கல்முனை தமிழ் இளைஞர் சேனை

கல்முனை தமிழ் இளைஞர் சேனை செல்வோம் எங்கும் !
வெல்வோம் எதிலும் !

10/04/2026
நன்றி தெரிவித்தல் கல்முனை மாநகரில் கல்முனை இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026 ம் ஆண்டுக்கான பொங்கல் விழா மிக கோலா...
19/01/2026

நன்றி தெரிவித்தல்

கல்முனை மாநகரில் கல்முனை இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026 ம் ஆண்டுக்கான பொங்கல் விழா மிக கோலாகலமாக 18.01.2026 அன்று கலை கலாசார நிகழ்வுடன் நடைபெற்று இனிதே நிறைவானது.

இந்நிகழ்விற்கு எமது அழைப்பில் வருகை தந்து கலந்து கொண்ட அதீதிகள்,
அனைவருக்கும் எங்களது மனம் நிறைவான நன்றிகள்.

மேலும்
விஷேடமாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாடகர் சபேஷன் அவர்களுக்கு நன்றிகள்

அத்தோடு
எங்களோடு இணைந்து இவ்விழாவிற்கு கரம் கோர்த்த
தொழிலதிபர்கள்
நிறுவன உரிமையாளர்கள்
வெளிநாட்டு நண்பர்கள்
மாதர் சங்கங்கள்
அபிவிருத்தி சங்கங்கள்
ஆலய நிருவாகங்கள்
அறநெறி பாடசாலைகள்
விளையாட்டு கழகங்கள்

மற்றும்
கலைநிகழ்வுகள் வழங்கிய கலை குழுவினர்கள்

மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும்

மனமார்ந்த நன்றிகள்

அத்தோடு
கல்முனை மாநகர சபை ஊழியர்கள்
கல்முனை பொலிஸார்
அவர்களுக்கும்
எங்களது மனநிறைவான நன்றிகள்.

பொங்கல் விழா 202518.01.2025காலை 8.30 பழைய பேரூந்து நிலையம்வருக ! வருக !
14/01/2026

பொங்கல் விழா 2025
18.01.2025
காலை 8.30
பழைய பேரூந்து நிலையம்
வருக ! வருக !

கல்முனை மாநகரிலே
13/01/2026

கல்முனை மாநகரிலே

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுசுமந்த கல்முனை இளைஞர்கள் இன்று மே 18. 2009 ஆம் ஆண்டு இதே நாளில், முள்ளிவாய்க்கால் மண்ணில...
18/05/2025

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுசுமந்த கல்முனை இளைஞர்கள்

இன்று மே 18.
2009 ஆம் ஆண்டு இதே நாளில், முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினம் சந்தித்த பேரவலத்தின் கசப்பான நினைவுகை நினைவு கூறும் வைபவம் இன்று கல்முனை இளைஞர் சேனை ஏற்ப்பாட்டில் கல்முனை நகர மத்தியில் அமைதியான முறையில் இடம்பெற்றது இதில் தமிழுணர்வுமிக்க் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

அந்த இறுதி நாட்களில், உணவுக்கும் நீருக்கும் வழியின்றி, அடிப்படை வசதிகள்கூட அற்று, குண்டுகளின் சத்தத்திற்கும் மரண ஓலங்களுக்கும் மத்தியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.குழந்தைகள், பெண்கள், முதியோர் எனப் பாராது நடந்த கோரத் தாண்டவம், மனித மனங்களை உலுக்கும் ஒரு சோக அத்தியாயம். உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அந்தத் தழும்புகளுடனும், இழந்த உறவுகளின் நினைவுகளுடனும் வாழ்கின்ற எம்மக்களின் சோகத்தில் பங்குதாரர் ஆகி எம் இன உணர்வை அடுத்த தலைமுறக்கும் எடுத்து செல்ல வேண்டி உள்ளது.

முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தத்திற்கும், இழந்த உயிர்களுக்கும், சிதைந்த கனவுகளுக்கும் நீதி கிடைக்கும் வரை, தமிழ் மக்களின் துயரம் முழுமையாகத் தீராது.

அந்த மண்ணில் புதையுண்ட நினைவுகளுக்கும் என்றுமே எம் மனதில் இடங்கொண்ட அந்த உயிர்களுக்கும் எமது அஞ்சலியை செலுத்துவோம்

#மே18 #முள்ளிவாய்க்கால் #தமிழினம் #நீதி #இலங்கை

நேற்றய நாளில் எம்மவரை நினைத்து நினைவேந்தல் செய்த வேளை
28/11/2024

நேற்றய நாளில் எம்மவரை நினைத்து நினைவேந்தல் செய்த வேளை

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் கல்முனை வடக்கு பிரதேசத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக  பாண்டிருப்பு ,சேனை...
27/11/2024

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் கல்முனை வடக்கு பிரதேசத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக பாண்டிருப்பு ,சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை,கல்முனை,நற்பிட்டிமுனை, துரைவந்தியமேடு,பிரதேசங்களில் அடைமழை காரணமாக ஏற்பட்ட அசௌகரியமான நிலையில் இருந்த மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முயற்சிகளின் பிரகாரம் தமிழ் இளைஞர் சேனையோடு இணைந்து

தொழிலதிபர் திரு . #ரூபசாந்தன் அவர்களின் பங்களிப்பில்

தலைவர் டிலான்சன்
செயலாளர் திலோஜன்
பிரதி தலைவர் தா.பிரதீபன்
மற்றும் பொருளாளர் பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில்

கல்முனை திரு.சனாதனன்
பெரியநீலாவணை.திரு.வே.அரவிந்தன் திரு.சஜாந்தன்
நற்பிட்டிப்பிட்டிமுனை திரு.கமல்ராஜ்
திரு.கண்ணன் திரு தனு
சேனைக்குடியிருப்பு திரு.தா.பிரதீவன்,திரு.சுந்தர்ராஜன்,திரு.கஜானந்த் ஆகியோரும் துரைவந்தியமேடு (காலை உணவு)

மேற்படி இடங்களில் பாதிப்புற்ற மக்களை நாடிச்சென்று இரவு மற்றும் காலை நேர உணவுகள் வழங்கப்பட்டது. இதோடு களத்தில் செயர்பட்ட சேனை உறவுகள் பிரகாஷ் சுரேஷ் ராஜு அவர்களுக்கும்

இந்த மனித நேய பணியில் இணைந்து உதவி வழங்கிய தொழிலதிபர் திரு .ரூபசாந்தன் அவர்ளுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு இப்பணியில் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

அவசர நிலையில் உதவிகள் தேவையாயின் தொடர்பிற்கு
தலைவர் - 0777422752
செயலாளர்-0757798897 #

Address

Rest House Road
Kalmunai
32300

Telephone

+94775526426

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்முனை தமிழ் இளைஞர் சேனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கல்முனை தமிழ் இளைஞர் சேனை:

Share