01/06/2026
யாழ் பொது நூலகம் எரிப்பு.
----------------------------------------------------
எரிந்தது ஒரு கட்டிடம் அல்ல ஒரு இனத்தின் அறிவுக் களஞ்சியம்.
“ஒரு மக்களின் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு அழிப்பதும், அந்த மக்களின் இருப்பின் அடித்தளங்களை சிதைப்பதும் இனப்படுகொலையின் ஒரு வடிவமாகும்” என்று இனப்படுகொலை (Genocide) என்ற கருத்தை உருவாக்கிய சட்டவியலாளர் ரபேல் லெம்கின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில், 1981 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவுகள் தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் மிக ஆழமான காயங்களில் ஒன்றை ஏற்படுத்திய நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் அறிவுக் கோட்டையாகவும், தமிழ் பண்பாட்டு அடையாளத்தின் சின்னமாகவும் விளங்கிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இது வெறும் ஒரு நூலகத்தின் அழிவாக மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் வரலாற்று நினைவகம், அறிவுச் செல்வம், இலக்கிய மரபு மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
யாழ் பொது நூலகம் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அங்கு ஏறத்தாழ 97,000 நூல்கள், அரிய தமிழ் ஓலைச்சுவடிகள், நூற்றாண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதிகள்,
தமிழ் இலக்கியச் செல்வங்கள், வரலாற்று ஆவணங்கள், செய்தித்தாள் காப்பகங்கள், உலகில் வேறு எங்கும் கிடைக்காத பல அரிய பதிவுகள் என இந்த நூலகம் வெறும் வாசிப்பு மையமல்ல, தமிழ் மக்களின் அறிவு, பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தின் உயிர்ப்புமிக்க களஞ்சியமாக இருந்தது.
1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழர் அரசியல் உரிமைக் கோரிக்கைகள் தீவிரமடைந்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. மத்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை வேகமாகச் சிதைந்து கொண்டிருந்தது.
1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை (DDC) தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் வடக்கில் கடுமையான அரசியல் பதற்றத்தை உருவாக்கியது.
அந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேர்தலை வெல்வதற்காக தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. முழுமையான ராணுவ, பொலிசார் முற்றுகைக்குள் யாழ்ப்பாணம் உள்ளாகியது. ஏறத்தாழ 1000 மேலதிகமாக பொலிஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
UNP வேட்பாளர் தியாகராஜா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது என அரச தரப்பால் சொல்லப்பட்டாலும்
1981 மே 31 அன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மே31 முதல் ஜூன் 7 வரை யாழ்ப்பாணம் முழுவதும் அரச பயங்கரவாதம் ஆட்சி செய்தது. கொலைகள்,கொள்ளைகள், தீவைப்புகள், தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் என அனைத்தும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றன. இந்த வன்முறைகள்:
திட்டமிடப்பட்டவை,ஒருங்கிணைக்கப்பட்டவை, உயர்மட்ட அரசியல் பாதுகாப்புடன் நடைபெற்றவை
என்பதாகும். அக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிறில் மேத்தியூ மற்றும் காமினி திசாநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட UNP அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பல ஆவணங்களும் பின்னர் வெளிவந்த சாட்சியங்களும் குறிப்பிடுகின்றன.
மே 31இரவில்,
- தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகங்கள் தாக்கப்பட்டன.
- ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
- பூபாலசிங்கம் புத்தக நிலையம் எரிக்கப்பட்டது.
- யாழ்ப்பாண மத்திய சந்தையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
- பல தமிழ் வணிக நிறுவனங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன.
வடக்கு முழுவதும் தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், இந்தச் செய்திகள் பல நாட்கள் வெளி உலகிற்கு சென்றடையவில்லை.
முழுமையான நீதிமன்ற விசாரணை எதுவும் இடம்பெறாததால், அன்றைய இரவு பற்றிய தகவல்கள் பெரும்பாலும் நேரடி சாட்சியங்கள், மனித உரிமை அறிக்கைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
சாட்சியங்களின்படி, நள்ளிரவை அண்மித்த நேரத்தில் தாக்குதலாளர்கள் நூலகத்தை நோக்கிச் சென்றனர்.
