Gopalapuram Nilaveli Janaza Association

Gopalapuram Nilaveli Janaza Association Assalamu Alaikum,
Welcome to the official page of Gopalapuram Nilaveli Janaza Association. Please follow and stay connected.

This page will share community updates, Janaza announcements, and association activities.

*பொது அடக்கஸ்தலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டமை*இன்று (10.11.2025) திருகோணமலை நிலாவெளி கோபாலபுரத்தில் அமைந்துள்ள மும்மத...
10/11/2025

*பொது அடக்கஸ்தலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டமை*

இன்று (10.11.2025) திருகோணமலை நிலாவெளி கோபாலபுரத்தில் அமைந்துள்ள மும்மத மக்களும் பொதுவாக பயன்படுத்தி வரும் பொது அடக்கஸ்தலத்திற்கு (Cemetery) மின்சாரம் வழங்கும் பணிச் செயல் எங்கள் கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கத்தின் முன்னெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இது எங்கள் சமூகத்தின் நலனுக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.இந்த புனிதமான பணியை எளிதாக நிறைவேற்ற உதவியவர்களான, *கெளரவ நிமலஹாசன்*
(உருப்பினர் – குச்சவெளி பிரதேச சபை), *வலீத் ஹாஜியார்*
(தலைவர் – திருகோணமலை மாவட்ட ஜனாஸா சங்கம்), *சஜித்*
(நிலாவெளி மின்சாரம் திணைக்கள மேலதிகாரி) மற்றும்Sun Star Nilaveli முகாமையாளர் வசீம், *பெளமி* நானா(CEB-Nilaveli)

மேலும் தன்னார்வத் துணையுடன் உழைத்த
கோபாலபுரம் இளைஞர்கள்,
மஹல்லா வாசிகள்,
மற்றும் அனைத்து சமூக சகோதரர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் கோபாலபுரம் சமூகத்தின் நலனுக்காக
இது போன்ற மேலும் பயனுள்ள பணிகளில்
நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
இன்ஷா அல்லாஹ்.

09/11/2025
💡 *நிலாவெளி கோபாலபுரத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தம்*முன்பு ஒளிராத நிலையில் இருந்த மின்விளக்குகள் அகற்றப்பட்டு, புத...
07/11/2025

💡 *நிலாவெளி கோபாலபுரத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தம்*
முன்பு ஒளிராத நிலையில் இருந்த மின்விளக்குகள் அகற்றப்பட்டு, புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய விளக்குகள் பொருத்தப்பட்ட இடங்களாவன கோபாலபுரம் பாடசாலை வீதி, ஸாஹிரா ஹோட்டல் வீதி, ஸ்ரீ கண்ணகி அம்மன் கோவில் வீதி

இந்த நன்மை நிறைந்த பணியை முன்னெடுத்து ஏற்பாடு செய்த:
*கௌரவ நிமலஹாசன்*
(உறுப்பினர் – குச்சவெளி பிரதேச சபை). திரு.இந்திரஜித்-செயலக அதிகாரி,குச்சவேலி பிரதேச சபை

🤝 *Vice Chairman Imjad*
மற்றும் *கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கம்*

இதற்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...7.11.2025

 #கோபாலபுரம்_நிலாவெளி_மக்பறாவில்_புதிய_கிணறு_திறப்பு_விழாதிருகோணமலை நிலாவெளி கோபாலபுரம் முகைதீன் பள்ளிவாசலுக்கு உட்பட்ட ...
02/11/2025

#கோபாலபுரம்_நிலாவெளி_மக்பறாவில்_புதிய_கிணறு_திறப்பு_விழா

திருகோணமலை நிலாவெளி கோபாலபுரம் முகைதீன் பள்ளிவாசலுக்கு உட்பட்ட மக்பறா வளாகத்தில் புதிய கிணறு திறப்பு விழா இன்று ஆன்மிக மகிழ்ச்சி மற்றும் மரியாதை மிக்க சூழலில் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்த அருமையான நற்பணிக்குத் துணைநின்று ஆதரவு வழங்கிய அமைப்பு மற்றும் #கோபாலபுரம்_நிலாவெளி_ஜனாஸா_சங்க_நிர்வாகத்தினருக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.

திறப்பு விழா மரியாதைக்குரிய சியாவுல் ஹக் மெளலவி அவர்கள் வழங்கிய துஆவால் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கு கொண்டு விழாவை சிறப்பித்தவர்களாவன #கோபாலபுரம்_பள்ளிவாசல்_முன்னாள்_கெளரவ மற்றும் மரியாதைக்குரிய தலைவர் றபாய் ஹாஜியார், MMM முக்தார், மாவட்ட இயக்குநர் , #ஸ்ரீ_கண்ணகி_அம்மன்_கோவில் கெளரவ தலைவர் சுமன், உரிமையாளர் அர்சாத், #கோபாலபுரம்_முகைதீன்_பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், #பள்ளிவாசல்_இமாம் நவ்ஷாத், சமூக நலன் விரும்பிகள், ஊர் இளைஞர்கள், மஹல்லா மக்கள் மற்றும் உலமாக்கள்.

