Al - Majmaul Social Service Welfare Organization

Al - Majmaul  Social Service Welfare Organization "WHATEVER YOU DO IN THIS WORLD IT'S BASED ON YOUR INTENTION"

மத்ரசா கல்வியை மேற்கொள்ள சிரமப்படும் இந்த சகோதரிக்கு பணத்தால் உதவிடுங்கள் அல்லது நல்ல குணத்தால் பகிர்ந்திடுங்கள்
06/01/2026

மத்ரசா கல்வியை மேற்கொள்ள சிரமப்படும் இந்த சகோதரிக்கு பணத்தால் உதவிடுங்கள் அல்லது நல்ல குணத்தால் பகிர்ந்திடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துஹூ எமது அல்-மஜ்மாஉல்  சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் சதகதுல் ஜாரியா பிரிவின் ...
26/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துஹூ

எமது அல்-மஜ்மாஉல் சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் சதகதுல் ஜாரியா பிரிவின் ஏற்பாட்டினால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கும் சாய்ந்தமருதைச் சேர்ந்த றிஸ்னி அஸாம் எனும் இளைஞனுக்கு முடிந்த ஒரு தொகையினை திரட்டி அவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக (2025.12.20) அன்று வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஒருவரின் உயிர் காக்க முயற்சி செய்வது மக்கள் அனைவரையும் உயிர் காத்தது போன்றதாகும் (5:32)

இது போன்ற பல்வேறு வகையான செயற்பாடுகள் எமது சதகதுல் ஜாரியா திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்

அந்த வகையில் ஏழைகளும் இத்திட்டத்தில் இணைந்து பல்வேறு வகையான நன்மைகளை பெற்றிட வேண்டும் என்பதே எமது அவா அதற்காகவே இத்திட்டத்தை ஆரம்பித்து சுமார் 3 வருடமாக அல்லாஹ்வின் உதவியினால் சிறப்பாக இயங்கி வருகிறது

வசதி படைத்தவர்கள் மாத்திரம் செய்யும் அமல் அல்ல சதகதுல் ஜாரியா ஒரு ஏழைக்கும் முடியும் என்பதை உணர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

இது ஒரு தனிப்பட்ட நபர்களால் செய்யும் முயற்சியும் அல்ல ஒரு கூட்டான அமைப்பாக சேர்ந்து மசூறா பிரகாரம் செய்யப்படும் முயற்சியாகும்

நீங்களும் இத்திட்டத்தில் இணைந்து இது போன்ற பல்வேறு வகையான சதகதுல் ஜாரியா உதவித் திட்டங்களில் பங்காளியாக விரும்பினால்
எமது குழுமத்தில் இனைந்து பயணித்து நாளை மறுமைக்காக நிரந்தரமான நல்லமல்களை சேகரமாக்கிக்கொள்ளுங்கள்

முடியுமானவர்கள் இந்த வாலிபனின் சிகிச்சைக்காக உதவிடுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்

மேலதிக தகவல்களுக்கு இனைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/KwTJAvtVZjY1qhgelDCkWu

26/12/2025

நினைவை மீட்டிப் பார்க்கும் தருனமில்லை எமது வாழ்வை திருத்தியமைக்கும் தருணமிது

திருந்த நினைப்பவர்களுக்கு
ஒரு சொல்

திருந்த முயற்சிக்காதவரங்களின் உள்ளம் மமதை பிடித்த உள்ளமே

யா அல்லாஹ் எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திசை திருப்புவாயாக

அல்லாஹ்வின் கிருபையினால்  2025.12.06,07 ஆகிய தினங்களில் மூதூர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு  சிரமப்பட்டுக் கொண...
07/12/2025

அல்லாஹ்வின் கிருபையினால் 2025.12.06,07 ஆகிய தினங்களில் மூதூர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் வீடுகள் கிணறுகள் என்பன சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மேலும் சமைக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் 5 குடும்பங்களுக்காக சமைத்த உணவும் உலர் உணவு பொருட்களும் இன்று 2025.12.07 வினியோகிக்கப்பட்டது

உள்ள மொன்று உள்ளதென்றால் உள்ளத்தை அள்ளிக்கொடு உள்ளதெல்லாம் அள்ளிக் கொடுத்தாலும் உள்ளம் இல்லையென்றால் உள்ளதில் தான் என்ன ...
07/12/2025

உள்ள மொன்று உள்ளதென்றால்
உள்ளத்தை அள்ளிக்கொடு
உள்ளதெல்லாம் அள்ளிக் கொடுத்தாலும் உள்ளம் இல்லையென்றால் உள்ளதில் தான் என்ன பயன்

