YMMA Kaduruwela - 243

YMMA Kaduruwela - 243 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YMMA Kaduruwela - 243, Youth Organization, Polonnaruwa.

🌿  ுருவெள – 243   #உயர்கல்வி_மற்றும்_தொழில்_வழிகாட்டல்_நிகழ்ச்சி_2026O/L எழுதிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உயர்க...
01/03/2026

🌿 ுருவெள – 243 #உயர்கல்வி_மற்றும்_தொழில்_வழிகாட்டல்_நிகழ்ச்சி_2026
O/L எழுதிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்த அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும்.

உங்கள் எதிர்காலத்தை தெளிவாக திட்டமிட்டு உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற வாழ்த்துகள்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய
✨ #ஆசிரியர்_இல்யாஸ் (தம்பாளை)

✨ #பெறியியலாளர்_மிம்சாத்
இருவருக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும்.

மேலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஆதரவாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

🌙 இதனைத் தொடர்ந்து நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிக்காக உதவி செய்த அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்:
1️⃣ ரஹ்மத் மகளிர் சங்கம்
2️⃣ Fahim Traders
3️⃣ Mafas Sir (NIT Campus)
4️⃣ பெயர் குறிப்பிடாத மற்றொரு நபர்.

எங்கள் ஊரின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கினர்.

📖 அறிவே சக்தி – திட்டமிடுதலே வெற்றி
✨ இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்





🌟  ்கல்வி & தொழில்  #வழிகாட்டல் நிகழ்ச்சி – 2026🌙 இப்தார் நிகழ்ச்சியுடன் இணைந்து📚 O/L மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுO/L ...
24/02/2026

🌟 ்கல்வி & தொழில் #வழிகாட்டல் நிகழ்ச்சி – 2026
🌙 இப்தார் நிகழ்ச்சியுடன் இணைந்து

📚 O/L மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு

O/L தேர்வுகளை முடித்த மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிட உதவும் வகையில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🎯 உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு
🎯 வேலை வாய்ப்பு தகவல்கள்
🎯 தொழில் வழிகாட்டல் பட்டறை

🗓 தேதி: 01.03.2026
⏰ நேரம்: மாலை 3.00 மணி
📍 இடம்: YMMA அலுவலகம் – SDC மையம்

💡 O/L தேர்வுக்குப் பிறகு உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் திட்டமிட இது ஒரு சிறந்த வாய்ப்பு!

👥 அனைத்து O/L மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

ஏற்பாடு:

https://chat.whatsapp.com/FySkcRIdFrF2Hdx51xLeo5?mode=gi_t

YMMA நடாத்தும் தஜ்வீத் வகுப்பின் 5வது மொடியூல் (பாடப்புத்தகம்) இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.மாணவர்களின் குர்ஆன் ஓதல...
10/02/2026

YMMA நடாத்தும் தஜ்வீத் வகுப்பின் 5வது மொடியூல் (பாடப்புத்தகம்) இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்களின் குர்ஆன் ஓதல் திறனை (தஜ்வீத் முறை) மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய மொடியூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பாடப்புத்தகத்தை பெற்றுக் கொண்டு, தங்களின் குர்ஆன் உடனான பயணத்தை மேலும் முன்னேற்றும் ஒரு முக்கியமான கட்டமாக இதனை எடுத்துக் கொண்டனர்.

இந்த முயற்சி, தஜ்வீத் அறிவை முறையாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அல்-குர்ஆனுடன் ஒன்றிணைவோம் "என்ற தொணிப்பொருளில்,தமன்கடுவை பிராந்திய இடை மத்ரஸா மாணவர்களுக்கான குர்ஆன் போட்டியில் வெற்றி...
08/02/2026

"அல்-குர்ஆனுடன் ஒன்றிணைவோம் "
என்ற தொணிப்பொருளில்,
தமன்கடுவை பிராந்திய இடை மத்ரஸா மாணவர்களுக்கான குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா இன்று காலை Green Masjith வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உலமாக்கள், பள்ளித் தலைவர்கள், ஊர் ஜமாத்தினர்,பிரதிமேயர் மற்றும் முன்னாள் தற்போதைய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஏற்பாடு :
தமன்கடுவா பிராந்திய மஸ்ஜித் குழுக்கள்,
அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா – தமன்கடுவை கிளை,
கதுருவெல YMMA – 243 கிளை.