இந்த நற்பணிக்காக கலந்து கொண்டு, உழைத்து, சேவை செய்து, ஆதரவு வழங்கிய அனைவருக்கும்
கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். 🤲

*நினைவு கூறல் & சமூக ஒற்றுமையின் சிறப்பான தருணம்**திருமதி கோமதி ஆசிரியையாரின் நினைவைப் போற்றி, அவருடைய கணவரான கொளவத்துக்...
23/10/2025

*நினைவு கூறல் & சமூக ஒற்றுமையின் சிறப்பான தருணம்*

*திருமதி கோமதி ஆசிரியையாரின் நினைவைப் போற்றி, அவருடைய கணவரான கொளவத்துக்குறிய திரு. யோகநாதன் கிரி* அவர்களின் முன்னிலையில்,
இந்த கிணறு கட்டுமானப் பணிகள் கோபாலபுர பொது மையானத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்:
🔹 நமது ஊரின் மதிப்பிற்குரிய பிரதேச சபை உறுப்பினர் *திரு. நிமலகாசன் அண்ணன்,*
🔹 முன்னாள் கோபாலபுர பள்ளிவாசல் தலைவர் *கெளரவ ரபாய் ஹாஜியார்,*
🔹 ஸ்ரீ கண்ணகி அம்மன் கோவில் தலைவர் *கெளரவ சுமன் மற்றும் பூசாரி பாசுபதன்,*
🔹 *பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள்,*
🔹 *கோபாலபுர நிலாவெளி ஜனாசா சங்க உறுப்பினர்கள்.*

முக்கியமான தருணமாக,
இந்த நிகழ்வு நமது ஊரின் இன, மத ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கும் உண்ணதமான உதாரணமாக அமைந்துள்ளது.

🙏 இதற்கான முழு பொருளாதார ஒத்துழைப்பை அளித்த
Coconut Leaf Shadow உரிமையாளரான *திரு. கிருஷாந்தன்* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*இது நமது சமூகத்தின் ஒன்றிணைந்த மனப்பான்மையையும், நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த நினைவாகும்.Date.23.10.2025

📍 இன்று கோபாலபுர பள்ளிவாசலில் ஒரு அருமையான ஆன்மீக ஒன்றுகூடல்நிலாவெளி மர்க்கஸ் ஏற்பாட்டில் இன்று கோபாலபுரம், நிலாவெளியின்...
20/10/2025

📍 இன்று கோபாலபுர பள்ளிவாசலில் ஒரு அருமையான ஆன்மீக ஒன்றுகூடல்
நிலாவெளி மர்க்கஸ் ஏற்பாட்டில் இன்று கோபாலபுரம், நிலாவெளியின் அருகில் அமைந்துள்ள சிறிய ஊரில் ஒரு மிகப்பெரிய ஒன்றுகூடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கண்மணி நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மற்றும் இன்றைய இளைய தலைமுறையில் காணப்படும் சீரற்ற திருமணப் பழக்கங்கள், அவற்றை எவ்வாறு இஸ்லாமிய முறையில் சீர்திருத்த வேண்டும் என்பதையொட்டி அஷ்ஷேக் சாதிக் ஹாஷிமி அவர்கள் ஆழமான, தெளிவான விளக்கங்களுடன் பயான் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இக்பால் நகர் முதல் புல்மோட்டை, மட்டக்களப்பு வரையிலான பல புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக சிந்தனையாளர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் ஜனாஸா சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இனிய மதிய உணவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஒன்றுகூடல் எமது சமூகத்தில் நல்ல மாற்றத்திற்கான ஒரு முக்கிய அடிப்படையாக அமைய அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்வோம்.
ஆமீன்.

20/10/2025

Well construction work
2.10.2025

20/10/2025

*அல்ஹம்துலில்லாஹ்...*

இன்று, கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கம் புதிய கிணறு கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் நமது கெளரவ கோபாலபுரம் மசூதித் தலைவர் ரஃபாய் ஹாஜியார் மற்றும் சாஹிர் நானாவின் முன்னிலையிலும் தொடங்கியது.

அதே நேரத்தில், மற்றொரு முக்கியமான பணியும் தொடங்கப்பட்டது. பக்கத்து கல்லறையிலிருந்து நமது மக்பறா வரைக்குமான நீர் வழங்கல் பாதை தோண்டப்பட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த முயற்சி வெற்றியடைய அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். 🤲

கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கம்...Date.26.9.2025

Janaza association and masjid name board fixed26.8.2025
20/10/2025

Janaza association and masjid name board fixed
26.8.2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு*அல்ஹம்துலில்லாஹ், கோபாலபுரம் நிலாவெளி மையவாடியில் நீர் வழங்கல் திட்டத்தை ந...
20/10/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு*

அல்ஹம்துலில்லாஹ், கோபாலபுரம் நிலாவெளி மையவாடியில் நீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக முடித்துள்ளோம், இது எங்கள் சகோதரர்களின் கல்லறைக்கும் பயனளிக்கும் என நம்புகின்றோம்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஜனாஸா சங்கத் தலைவர் கௌரவ வலீத் ஹாஜிக்கு ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என யார்...யார் தங்கள் துஆவில் சேர்ந்தவர்களுக்கும், இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு இங்கேயும், மறுமையிலும் அல்லாஹ் சிறந்த வெகுமதி அளிப்பானாக,,,,ஆமீன.16.9.2025

Address

10th Milepost, Gopalapuram Nilaveli, Zahira Hotel Road, Trincomalee
Nilaveli
31010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopalapuram Nilaveli Janaza Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share