22/05/2025
அன்புள்ள தோழங்களே, நம்ம நெருங்கிய உழைச்சாளிகளே, தங்க மனசு காரங்களே,
ஜூன் மாதக் காற்று ஒரு வானவில் பாட்டு எடுத்து வருதே – அந்த பாட்டு நம்ம மலையில இருந்து வருதே. தேயிலை வாசமும், எள்ளு வியர்வை கலந்த கனவுகளும் சேர்ந்த அந்த குரல், முன்னாடி மெல்லமெல்ல கிசுகிசுத்துச்சே... இப்போ அந்தக் குரல் சத்தமா மேல மேல கிளம்பிரிச்சே!
நம்ம அருவி மலையக குயர் வலையமைப்பு ஹட்டனு வீதில வண்ணமா, பெருமையா, ரொம்ப சத்தமா வானவில பூச்சோற போறோம். அதுல நீங்களும் வரணும்!
இது நடக்குறதுக்கு மட்டும் இல்ல – நடனமாடணும், கனவு காணணும், நம்ம குயர் உயிர் முக்கியம்னு ரொம்ப சத்தம ஹட்டனுக்கே கேக்குர மாரி சொல்லணும்,
நம்ம காதல் புனிதம்னு காட்டணும்! இது எல்லாத்துக்கு தான்….
மலையகப் வானவில் சுயமரியதை பெருமித நடை & கலாச்சாரக் கொண்டாட்டம் 2025
• தேதி: ஞாயிறு, ஜூன் 1, 2025
• நேரம்: காலை 10 மணிக்கே
• நடப்பது: ஹட்டன் பஸ் ஸ்டாண்ட்லிருந்து நகரசபை வரை
• அதுக்கப்புறம்: நம்ம பக்கம் இருக்கிற LGBTQIA+ மக்கள் கலைகல காட்ட போறாங்க!
என்ன நடக்கப்போறுது?
சுயமரியதை நடைப்பயணம்:
நம்ம எல்லாரும் – தோழன் தோழியோட, உரு உரையா, சத்தமா நடக்கப்போறோம், பரை சத்தோ ஊர கிழிக்க வானவில் கொடி மேல பறக்க, , நம்ம வண்ணமான பெருமையையும் சேத்துக்கிட்டே நடந்து காட்டுவோம்.
நம்ம முன்னோர்கள் சந்தோஷமில்லாம மௌனமா நடந்த பாதையில, இப்போ நம்ம ரொம்ப சத்தமா நடக்கபோறோம் – நம்ம மக்களோட அன்புக்காகவும், உரிமைக்காகவும், உயிர்க்காகவும்!
கலாச்சார நிகழ்ச்சிகள்:
நடப்பதுக்குப்பிறகு, ஒரு வண்ணக் கலையரங்கம்! பரதநாட்டியத்துக்கு இடையில, கவிதைப் பாடலும், கதை சொல்லலும், நம்ம குயர் குரல்களோட திறந்த மைக் மேடைகளும்!
மலையகமா இருந்தாலும், நம்ம குரல் உலகளவில புரியவைக்கும்.
அன்புடன் கேட்டுக்குறோம்… நீங்க வந்துட்டு பாத்துட்டு மட்டும் போயிடாதீங்க…
நம்ம கூட சேர்ந்து நடக்கணும், உங்க முகம் நம்ம மாதிரி யாருக்கெல்லாம் நம்பிக்கையா இருக்கணும், உங்க ஆவலும், ஆளுமையும் நம்ம பயணத்துக்கு துணையா இருக்கணும்!
நம்ம பெருமையா நடக்கப்போறோம், அன்போட பாடப்போறோம்,, தைரியமா பேசப்போறோம், நீங்களும் நம்ம கூட வாங்க!
Dear comrades, colleagues, and kindred hearts,
The winds of June carry a song —A song born from the hills, from tea-scented soil and sweat-soaked dreams, from voices that once whispered… and now rise in chorus. The Aruvi Malaiyaga Q***r Network is painting the streets of Hatton with PRIDE, POWER, and a whole lotta JOY — and you, dear comrade, are invited! not just to walk — but to dance, dream, and declare that q***r lives matter, q***r love is sacred, and Malaiyagam shines in every colour of the rainbow.
Malaiyaga Pride & Cultural Celebration 2025
• Date: Sunday, 1st June 2025
• Time: 10:00 AM onwards
• Route: March from Hatton Bus Stand to Hatton Municipal Council
• Followed by: Performances by q***r folks
What’s Happening?
The Pride March – We’ll walk together – side by side, heart to heart – with drums, flags, glitter, and unapologetic pride. our footsteps will echo the stories of our ancestors who carried burdens silently. Now we walk loud, bold, and free — for love, justice, and joy.
Cultural Festival –After the march, stay for an explosion of local art and q***r magic!Traditional Bharatanatyam meet voguing and drag Q***r poetry slams, storytelling, and open mic Performances by LGBTQIA+ artists from Malaiyagam and beyond.
We ask you —not just to attend, but to stand beside us, to march with us, to lend your presence, your power, and your promise to a future that includes us all.
We walk with pride,We sing with love,We speak with courage — and we hope to see you walking beside us.