இந்த நற்பணியில் பங்கேற்ற அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
அல்லாஹ் அனைவரையும் பொருந்தி கொள்வானாக. 🤲

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு YMMA காரியாலயத்தில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது! 🇱🇰நிகழ்வில் முக்கிய விருந்...
08/02/2026

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு YMMA காரியாலயத்தில் நிகழ்வு
சிறப்பாக நடைபெற்றது! 🇱🇰

நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக:
பச்சைப்பள்ளி தலைவர் மன்சூர் ஹாஜியார்
பொலன்னறுவை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேள செயலாளர் ஜிப்ரி Sir
பச்சைப்பள்ளி செயலாளர் ரஸாத் Sir
சமூக ஆர்வலரும் ரஹ்மத் மகளிர் சங்க தலைவியும் சகோதரி ஃபருஷா
அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
👕 YMMA டீ-சர்ட் ஓப்பனிங்
🌱 மரம் நடும் நிகழ்வு

மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை – தமன்கடுவை கிளை நடத்திய சுதந்திர தின நிகழ்விலும் YMMA அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இன்று 2025.10.20 YMMA வாராந்த கூட்டம் SDC கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.தலைவர் தலைமையில் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது....
20/10/2025

இன்று 2025.10.20 YMMA வாராந்த கூட்டம் SDC கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் தலைமையில் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மாதத்துக்கான இரண்டு முக்கியமான ப்ராஜெக்டுகள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவற்றின் விவரங்கள் கூட்டத்தில் விளக்கமாக குறிப்பிடப்பட்டன.

மேலும், வரும் மாதத்திற்கான ப்ராஜெக்டாக, மாவட்டத்துக்குள் உள்ள பாடசாலைகளில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ் 🤍

YMMA கதுருவெலை மற்றும் பிரஜா பொலீஸ் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சுகாதார பரிசோதனை முகாம் – வெற்றிகரமாக நிறைவு பெற்றதுஇன்று...
12/10/2025

YMMA கதுருவெலை மற்றும் பிரஜா பொலீஸ் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சுகாதார பரிசோதனை முகாம் – வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இன்று (10/09/2025 காலை 9:00 மணி) மர்கஸ் பள்ளி வளாகத்தில் பொதுச்சுகாதார அதிகாரிகளினால் இலவச சுகாதார பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 🧪

நீரழிவு நோய் பரிசோதனை

இரத்த அழுத்த பரிசோதனை

சிறுநீரக பரிசோதனை

கொலஸ்ட்ரால் பரிசோதனை
மேலும் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் இடம்பெற்றன.

🤝 Praja Police மற்றும் YMMA ஆகிய இரு அமைப்புகளின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

சமூக நலனுக்காக சிறப்பாக நடைபெற்ற இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. 🌿

அகில இலங்கை வைஎம்எம்ஏ பேரவையின், விதவைகள் மற்றும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற சுயதொழில் புரியும் சகோதரிகளுக்கான ஊக்குவிப்...
12/10/2025

அகில இலங்கை வைஎம்எம்ஏ பேரவையின், விதவைகள் மற்றும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற சுயதொழில் புரியும் சகோதரிகளுக்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (2025-08-07) கைத்தொழில் செயற்கை உபகரணங்கள் மற்றும் தேவையான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கதுறுவெல முஸ்லிம்கொலனி
பச்சைப்பள்ளி வளாகத்தில் YMMA KADURUWELA கிளையின் பூரண அனுசரணையுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வை அகில இலங்கை வைஎம்எம்ஏ பேரவையின் பொலன்னறுவை மாவட்டப் பணிப்பாளர் தம்பாளையைச் சேர்ந்த எம்எஸ்எம்ஏ காதர் ஓய்வுபெற்ற ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

விதவைகள் மற்றும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற சுயதொழில் புரிகின்ற சகோதரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு எதிர்காலத்தில் அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய படியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த சிறப்பான நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தலைவர்களான KN DEEN PP, FAHMY OWAIS PP, THASEEM PP ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள்.

பொலன்னறுவை மாவட்ட பள்ளிவாயல்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளரும் அமானா வங்கி கதுறுவெல கிளையின முகாமையாளருமாகிய JIFRY RASIK , ஓய்வு பெற்ற அதிபரும் பொலன்னறுவை மாவட்ட பள்ளிவாயல்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொருளாளரும் YMMA KADURUWELA கிளையின் போசகருமான என் பீ எம் இப்றாஹீம் சேர், பச்சை பள்ளி நிர்வாகத் தலைவரும் பைத்துஸ்ஸகாத் அமைப்பின் கௌரவ தலைவருமான மன்சூர் ஹாஜியார், பொலன்னறுவை மாவட்ட பள்ளிவாயல்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜுனைதீன் சேர் அவர்களும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும், YMMA KADURUWELA அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அத்தோடு YMMA THAMBALA, YMMA NUGAGAHADAMANA, YMMA KATUWANVILA மற்றும் YMMA NAWASENAPURA ஆகிய கிளைகளின் கௌரவ தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உதவித்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட சகோதரிகள் அனைவரும் சமுகமளித்திருந்தார்கள்.

