ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.

Hindu Religious Organization--Modern hindu Aagama Arts&Cultural Organization. இலங்கை
-இலாப நோக்கமற்ற ஆன்மீக சேவை நிறுவனம்.
நிறுவனர்: டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
தலைவர்: டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர் . எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அதற்கு டாக்டர் நா.சோமாஸ்கந்த சிவாச்சாரியார், டாக்டர் நா.சர்வேஸ்வர சிவாச்சாரியார் வழிகாட்டலில் இயங்கும் Non-Profit Organization - இந

்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,-modernhinduculture.Org ( WEB-modernhinduculture.com) எல்லாம் வல்ல, கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத பொன்னம்பல வாணப்பெருமானை வேண்டி , வணங்கி நிற்கிறது.--என்றும் வணக்கங்களுடன் பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.(MHC நிறுவன ஆன்மிக மின் இதழ் Emegazine ஆசிரியர் )

கண்ணீர் அஞ்சலி -  Condolencesயாழ் / சுன்னாகம்  மயிலணி   சிரேஷ்ட  சிவாச்சார்யார்  சிவஸ்ரீ சுப்ரமணியக் குருக்கள்  தியாகராஜ...
12/06/2026

கண்ணீர் அஞ்சலி - Condolences

யாழ் / சுன்னாகம் மயிலணி சிரேஷ்ட சிவாச்சார்யார் சிவஸ்ரீ சுப்ரமணியக் குருக்கள் தியாகராஜக் குருக்கள் அவர்கள் இன்று 12/06/2026 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் ஸ்ரீமதி சிவப்பிரியா தேவி அவர்களின் கணவரும் சுன்னாகம் மயிலணி மூத்த குரு அமரர் மு. சிவாகடாட்சக் குருக்கள் தம்பதியினரின் மருகருமாவார் .

அமரர் சிவஸ்ரீ தியாகராஜக் குருக்கள் அவர்கள், கொழும்பு கொச்சிக்கடை தம்பையா முதலியார் சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்னை நாள் பிரதம குருவும் , யாழ்/ ஆனைக்கோட்டை ஸ்ரீ வரத விக்ன விநாயகர் ( ஆனைக்கோட்டை சம்பந்த பிள்ளையார்) ஆலய குரு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி!.

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

கண்ணீர் அஞ்சலி --Condolencesதமிழ்நாடு  திருவாரூரை பிறப்பிடமாகவும்  இலங்கை யாழ்ப்பாணம்  நயினை நாகபூசனி அம்பாள் ஆலய பாகசால...
10/06/2026

கண்ணீர் அஞ்சலி --Condolences

தமிழ்நாடு திருவாரூரை பிறப்பிடமாகவும் இலங்கை யாழ்ப்பாணம் நயினை நாகபூசனி அம்பாள் ஆலய பாகசாலை பொறுப்பாளராக பணி செய்து வந்த பிரம்மஸ்ரீ இராமையர் சந்தானம் சர்மா அவர்கள் தமிழ்நாட்டில் 09/06/2026 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்து விட்டார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு :
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less

கண்ணீர் அஞ்சலி--Condolencesமன்னார்  அமரர்.மனோகரக் குருக்கள் அவர்களின் மனைவி   ஸ்ரீமதி ரதிஅம்மா மனோகரக் குருக்கள் அவர்கள்...
10/06/2026

கண்ணீர் அஞ்சலி--Condolences

மன்னார் அமரர்.மனோகரக் குருக்கள் அவர்களின் மனைவி ஸ்ரீமதி ரதிஅம்மா மனோகரக் குருக்கள் அவர்கள் 08.06.2026 திங்கட்கிழமை லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! See less

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு :
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

·தெரிந்து கொள்வோம் நண்பர்களே!உண்மையை உண்மையாக சிந்திப்போம்!!!ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் நாம், அந்த வழிபாட்டை ...
08/06/2026

·தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

உண்மையை உண்மையாக சிந்திப்போம்!!!

ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் நாம்,
அந்த வழிபாட்டை சாத்தியமாக்கும் அர்ச்சகர்களின் (அந்தணர்களின்) வாழ்வியலையும்...
அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பல நேரங்களில் கவனிப்பதே இல்லை.

காலை 6.30 மணிக்கு கோவிலுக்குச் சென்று,
அபிஷேகமும் அலங்காரமும் செய்து,
மணிக்கணக்காக பளிங்குக் கற்களின் மீது நின்று, நடந்து நடந்து, வரும் பக்தர்களுக்காக அருச்சனை செய்து....

பல நேரங்களில் உணவு அருந்தாமலேயே,
சில நேரங்களில் நேரம் தவறி உணவு......
இறை சேவையும் மக்களின் தேவை அறிந்து சேவை செய்வதை மட்டுமே மனதில் கொண்டு வாழும் பாரம்பரிய தலைமுறை அந்தணர்களின் வாழ்க்கையை நாம் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறோம்?

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனின் அருளைப் பற்றி, தங்களின் கஷ்ட நஷ்டங்களையே பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள்.

ஆனால் அந்த அருள் வழிபாடுகள் நடைபெறுவதற்காக தினமும் உழைக்கும் அந்தணர்களின் உடல்நலம்,
வாழ்க்கை,
தேவைகள்....
பற்றி எத்தனை பேர் சிந்திக்கிறார்கள்?

நீண்ட நேரம் நிற்பதால்
வெரிகோஸ் வெயின்,
படிகளில் ஏறி இயங்குவதால் மூட்டு வலி, தசைப் பிடிப்பு,
ஈரத்திலும் கருங்கல்லில்,
மார்பிள் தரை, திராசோ தரைகளில் அதிகம் நிற்பதால் நரம்பு பிரச்சினைகள்,
எண்ணை தண்ணீர் அதிகம் படுவதால் கால் விரல்களில் நீர்ச் சிரங்கு அல்லது தோல் நோய்கள்,
வயிற்று நோய்கள்,
கற்பூரபுகை, விளக்கு புகை, ஓம புகைகளால் சுவாச நோய்கள்,
அல்சர், போன்ற பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆனாலும் அவர்கள் சேவையை நிறுத்துவதில்லை.
ஏனெனில் அது அவர்களுக்கு ஒரு தொழில் மட்டுமல்ல...

தனது தலைமுறையினர்
கட்டிக்காத்த கடமை
அது ஒரு ஒரு தர்மம்.
பலர் செல்வத்தைச் சேர்க்க வாழ்க்கையை செலவிடுகிறார்கள்.
சிலர் சேவையைச் செய்ய வாழ்க்கையை செலவிடுகிறார்கள்.

கோவிலின் தீபம் அணையாமல் இருக்க,
மந்திர ஓசை ஒலித்துக் கொண்டே இருக்க,
வழிபாடு தடையின்றி சிறப்பாக தொடர்ந்து நடைபெற,
தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த மனிதர்களின் தியாகத்தை மறந்து விடக்கூடாது.
இறைவனை மதிப்பதைப் போலவே,
இந்த இறை சேவையில் ஈடுபடுபவர்களின் உழைப்பையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் வாழும் போதே அவர்களின் மதிப்பை உணர்ந்து பாராட்டி வாழ்த்தி அவர்களும் சந்தோஷமாக வாழ வழிவகை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

1. பொருளாதாரப் பாதுகாப்பின்மை
(Economic Vulnerability)
உண்மை நிலை:
பெரிய மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் தவிர, கிராமப்புறங்களிலும் சில நகரங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு நிலையான வருமானம் கிடையாது. தட்டுக் காணிக்கையும், பக்தர்கள் தரும் சம்பாவனையுமே அவர்களின் வாழ்வாதாரம்.
சிந்திக்க வேண்டியவை:

விலைவாசி உயர்வு, பிள்ளைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்றவற்றை எதிர்கொள்ள இந்த வருமானம் பல நேரங்களில் போதுமானதாக இருப்பதில்லை. இறைவனுக்குத் தங்கக் கவசம் சாற்றும் பலரின் கைகள்,
தன் குடும்பத் தேவைக்குத் திண்டாடும் அவலநிலை மாற வேண்டும்.

