All Civil Societies Kalmunai-North DS Division.

All Civil Societies Kalmunai-North DS Division. அனைத்து சிவில் அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகபிரவு

31/07/2025
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தோழர் அனுர குமார திஸாநாயக்க அவர்களை வாழ்த்தி வ...
22/09/2024

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தோழர் அனுர குமார திஸாநாயக்க அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
எமது அனைத்து சிவில் சமூகங்களின் முயற்சியில் இந்த தேர்தலில் எமது கல்முனை தமிழ் மக்களின் 10000 ற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியில் இணைந்துள்ளோம்.தொடர்ந்தும் எமது மக்களின் நீண்ட நாள் போராட்டம் உங்களது தலைமைத்துவத்தின் கீழ் தீரும் எனும் நம்பிக்கையில் தொடர்ந்து உங்களுடன் பயணிப்போம்.

அனைத்து சிவில் அமைப்புகள்
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு

ஊடக வெளியீடு..அனைத்து சிவில் சமூகம் -கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு
28/06/2024

ஊடக வெளியீடு..
அனைத்து சிவில் சமூகம் -கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு

11/06/2024

80 தாவது நாளை தொடும் மக்கள் போராட்டமும் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் நாடகங்களும்.

நாளை 2024/06/12 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்து நடைபெறும் மக்கள் போராட்டத்தின் 80 தாவது நாளாகும்.

இதுவரை மாவட்ட செயலாளர் இந்த விடயம் தொடர்பில் கவனமெடுக்காது பக்கச்சார்பாக இருக்கிறார்.அரசியல்வாதியின் பொம்மையாக செயல்படுகிறார்.

அமைச்சின் செயலாளர் இந்த விடயம் தெரியாது என மழுப்புகிறார்.

அமைச்சர் சத்தமின்றி இருக்கிறார்.

இராஜாங்க அமைச்சரும் மௌனம் காக்கிறார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் இது தொடர்பாக ஊமையாகிவிட்டார்.

இவர்கள் எவரும் இந்த விடயம் தங்களுக்கு தெரியாத என கூற முடியாது.ஒவ்வொரு நாள் போராட்டத்தின் முடிவிலும் இவர்களுக்கு அனைத்து சிவில் சமூகத்தினால் கடிதங்கள் பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது.இதுவரை ஒவ்வொருவருக்கும் இன்றுடன் 79 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இடையிடையே எமது கையாலாகாத பா.உக்களும் இராசாங்க அமைச்சர்களும் எங்களது கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் எம்மை சந்திப்பதை தவிர்க்கின்றனர்.

இங்கு வந்து படம் ஓட்டாதீர்கள்.உங்கள் கணிப்பு பிழை.உங்களிடம் ஒப்பந்த வேலை செய்பவர்களை நம்பி களத்தில் இறங்கி அவமானப் படுவீர்கள்.அவர்களை ஊரில் யாரும் மதிப்பதில்லை.

தீர்வோடு வாருங்கள் எங்களது 30000 வாக்குகளை தருகிறோம்.அது யாராக இருந்தாலும்.ஹரீஸ் MP என்றாலும் சரி முஷாரப் MP என்றாலும் சரி அதாவுல்லா MP என்றாலும் சரி.

කල්මුණේ උතුරු ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට ක්‍රියාත්මක වන පරිපාලන පීඩනයට එරෙහිව සාමකාමී විරෝධතාවයේ 50 වැනි දින සැමරීමට සහ ...
12/05/2024

කල්මුණේ උතුරු ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට ක්‍රියාත්මක වන පරිපාලන පීඩනයට එරෙහිව සාමකාමී විරෝධතාවයේ 50 වැනි දින සැමරීමට සහ විසඳුමක් ඉල්ලා අද දින එක්රැස් වූ 5000 ට අධික සියලුම කල්මුණේ ජනතාවට සහ සියලුම සිවිල් සමාජවලට ස්තුතිය.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது பிரயோகிக்கப்படும், நிர்வாக அடக்குமுறைகளைக எதிர்த்தும் தீர்வினை பெற்றுத் தரக் கோரியும் நடைபெறும் அமைதி வழி போராட்டத்தின் 50 வது நாளினை அனுஸ்டிப்பதற்காக இன்று ஒன்று கூடி தமது ஒற்றுமையினை வெளிப்படுத்திய 5000 த்திற்கும் அதிகமான அனைத்து கல்முனை வாழ் மக்களுக்கும் அனைத்து சிவில் சமூகங்களின் நன்றிகள்.

11/05/2024

நாள் -12/05/2024
நேரம் -காலை 8:00
இடம் -பிரதேச செயலகம் கல்முனை வடக்கு முன்பாக

11/05/2024
 #46வது  #நாள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரி...
10/05/2024

#46வது #நாள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொது மக்களாலும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களால் இன்று நடாத்தப்பட்ட போராட்டமானது இன்று (2024/05/09) நாற்பத்தாறாவது நாளாக மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது .
#(2024/05/09) நாற்பத்தாறாவது நாள் போராட்டத்தில் கல்முனை - 2 மற்றும் பாண்டிருப்பு - 2 னைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
பொது மக்கள்
கிராம அபிவிருத்தி சங்கங்கள்
மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்
விளையாட்டு கழகங்கள்
இளைஞர் கழகங்கள்
இந்து கோவில்கள்
ஏனைய கிராமிய மட்ட அமைப்புகள்
மற்றும் சமூக நலன் விரும்பிகள்

 #45வது  #நாள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரி...
10/05/2024

#45வது #நாள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொது மக்களாலும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களால் இன்று நடாத்தப்பட்ட போராட்டமானது இன்று (2024/05/08) நாற்பத்தைந்தாவது நாளாக மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது .
#(2024/05/08) நாற்பத்தைந்தாவது நாள் போராட்டத்தில் பாண்டிருப்பு - 1A மற்றும் பாண்டிருப்பு - 1B னைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
பொது மக்கள்
கிராம அபிவிருத்தி சங்கங்கள்
மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்
விளையாட்டு கழகங்கள்
இளைஞர் கழகங்கள்
இந்து கோவில்கள்
ஏனைய கிராமிய மட்ட அமைப்புகள்
மற்றும் சமூக நலன் விரும்பிகள்

Address

WRDS Building, Waving Center Road, Pandiruppu 1C
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Civil Societies Kalmunai-North DS Division. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All Civil Societies Kalmunai-North DS Division.:

Share