கோடி தான் அள்ளிக் கொடுத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் கோடியை சுத்தம் செய்யும் பாக்கியத்திற்கு நிகர்தான் என்ன

வாடிய முகத்துடன் வாடாத பிஞ்சு முகங்கள் தூக்கமின்றி பசியுடன் உறக்கமின்றி உலா வரும் காட்சியை கண்டது முதல் உள்ளம் உருகி இறுகி இருந்த கரங்கள் இளகியிருந்த உள்ளங்களுக்கு உதவ முன்வந்தது அல்-மஜ்மாஉல் இஸ்லாமி எனும் ஒன்றியத்தினூடாக

அல்லாஹு அக்பர் ...
அல்லாஹு அக்பர்...

உன் மீது கொண்ட அன்பின் காரணமே உன் அடியார்களுக்கு
உன்னருள் கொண்டு உதவமுடிந்தது

யா அல்லாஹ் எங்கள் உள்ளத்தையும் உருகுவைத்து
உதவும் கரங்களாக மாறியமைத்த உனக்கு எப்படித்தான் நன்றி செலுத்துவது அல்-ஹம்துலில்லாஹ் அல்-ஹம்துலில்லாஹ்

மூதூர் கற்றுத்தந்த பாடம்
(Al- Majmaul Islamic Social Service Welfare Organization)

எத்தனை கோடி கொடுத்தாலும் அல்லாஹ்வின் நிஃமத் எனும் அருட்கொடைக்கு எதுதான் ஈடாக முடியும் எமது உறுப்புகளில் ஒன்று பழுதடைந்து...
09/11/2025

எத்தனை கோடி கொடுத்தாலும் அல்லாஹ்வின் நிஃமத் எனும் அருட்கொடைக்கு எதுதான் ஈடாக முடியும்

எமது உறுப்புகளில் ஒன்று பழுதடைந்து விட்டால் அதன் பெறுமதியை அன்றுதான் உணர்கிறோம்

அது இயங்கும் போது அதற்கு நன்றி செலுத்த அல்-ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையோடு நிறுத்திவிடுகிறோம்

ஹறாமான பார்வையை விட்டு கண்களின் பார்வையை பாதுகாப்பதும்

ஹறாமான கேள்விகளை விட்டு காதுகளை பாதுகாப்பதும்

கரங்களால் நல்லவற்றை செய்வதும்

நல்ல சிந்தனையோடு கால்களால் நடப்பதும்

உள்ளத்தை அல்லாஹ்வின் தியானத்தில் லயிக்கச் செய்வதும்

மொத்தத்தில் அல்லாஹ்வின் வல்லமைக்கு முன்னால் உறுப்புகளில் விலைமதிக்க முடியாத சிரசை தாழ்த்தி சுஜூது செய்வதும்

இதுதான் அல்லாஹ்வின் நிஃமத்துகளுக்கு நாம் செய்யும் நன்றி உபகாரம்

உறுப்புகள் பழுதடையும் முன்பு அதன் பெறுமதிகளை உணர்ந்து
நாங்களும் நீங்களும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோமாக

அல்லாஹ்வின் கிருபையினால் எமது அமைப்பின் ஸதகதுல் ஜாரியா பிரிவினால் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வர...
05/11/2025

அல்லாஹ்வின் கிருபையினால் எமது அமைப்பின் ஸதகதுல் ஜாரியா பிரிவினால் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்

அந்தவகையில் மத்ரசாவில் ஓதக்கூடிய ஏழை மாணவர்களுக்கு இதுவரை 400 அல் குர்ஆன்கள் எமது சதகதுல் ஜாரியா குழுமத்தினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது

அது மாத்திரமன்றி குடிநீர் ஏற்பாடுகள், மின்சார வசதிகள், மத்ரசாவில் ஓதக்கூடிய ஏழை மாணவர்களுக்கான மாதாந்த மத்ரசா கட்டுப்பணம் செலுத்துதல் ( இதுவரை 2 மாணவர்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் ) நோயாளிகளுக்கு உதவுதல் போன்ற ஸதகதுல் ஜாரியாவுக்கான செயற்பாடுகள் மாத்திரம் செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் நீங்களும் எம்மோடு இனைந்து கொள்வதன் மூலம் சதகதுல் ஜாரியாவுக்கான நிரந்தர நல்லமல்களில் பங்காளிகளாக மாறிவிடலாம்

யார் ஒரு முஃமினுடைய உலகின் சிரமங்களில் ஒரு சிரமத்தை இலேசாக்குவாரோ அல்லாஹ் கியாமத்துடைய நாளின் சிரமங்களில் ஒரு சிரமத்தை அவருக்காக இலேசாக்குகிறான்