2. "ஓய்வு" அறியாத கடமை
(No Retirement or Weekends)
உண்மை நிலை:
ஒரு சாதாரண அரசு அல்லது தனியார் ஊழியருக்கு வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என்று உண்டு.
ஆனால், அர்ச்சகர்களுக்குப் (அந்தணருக்கு) வார இறுதியில் பண்டிகை நாட்களில் தான் வேலைப்பளு பல மடங்கு அதிகமாகும்.
சிந்திக்க வேண்டியவை:

ஞாயிற்றுக் கிழமைகளோ அல்லது திருவிழா நாட்களோ, அவர்கள் குடும்பத்தோடு வெளியில் சென்று மகிழ முடிவதில்லை.
வருடத்தின் 365 நாட்களும் காலை முதல் மாலை வரை கடமை மட்டுமே அவர்களின் உலகமாக உள்ளது.

3. மாறிவரும் சமூகப் பார்வை
(Changing Social Perception)
உண்மை நிலை:
ஒரு காலத்தில் சமூகத்தில் ஆன்மீக வழிகாட்டிகளாக, மதிக்கத்தக்க இடத்தில் இருந்த இவர்களின் தற்போதைய தலைமுறை, பொருளாதாரக் காரணங்களாலும், போதிய அங்கீகாரம் மரியாதை இல்லாததாலும் இந்தத் தொழிலை சேவையை விட்டு வெளியேறி வருகின்றனர்.

சிந்திக்க வேண்டியவை:

பாரம்பரியமிக்க இந்த ஆன்மீகக் கலை மற்றும் மந்திர உச்சாடனங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டுமானால், இத்தொழில் சேவையில் இருப்பவர்களுக்குச்
சமூக மதிப்பும்,
தகுந்த பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைப்பதை நாம் உறுதி செய்து கொடுக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டியவை என்ன?

நேரடி உதவி:
கோயில்களுக்குச் செல்லும்போது அர்ச்சகர்களுக்கு (அந்தணருக்கு) உங்களால் இயன்ற தட்சிணையை (சம்பாவனையை) இயன்றவரை மனமுவந்து வழங்குங்கள்.

சுகாதார உதவி:
நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களுக்கு ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகளைக் களைய, உள்ளூர் அமைப்புகள் மூலம் அவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் அல்லது மருத்துவக் காப்பீடுகள் (Medical Insurance) கிடைக்க வழிவகை செய்யலாம்.

மதிப்பு அளித்தல்:
கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது அவர்களிடம் எரிச்சலடையாமல், அவர்களின் உடல் சோர்வையும் புரிந்து கொண்டு இன்முகத்தோடு நடத்துவதே நாம் அவர்களுக்குத் தரும் ஆகச்சிறந்த மரியாதை.

"கைம்மாறு வேண்டா கடப்பாடு" என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க, எதையும் எதிர்பாராமல் இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்யும் இந்த ஆன்மீகத் தொழிலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மரணித்த பின் மாலை மரியாதை அவருக்காக பண உதவி என்று செய்வதை விடுத்து வாழும் காலத்தில் அவர்களின் உழைப்பை மதித்து
தியாகங்களை புரிந்து அவர்களுக்கான அனைத்தையும் இயன்ற அளவு செய்து கொடுத்து வாழ்விப்பதே சிறப்பு....

நன்றி: விநாயகர் சோதிட நிலையம்.