அனைவருக்கும் YMMA KADURUWELA சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைர்

இத்தகைய சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்து நடை பெற இறைவனின் அருளும், நமது ஒற்றுமையும் என்றும் வழிவகுக்கட்டும்

இன்று பொ/அல் மினா மஹா வித்தியாலய வளாகத்தில் O/L எழுவோர் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு YMMA அமைப்பின் ஏற்பாட்டில் சி...
11/10/2025

இன்று பொ/அல் மினா மஹா வித்தியாலய வளாகத்தில் O/L எழுவோர் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு YMMA அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் அளிக்கும் வகையில் சிறந்த ஆளுமைகளான Dr. அஹ்லாம் அவர்கள் மற்றும் இலியாஸ் சேர் அவர்கள் தலைமையேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

இலியாஸ் சேர் அவர்கள் தனது ஆழமான சிந்தனையுடன், மாணவர்களின் மனதில் ஊக்கத்தை விதைத்து, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தெளிவாகவும் ஆணித்தனமாகவும் விளக்கி உரையாற்றினார். அவரது உரை மாணவர்களுக்கு பெரும் உந்துதலை அளித்தது.

அதேபோல், Dr. அஹ்லாம் அவர்கள் தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தொடர்ந்து முயற்சி செய்வதின் அவசியத்தை வலியுறுத்தி, மாணவர்களை அவர்களது இலக்கை நோக்கி ஊக்குவித்தார்.

மேலும், இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய வர்த்தகர், Rishma Traders நிறுவனத்தின் உரிமையாளர் ஜெமில் அவர்கள் அவர்களை சிறப்பாக பாராட்டியே தீர வேண்டும். சமூகத்துக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அதேபோல், இவர் பச்சைப் பள்ளி நிர்வாகத்தின் உப தலைவராகவும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு ஒரு முன்னேற்றத்தின் புதிய திசையை காட்டிய சிறப்பான நிகழ்வாகவும், சமூக ஒற்றுமையையும் கல்வி முன்னேற்றத்தையும் ஒருசேர இணைத்த நிகழ்வாகவும் அமைந்தது.

போதைப்பொருள் ஒழிப்பு – பச்சைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிபோதைப்பொருள் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...
30/08/2025

போதைப்பொருள் ஒழிப்பு – பச்சைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் பச்சைப்பள்ளியில் இன்று (வெள்ளி) ஜும்மா தொழுகைக்குப் பிறகு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை YMMA மற்றும் பச்சைப்பள்ளி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் கந்தக்காடு புணர்வாழ்வு மையத்திலிருந்து வருகை தந்திருந்த ஜெனரல் அதிகாரி சிறப்புரையாற்றினார்.
அவர்

போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கிக்கொண்டவர்களின் நிலை

அவர்களை மீண்டும் நல்ல வாழ்வுக்குக் கொண்டுவரும் புணர்வாழ்வு முறைகள்

சமூகமாக ஒன்றிணைந்து போதைக்கு எதிராக செயல்படும் வழிகள்

பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கினார்.

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பொதுமக்களின் கேள்விகளுக்கும் விரிவான பதில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் Polonnaruwa மாவட்ட ஜமியத்துல் உலமா தலைவர் அல்ஹாஜ் எம்எம்.அலாவுதீன் மௌலவி அவர்களும் மேற்படி ஏற்பாடுகளை செய்ய உதவியதுடன் நிகழ்விலும் பங்குபற்றினார்.

நேற்று இஷா தொழுகையின் பிற்பாடு  YMMA Kaduruwela  கூட்டம் தக்கியா பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.கலந்து கொண்ட YMMA உறுப...
24/08/2025

நேற்று இஷா தொழுகையின் பிற்பாடு YMMA Kaduruwela கூட்டம் தக்கியா பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கலந்து கொண்ட YMMA உறுப்பினர்களின் சில பProject வேலைத் திட்டங்கள் பற்றியும் அவர்கள் விளக்கமாக தெரிவித்தனர்.

கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இடத்தை வழங்கி உதவிய தக்கியா பள்ளி இமாம் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த ஜஸாக்கல்லாஹு கைரன்.

Address

Polonnaruwa
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when YMMA Kaduruwela - 243 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share