அந்த நேரத்தில் நூலகம் மூடப்பட்டிருந்தது.
நூலகத்தின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தீ வைக்கப்பட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. சில நிமிடங்களில் தீ முழுக் கட்டிடத்தையும் சூழ்ந்தது. மர அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் தீயை வேகமாகப் பரப்பின.
அந்த இரவு யாழ்ப்பாண மக்கள் பலர் தொலைவில் நின்று தங்களுடைய நூலகம் எரிவதை கண்ணீருடன் பார்த்ததாக பின்னர் நினைவுகூர்ந்துள்ளனர்.
அந்தக் காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையை ஆராய்ந்த மேற்கத்திய எழுத்தாளர் நான்சி முர்ரே இவ்வாறு எழுதினார்,
“95,000 நூல்களும் பெறுமதியற்ற கையெழுத்துப் பிரதிகளும் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தின் சின்னம் அழிக்கப்பட்டது. ஆனால் தேசிய பத்திரிகைகளில் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.”
அவரது கருத்துப்படி, நூலக எரிப்பு மட்டுமல்ல; அதனைச் சுற்றிய மௌனமும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
பண்பாட்டு அழிவின் சின்னம்
பல வரலாற்றாசிரியர்கள் யாழ் நூலக எரிப்பை உலகின் முக்கியமான பண்பாட்டு அழிப்பு சம்பவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.
ஒரு மக்களின் மொழி மீண்டும் கற்பிக்கப்படலாம். ஆனால்:
எரிந்த ஓலைச்சுவடிகள்,
அழிந்த கையெழுத்துப் பிரதிகள்,
இழந்த வரலாற்றுச் சான்றுகள்
மீண்டும் உருவாக்க முடியாது.
அதுவே தமிழ் மக்களின் மனதில் ரணமாக இன்னமும் இயல்கிறது.
யாழ் நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவில் ஆழமான உளவியல் முறிவை ஏற்படுத்தியது.ஏற்கனவே,
1956 தனிச் சிங்களச் சட்டம்,
1958 இன வன்முறைகள்,
பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கை,
1974 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு உயிரிழப்புகள்
ஆகிய காரணங்களால் விரக்தியடைந்திருந்த தமிழ் சமூகத்தில், இந்தச் சம்பவம் மேலும் நம்பிக்கையிழப்பை உருவாக்கியது.
பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழ் இளைஞர்களிடையே அரசியல் தீர்வின் மீதான நம்பிக்கை குறைவதற்கும் ஆயுதப் போராட்ட ஆதரவு அதிகரிப்பதற்கும் இந்தச் சம்பவம் காரணமான முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் மட்டுமல்ல. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இது தமிழர்களுக்கான எச்சரிக்கை மிகுந்த நாள். இதனை ஏன் நினைவுகூர வேண்டும்?
ஒரு சமூகம் தனது துயரமான வரலாற்றை நினைவுகூர்வது பழிவாங்குவதற்காக அல்ல.
மாறாக,உண்மையை பாதுகாக்க,
தவறுகளை மீண்டும் நிகழ விடாமல் தடுக்க, எதிர்கால தலைமுறைகளுக்கு பாடம் கற்பிக்க. யாழ் நூலக எரிப்பு ஒரு கட்டிட அழிவு சம்பவமாக அல்லாமல், தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவுசார் வரலாற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக நினைவுகூரப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்த விசாரணைக் குழு, சில பொலிஸ் அதிகாரிகள் நூலக அழிவில் தொடர்புடையதாக முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.
எனினும், முழுமையான குற்றவியல் விசாரணை நடைபெறவில்லை.
யாரும் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படவில்லை.
இறுதி நீதித்தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை அங்கமாக நீதியை நோக்கி காத்திருக்கிறது யாழ். பொது நூலகம்.யாழ் பொது நூலகம் எரிப்பு.

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை அங்கமாக நீதியை நோக்கி காத்திருக்கிறது யாழ். பொது நூலகம்.
#ஈழம்