ஒரு சிலர் தவறு இழைத்தால் முழு பிராமண சமுதயத்தை, அர்ச்சகர்களை விமர்சிக்கும் அனைவர்க்கும் இது சமர்ப்பணம்!!!
பகிர்வு;
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

சஷ்டியப்த  பூர்த்தி  சாந்தி மங்கல  வாழ்த்து!  (  அகவை அறுபது - மணி விழா  )தமிழ்நாடு  சிவகங்கை மாவட்டம் , சாக்கோட்டை  சிவ...
06/06/2026

சஷ்டியப்த பூர்த்தி சாந்தி மங்கல வாழ்த்து! ( அகவை அறுபது - மணி விழா )

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் , சாக்கோட்டை சிவஸ்ரீ S பைரவக் குருக்கள் ஸ்ரீமதி ராஜம்மாள் தம்பதியினரின் கனிஷ்ட குமரனும் சிவஸ்ரீ பைரவ ரமணிக் குருக்களின் சகோதரனும், பிரம்மஸ்ரீ S சிவசங்கர் சிவம், B.E Mech, Canada Toronto ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய குரு, ' சிவாகம ரத்தினம்' பிரம்மஸ்ரீ பிரவீன் குமார் சிவம் அவர்களின் பெற்றோர்களுமாகிய சிவஸ்ரீ B சட்டநாதக் குருக்கள் ஸ்ரீமதி S ஸ்ரீமதி என்கின்ற குஞ்சரம்மாள் தம்பதிகளுக்கு 05/06/2026 வெள்ளிக்கிழமை , பிள்ளையார் பட்டி SMK Hall அரங்கத்தில் , டாக்டர் ' விகாஸ் ரத்னா ' டாக்டர் சிவஸ்ரீ பிச்சை சிவாச்சார்யார் அவர்கள் தலைமையில் சஷ்டியப்த சாந்தி பூர்த்தி மங்கல வைபவம் சாஸ்த்ரோக்தமாக , மிகுந்த பக்தி சிரத்தையாக, ஹோம, வேத பாராயணங்களுடன், விப்ரசிரேஷ்டர்களின் குருவருளுடனும் , ஆசிகளுடனும் பெரியோர்களின் வாழ்த்துகளுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

தம்பதிகள் தேக திட ஆரோக்கியமாக , வளமாக, மகிழ்வாக , பீமரத சாந்தி , விஜயரத சாந்தி, சதாபிஷேகம், ம்ருத்யுஞ்ஜய சாந்தி, கனகாபிஷேகம் , பூர்ணாபிஷேகம் எனப்படும் அனைத்துப் பெரும் பேறுகளும் அடையப்பெற்று, நூறாண்டுகாலம் சிறப்பாக வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!!!

Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம். இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர், ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

பீமரத சாந்தி மங்கல  வாழ்த்து!  (  அகவை எழுபது )யாழ்/ கோப்பாய் , மட்டுநகர் மாமாங்கம் - ஹட்டன்  (Hatton)  சிவஸ்ரீ   பூர்ண ...
06/06/2026

பீமரத சாந்தி மங்கல வாழ்த்து! ( அகவை எழுபது )

யாழ்/ கோப்பாய் , மட்டுநகர் மாமாங்கம் - ஹட்டன் (Hatton) சிவஸ்ரீ பூர்ண சந்திரானந்த சிவாச்சார்யார் ஸ்ரீமதி பாலராணி தம்பதிகளுக்கு 05/06/2026 வெள்ளிக்கிழமை ஹட்டனில் பீமரத சாந்தி மங்கல வைபவம் சாஸ்த்ரோக்தமாக , மிகுந்த பக்தி சிரத்தையாக, ஹோம, வேத பாராயணங்களுடன், விப்ரசிரேஷ்டர்களின் குருவருளுடனும் , ஆசிகளுடனும் பெரியோர்களின் வாழ்த்துகளுடனும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புடை சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

தம்பதிகள் தேக திட ஆரோக்கியமாக , வளமாக, மகிழ்வாக , விஜயரத சாந்தி, சதாபிஷேகம், ம்ருத்யுஞ்ஜய சாந்தி, கனகாபிஷேகம் , பூர்ணாபிஷேகம் எனப்படும் அனைத்துப் பெரும் பேறுகளும் அடையப்பெற்று, நூறாண்டுகாலம் சிறப்பாக வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!!!

Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம். இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர், ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less See less See less

பீமரத சாந்தி வாழ்த்து!  (  அகவை எழுபது )Australia - யாழ்/ இணுவில்  கந்தசாமி கோயில் பரம்பரை குரு வழி வந்த 'சிவாகம ஜோதி ' ...
06/06/2026

பீமரத சாந்தி வாழ்த்து! ( அகவை எழுபது )

Australia - யாழ்/ இணுவில் கந்தசாமி கோயில் பரம்பரை குரு வழி வந்த 'சிவாகம ஜோதி ' சிவஸ்ரீ இராமநாத விஜயகுமார சிவாச்சார்யார் ஸ்ரீமதி சுனந்தா தம்பதிகளுக்கு பீமரத சாந்தி மங்கல வைபவம் சாஸ்த்ரோக்தமாக , மிகுந்த பக்தி சிரத்தையாக, ஹோம, வேத பாராயணங்களுடன், விப்ரசிரேஷ்டர்களின் குருவருள் , ஆசிகளுடனும் , பெரியோர்களின் வாழ்த்துகளுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

தம்பதிகள் தேக திட ஆரோக்கியமாக , வளமாக, மகிழ்வாக , விஜயரத சாந்தி, சதாபிஷேகம், ம்ருத்யுஞ்சய சாந்தி, கனகாபிஷேகம் , பூர்ணாபிஷேகம் எனப்படும் அனைத்துப் பெரும் பேறுகளும் அடையப்பெற்று, நூறாண்டுகாலம் சிறப்பாக வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!!!

Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம். இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர், ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less See less

இங்கிலாந்து  வேல்ஸ்பதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும்  அருள்மிகு  ஸ்ரீ  கல்பக  விநாயகர் திருக்கோவில்  மஹா கும்பாபிஷேக...
05/06/2026

இங்கிலாந்து வேல்ஸ்பதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்பக விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் - 07/06/2026 ஞாயிற்றுக்கிழமை!!!!!

இறையருள் பெருகும் மஹா கும்பாபிஷேக கிரியா நிகழ்வுகள் ஆரம்பம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!!!

இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனர் ( Modern Hindu Culture . Org ) சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களின் அருள் ஆசிகளுடனும் , சர்வ போதகராக, இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத் தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் அவர்களது சீரிய வழி காட்டலிலும் , நடைபெறும் வேல்ஸ் ஸ்ரீ கல்பக விநாயகப் பெருமானின் மஹா கும்பாபிஷேகத்தை, இந்து ஆகம கலை கலாச்சார நிறுவன நிர்வாக சபை உறுப்பினரும் , ஆலய முதல்வருமான முத்தமிழ் வித்தகர் சிவஸ்ரீ ச. லம்போதர குமாரசாமி சிவாச்சார்யார் அவர்கள் பிரதிஷ்டா பிரதான சிவாச்சார்யாராக இருந்து நடாத்தி வைக்கிறார்!!!

சிவாச்சார்யப் பெருமக்கள், குருமஹா சந்நிதானங்களின் நல்லாசிகளுடனும் ஆன்மீகப் பெரியோர்களின் நல் வாழ்த்துகளுடனும், அடியார்களின் பிரார்த்தனைகளுடனும் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகம் சிறப்புற, எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி உடனுறை ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் திருவருள் வேண்டி வணங்கி பிரார்த்திக்கிறோம்!

