12/11/2025
பிறந்தநாள் நிகழ்வு 09/11/2025
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளின் புரட்டாதி , ஐப்பசி மாதங்களில் பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை இல்லத்தலைவர் திரு . ச மோகனபவன் அவர்களின் தலைமையில் 3.30 மணியளவில் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது .
இந் நிகழ்வில் விருந்தினராக திரு ப. ஜோயல் பியசீலன் அவர்கள் அதிபர் , கிளி / கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் திருமதி ஜோயல் பியசீலன் சுகந்தினி அவர்கள் ஆசிரியர், கிளி / பாரதி வித்தியாலயம் அவர்களும் இல்ல செயலாளர் ,இல்ல சிரேஷ்ட உபதலைவர் ,முகாமைக்குழு உறுப்பினர்கள் ,பணிப்பாளர்கள் ,பணியாளர்கள் இல்லக் குழந்தைகள் கலந்து சிறப்பித்ததுடன் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பரிசில்களும் வழங்கப்பட்டன . அத்தோடு எமது சிறுவர் இல்ல மாணவர்களுக்கான கராத்தே தரம் உயர்த்தல் பரீட்சை நடாத்தப்பட்டு சித்தி அடைந்த மாணவர்களுக்கான பட்டி மற்றும் சான்றிதல் வழங்கி வைக்கப்பட்டது .