(முஸ்லிம்)

100 ரூபாய் கொடுத்து 100000 ரூபாய் கொடுத்த நன்மையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

100 ரூபாயில் இருந்து உங்களது பங்களிப்பை செய்து கொள்ள முடியும்

ஒவ்வொரு மாதமும் தேவையை பொறுத்து சதகதுல் ஜாரியாவுக்காக செலவழிக்கப்படும்

வரவு செலவு விடயங்கள் எமது குழுமத்தில் பகிரப்படும்

இது அல் - மஜ்மாஉல் சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஸதகதுல் ஜாரியா பிரிவினால் மேற்கொள்ளும் ஒரு திட்டமாகும்

இன்றே இணைந்திடுங்கள் உங்கள் உறவுகளையும் இணைத்திடுங்கள்

https://chat.whatsapp.com/KwTJAvtVZjY1qhgelDCkWu?mode=wwt

மாற்றுமத சகோதருக்கு நாமும் உதவி செய்வோம் 26 வயது நிரம்பிய ஸசியன் எனும் இளம் வாலிபன்  3 மாத குழந்தையின் தந்தையான இந்த சகோ...
16/10/2025

மாற்றுமத சகோதருக்கு நாமும் உதவி செய்வோம்

26 வயது நிரம்பிய ஸசியன் எனும் இளம் வாலிபன்
3 மாத குழந்தையின் தந்தையான இந்த சகோதரன் தனது தொழில் நிமிர்த்தம் மரம் ஏறியதில் தவறி விழுந்து இடுப்பு பகுதி சிதைவடைந்துள்ளது இவரது சத்திர சிகிச்சைக்காக 210000/- ரூபாய் தேவைப்படுகிறது

இதுவரை ஒரு லட்சம் ரூபாய் பணம் அவருக்காக சேர்க்கப்பட்டுள்ளது மிகுதி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது

இந்த சத்திர சிகிச்சை அவசரமாக இம்மாதம் 18ம் திகதி மேற்கொள்ள இருப்பதினால் உங்களால் முடியுமான சதகாக்களை இந்த சகோதரனுக்கு இனம் மதம் பாராது உதவி செய்து அவரது வாழ்க்கைக்கு உதவி செய்த கூட்டத்தில் நாமும் சேர்ந்து கொள்வோமாக

மாற்றுமத சகோதரராக இருந்தாலும் அவருக்கு நாம் உதவி செய்து இஸ்லாத்தின் கண்ணியத்தையும் மேன்மையையும் அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு நாமும் காரணமாக ஆகி விடுவோம்

இந்த சகோதரனுடைய தாய் மாமன் இஸ்லாத்தை ஏற்று எமது சாய்ந்தமருது பகுதியிலே மிக நீண்ட காலமாக வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது மாமா ஷியாம் (0773385605) என்பவருடைய இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் உங்களது உதவிகளை செய்து கொள்ளுங்கள் வல்ல ரஹ்மான் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மேலான நட்பாக்கியங்களை தந்தருள் புரிவானாக

15/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையினால் அல் - மஜ்மாஉல் சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டினால் ஸதகத்துல் ஜாரியா என்னும் குழமத்தின் ஊடாக சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மத்ரசா மாணவர்களுக்கு எமது சதகதுல் ஜாரியா குழும உறுப்பினர்களின் பங்களிப்பினால் 178 குர்ஆன்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது

மேலும் ஒரு சகோதரரின் குடும்ப உறுப்பினர்களால் அவரின் தந்தையின் பெயரால் 60 குர்ஆன்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது

மொத்தமாக 238 குர்ஆன்கள் அல்லாஹ்வின் உதவியினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
அல் ஹம்துலில்லாஹ்

அன்பளிப்பாக
வழங்கப்பட்ட குர்ஆன்களின் எண்ணிக்கை

30 jus - 100
05. Jus - 12
01. Jus - 21
தத்ரீஸ் - 27
நூ.காயிதா -18

ஒரு குடும்பத்தினரால் அவர்களின் தந்தையின் பேரால் ஹதியாவாக கிடைத்த குர்ஆன்கள்

05 - jus - 30
01 - jus. - 30

பரிசுத்தமான குர்ஆன்களை வழங்கி உதவி செய்த எமது அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் மேலான நற்கூலிகளை வழங்குவானாக

Address

Sainthamaruthu/Maligaikadu
Kalmunai
32280

Alerts

Be the first to know and let us send you an email when Al - Majmaul Social Service Welfare Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al - Majmaul Social Service Welfare Organization:

Share