09/11/2025
✨ பல்கலைக்கழகத்திற்கு தெரிவான கலைப்பிரிவு மாணவர்களின் கெளரவிப்பு விழாவும் பரிசளிப்பும் நிகழ்வும் - 2025
ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தில் கா.பொ.த உயர்தரத்தில் 2022, 2023 மற்றும் 2024 காலப்பகுதியில் கலைப்பிரிவு ரீதியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் அம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
"Arts Network Oluvil" அமைப்பின் 2023 கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் அதிபர், அஷ்ஷேஃக் UK. அப்துர் ரஹீம் (நழீமி) அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக உயர்தர பிரிவு பகுதித் தலைவர் மற்றும் உயர்தர பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எப்போதும் செய்த நன்றிகளை நாம் எப்போதும் மறக்க கூடாது அந்த வகையில் எங்களுக்கு சிலரால் நிதியுதவி வழ்ங்கப்பட்டது அந்தவகையில்
📍FAJEETH HOTEL
📍UW FISH BRAND
📍K.M.NISATH
📍FOOD POINT
📍UBAITHEEN STORE
ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்