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:-
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less

பீமரத சாந்தி வாழ்த்து!  (  அகவை எழுபது )இலங்கை  காலி சிவன்  ஆலய பிரதமகுரு ' சிவாகம ஞான நிதி' சிவஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சிவ...
04/06/2026

பீமரத சாந்தி வாழ்த்து! ( அகவை எழுபது )

இலங்கை காலி சிவன் ஆலய பிரதமகுரு ' சிவாகம ஞான நிதி' சிவஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சிவாச்சார்யார் ஸ்ரீமதி குகப்பிரியா தம்பதிகளுக்கு 04/06/2026 வியாழகக்கிழமை பீமரத சாந்தி வைபவம் சாஸ்த்ரோக்தமாக , மிகுந்த பக்தி சிரத்தையாக, ஹோம, வேத பாராயணங்களுடன், விப்ரசிரேஷ்டர்களின் குருவருள் , ஆசிகளுடனும் , பெரியோர்களின் வாழ்த்துகளுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

தம்பதிகள் தேக திட ஆரோக்கியமாக , வளமாக, மகிழ்வாக , விஜயரத சாந்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம் , பூர்ணாபிஷேகம் எனப்படும் அனைத்துப் பெரும் பேறுகளும் அடையப்பெற்று, நூறாண்டுகாலம் சிறப்பாக வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!!!
Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம். இலங்கை.

சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர், ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less

சௌள உபநயன ப்ரஹ்மோபதேச வாழ்த்து!!   ( பூணூல் தரித்தல் )                    பாரிஸ் பிரம்மஸ்ரீ பகவதீஸ்வர சர்மா ஸ்ரீமதி புஷ்...
02/06/2026

சௌள உபநயன ப்ரஹ்மோபதேச வாழ்த்து!! ( பூணூல் தரித்தல் )

பாரிஸ் பிரம்மஸ்ரீ பகவதீஸ்வர சர்மா ஸ்ரீமதி புஷ்பராணி தம்பதிகளின் பௌத்ரனும் கனடா மொண்ட்ரியால் சிவஸ்ரீ சிவகுமாரக் குருக்கள் ஸ்ரீமதி வனஜா தம்பதிகளின் தௌஹித்ரனும் கனடா மொண்ட்ரியால் பிரம்மஸ்ரீ பகவதீஸ்வர மஹீதர சர்மா ஸ்ரீமதி ஜனனி தம்பதிகளின் ஏக புத்திரனுமாகிய சிரஞ்சீவி இஷான் சர்மா அவர்களுக்கு 01/06/2026 திங்கட்கிழமை மொண்ட்ரியால் அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலய மண்டபத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கா. பாலச்சந்திர சிவாச்சார்யார் குருவாக இருந்து நடாத்தி வைத்த உபநயன ப்ரம்மோபதேச வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!!

இஷ்ட தெய்வ குல தெய்வ கிருபையுடனும் விப்ரசிரேஷ்டர்களின் குருவருள், ஆசிகளுடனும் , பெற்றோர், உற்றார், உறவினர்களின் வாழ்த்துகளுடனும் உபநயன -ப்ரஹ்மோபதேசம் பெற்றுக்கொண்ட உபநீதன் இஷான் சர்மன் அவர்கள், ஸ்ரீ காயத்திரி தேவியின் அருட்கடாட்சத்துடன், காயத்திரி மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து , திட சித்தனாய் , பூரண பக்தி கலை, ஞான, வைராக்கியனாக, வேத, ஆகம, உபநிஷத , சங்கீத, கணித, பூகோள, சரித்திர, விஞ்ஞான, சாஸ்திர ஸம்பன்னனாக சகல சௌபாக்கியங்களுடன் , ஆயுள் ஆரோக்கிய, அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் , மண்ணில் நல்ல வண்ணம் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை பிரார்த்தித்து வணங்கி உபநீதனுக்கு ஆஸி கூறி வாழ்த்துகிறோம்.

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less See less

Address

இலங்கை அரசின் பதிவு எண்/HA/4JA/339, ஐயனார் வீதி, சண்டிலிப்பாய் . தலைமையகம், சுன்னாகம்
Jaffna
SRILANKA.

Telephone

+14168275965

Website

இலங்கை

Alerts

Be the first to know and let us send you an email when ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.:

Share