30/01/2026
👨🎓ஒலுவில் பட்டதாரிகள் சங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்
🚨 அன்பான #இறுதி நினைவூட்டல்
எமது ஒலுவில் பட்டதாரிகள் சங்கமானது உங்களிடம் அறியத்தருவது யாதெனில், ஒலுவில் பிரதேசத்தின் மிக முக்கியமானதும் நீண்ட நாள் தேவைகளில் ஒன்றானதுமான ஒலுவில் பட்டதாரிகள் சங்கம் ஒன்றினை எமது ஊரில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் இளமானி பட்டம் பெற்ற பட்டதாரிகள் சிலரை ஒன்றிணைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு கருத்தியல் ரீதியாக உதயமாகி கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்தோம்.
மேலும் தேவைகருதி எதிர்காலத்தில் இவ்வமைப்பபு ஒலுவில் பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு அதன் பணிகளை பரந்த அளவில் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தாங்களையும் இவ்வமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு உங்களிடம் விண்ணப்பம் கோருகிறோம். எனவே எமது அமைப்பில் இணைந்து எமது அமைப்புக்கும் எமது சமூகத்திற்கும் பல நன்மைகளை செய்யுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
🛑 தகைமை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள், ஏனைய அரச பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்று இளமாணி பட்டம் ஒன்றினை பெற்ற ஒலுவிலைப் பிறப்பிடமாகவும் அல்லது ஒலுவிலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அனைத்துப் பட்டதாரிகளும் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெற தகுதியுடைவர்களாவர்.
விண்ணப்பிக்கும் முறை 👇🔗
கீழே உள்ள link ஐ கிளிக் செய்து அதில் உள்ள Google from இனை பூரணப்படுத்தி அனுப்பிவைக்கவும்.
https://forms.gle/Mssx6t8xWqTee9dK6
🚨விண்ணப்ப முடிவுத்திகதி: 13/02/2026
For more information call or WhatsApp 👇
🔘IL. Arshath Ali - (Vice President) 0776198131
🔘S. Hazeek - (Organiser) 0777771679
🔘AGM. Azhar (Organiser Abroad) - +966 58 031 2079
செயலாளர்,
ஒலுவில் பட்டதாரிகள் சங்கம்,
ஒலுவில்.