கம் சார்பாக தலைவர் MSM . நெளசர், உபதலைவர் A.காமில் மற்றும் AMM.தாஜுதீன், பொதுச் செயலாளர் AM.றிசான் முகமட், உறுப்பினர்களான PM ஹாரூன், MS.அலியார் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு.கடந்த 17.07.2026 ஆம் திகதி (வெள்ளிக்கிழ...
28/07/2026

பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு.

கடந்த 17.07.2026 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), அஷ்ஷாதிக் பாடசாலையில், சங்கத்தினுடைய நிறைவேற்றுச் செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் கூட்டத்தை மேற்பார்வை செய்வதற்காகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் NM. ஜெளபர் அவர்களும் அழைக்கப்பட்டார்.

பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவில் பின்வரும் உறுப்பினர்கள் நிருவாகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

நிருவாகப் பதவிகள்

1. தலைவர் – MSM. நெளசர் (Accurate system)
2. உபதலைவர் – A. காமில்(A.K.Trade Centre)
3. உபதலைவர் – AMM. தாஜுதீன்(Central pharmacy)
4. நிறைவேற்றுச் செயலாளர் – AM. றிசான் முஹம்மட்
5. நிர்வாகச் செயலாளர் – MCM. இர்ஷாத்(PMM)
6. பொருளாளர் – AM. நஸார்(PMM)
7. உப பொருளாளர் – A. யூனூஸ்(Ansab mobile shop)
8. உப செயலாளர் – NM. றினாஸ்(Royal city hardware)
9. ஊடகப் பேச்சாளர் – AGM. பாரிஸ் (Gafoor motors)
10. நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடியாளர்களுக்கான பொறுப்பாளர் – ML. நசீர் (fishermen)
11. மக்கள் மற்றும் வர்த்தகத் தொடர்புப் பொறுப்பாளர் – MSM. அலியார் (PMM)

ஏனைய உறுப்பினர்கள்

1. MI. ஆதம்(PMM)
2. AM. அனீபா(PMM)
3. AM. பாரூக்(PMM)
4. SHM. முஸ்தபா(fishermen)

PMM- public market merchant

28/07/2026

பொத்துவில் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நலன்புரிச் சங்கம் தனது புதிய நிருவாகத்தினை அண்மையில் தேர்ந்தெடுத்து, அனைத்து நடவடிக்கைகளையும் கையளித்திருக்கின்றது. விவரங்கள் விரைவில்

06/07/2026

இன்றைய RDB வங்கியினுடைய பொத்துவில் கிளை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எமது பொத்துவில் வர்த்தக சங்கம் சார்பாக, சங்கத்தினுடைய செயலாளர் அ.மு. றிசான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Rishan Mohamed Ayathu Mohamed

Address

Main Steet
Pottuvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMTWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share