Mutur Civil Forum - MCF

Mutur Civil Forum - MCF இது சமூக,பொருளாதார மற்றும் கலாசார மாற்றத்தை நோக்கிய மூதூர் சிவில் சமூகத்திற்கான ஒன்றியம்

MCF அமைப்பினால் மாவிலாறு அல்லைத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு! தித்வா சூறாவளியால் ஏற்பட்ட...
15/02/2026

MCF அமைப்பினால் மாவிலாறு அல்லைத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு!

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரினால் மூதூர் பிரதேசம் பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இதனையடுத்து மாவிலாறு தொடக்கம் மகாவலி கங்கை வரை சென்றடையும் நீர் வடிகாலமைப்புக்களை திட்டமிட்டு சீர்படுத்தும் தூர நோக்கில் மூதூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்தோரோடு இணைந்து MCF அமைப்பு முன்னெடுத்து வரும் திட்டத்தின் அறிமுக அறிக்கையொன்று விவசாய நீர்ப்பாசனத்துறை கௌரவ அமைச்சர் K.T.லால் காந்த அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சேதமடைந்த மாவிலாறு மகாவலி நதி வெள்ளத் தடுப்பு அணை மற்றும் அல்லைத் திட்டத்தின் நீர்ப்பாசன முறையை மீண்டும் கட்டி எழுப்பும் திட்டம் கடந்த (13.02.2026) அன்று கௌரவ அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் போதே கௌரவ அமைச்சரிடம் குறித்த அறிக்கை MCF மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டு எதிர்காலத்தில் கௌரவ அமைச்சரை சந்தித்து இதன் முழுமையான திட்ட முன்மொழிவை சந்திப்பதற்கும் அனுமதி பெறப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறானதொரு வரலாற்று சிறப்பு மிக்க வேலைத்திட்டத்தினை மூதூர் சமூகம் சார்பாக MCF அமைப்பு வரவேற்பதோடு, எதிர்காலத்தில் இதற்கு தேவைப்படும் போது ஒத்துழைப்புக்களையும் MCF அமைப்பு வழங்க ஆர்வமாக உள்ளது.

🔰மூதூர் பிரதேச செயலக புதிய செயலாளருடன் மூதூர் சிவில் போரம் குழு சந்திப்பு!மூதூர் பிரதேச செயலக புதிய செயலாளருடன் மூதூர் ச...
13/02/2026

🔰மூதூர் பிரதேச செயலக புதிய செயலாளருடன் மூதூர் சிவில் போரம் குழு சந்திப்பு!

மூதூர் பிரதேச செயலக புதிய செயலாளருடன் மூதூர் சிவில் போரம் குழுவினர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது,

மூதூர் சிவில் போரத்தின் கட்டமைப்பு மற்றும் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் இலக்குகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு,
மேலும்
- விரைவில் ஒன்றியத்தினை பதிவு செய்ய உங்கள் ஒத்துழைப்பு அவசியம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு, இணைந்து செயல்படுவதற்கும் பிரதேச செயலாளர் ஆர்வம் தெரிவித்தார்.
-நீண்ட காலமாக மூவின சமூகங்களும் தூரமாகி கிடக்கின்றன . இன்றய காலகட்டத்தில் சகல சமூகங்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் அபிவிருத்தி நோக்கி பயiணிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை எமது குழு இதன்போது பிரதேச செயலாளருக்கு விளக்கியிருந்தது. இதன்போதூ சமதான நல்லிணக்க பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ளது. அதனையும் நீங்கள் பயன்படுத்த முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

மேலும் பெரு வெள்ள அனர்த்தம் எதிர்காலத்தில் வராமல் தடுக்கும் ஒரு செயலதிட்டத்தினை தயாரித்து மக்கள் கையொப்பங்களை திரட்டி அரசாங்கத்திட்க்கு சமர்ப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதையும் அதன் பிரதியினை DCC ற்கும் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றியும் இதன்போது நினைவூட்டப்பட்டது.

Media Unit - MCF

Address

A15 Road, 3CD Junction
Mutur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutur Civil Forum - MCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share