Kalam

Kalam Providing better education support to children of war effected parents and providing support and help to children who cannot continue their education…

யாழ்ப்பாணத்தில் ஜனனம் அறக்கட்டடளை !கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) ...
23/03/2025

யாழ்ப்பாணத்தில் ஜனனம் அறக்கட்டடளை !

கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச
உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் நிதியுதவியால் ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் குறித்த விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

31/12/2024
இன்றைய கிறிஸ்மஸ் தினத்தினைச் சிறப்பிக்கும் முகமாக கிளிநொச்சியிலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந...
25/12/2024

இன்றைய கிறிஸ்மஸ் தினத்தினைச் சிறப்பிக்கும் முகமாக கிளிநொச்சியிலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிற்கான கற்றல் சாதனங்களை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்த போது

இன்றைய கிறிஸ்மஸ் தினத்தினைச் சிறப்பிக்கும் முகமாக பருத்தித்துறையிலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில்  கலந்து ...
25/12/2024

இன்றைய கிறிஸ்மஸ் தினத்தினைச் சிறப்பிக்கும் முகமாக பருத்தித்துறையிலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களிற்கான கற்றல் சாதனங்களை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்த போது

அன்பு, கருணை, அமைதி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் விளங்கிடும் கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் ...
24/12/2024

அன்பு, கருணை, அமைதி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் விளங்கிடும் கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்…..

12/12/2024

மிக முக்கியமான அறிவித்தல் அனைவருக்கும் பகிரவும்.

வடமராட்சி பகுதியில் கடந்த 3 தினங்களுக்குள் 4 பேர் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டவர்கள் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் .

அனைவரும் இளம் வயதினராக இருப்பதுடன், காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களினுள் நோய் மிக தீவிரமாகி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

எலிக்காய்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது.
இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் ( Gacteria ) ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக மிருகங்களின் (எலி) சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது.

இப்போது மழைகாலம் ,வெள்ளத்தின்

விவசாயிகள், வடிகால்களை சுத்தம் செய்பவர்கள், சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், சதுப்பு நிலங்களில் பணியாற்றுபவர்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் நீச்சலடித்து விளையாடுபவர்கள் போன்ற அனைவரும், அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியை அணுகவும்.

திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் அல்லது லேசான காய்ச்சல், உடல் குளிர்தல், கண் வெண்மையாதல், இடுப்பு மற்றும் சில பகுதிகளின் தசை மென்மையாதல், கடுமையான தலைவலி மற்றும் சிறுநீர் வெளியேறுவது குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் காய்ச்சல் கடைசிக்கட்டத்துக்குச் சென்றால், இருதயம் செயற்படாமை மற்றும் பல்வேறு உடற்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நோயாளியை காப்பாற்றுவது கடினமாகும் .

எனவே ஒரு நாள் காய்ச்சல் எனினும் வைத்தியசாலையை அணுகவும் .

தாயார் சுமதி அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருடைய மகன் சசியால் இன்று பெய்துவரும் மழையினால் பாதிக்கப்பட்ட மலையாள்புரம் ,  க...
11/12/2024

தாயார் சுமதி அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருடைய மகன் சசியால் இன்று பெய்துவரும் மழையினால் பாதிக்கப்பட்ட மலையாள்புரம் , கிளிநொச்சியை அண்மித்த பகுதிவாழ் மக்களிற்கு 200 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

வட்டக்கச்சிப் பகுதியில் வாழ்ந்து வரும் வாதத்தினால் பாதிக்கப்பட்டு, வேலை செய்ய முடியாது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஆணிற...
11/12/2024

வட்டக்கச்சிப் பகுதியில் வாழ்ந்து வரும் வாதத்தினால் பாதிக்கப்பட்டு, வேலை செய்ய முடியாது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஆணிற்கான சக்கர நாற்காலியை லண்டனில் வசிக்கும் சசி அவர்களின் நிதியுதவியால் இன்று வழங்கி வைக்கப்பட்டது

அங்கவீனர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் ஊண்டுகோல் தேவைப்படும் நபர்கள் கீழ் காணும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி உரிய கடிதங்...
09/12/2024

அங்கவீனர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் ஊண்டுகோல் தேவைப்படும் நபர்கள் கீழ் காணும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி உரிய கடிதங்கள் கையோப்பங்களை பெற்று தபால் மூலம் அனுப்பி வையுங்கள்.

முகவரி விண்ணப்பத்தில் உள்ளது…..

மாவீரரின் தாயும் எல்லைப்படையில் இருந்து மரணித்தவரின் மனைவிக்குமான வாழ்வாதார உதவி மாவீரர் வாரத்தையொட்டி லண்டனில் இருந்து ...
06/12/2024

மாவீரரின் தாயும் எல்லைப்படையில் இருந்து மரணித்தவரின் மனைவிக்குமான வாழ்வாதார உதவி மாவீரர் வாரத்தையொட்டி லண்டனில் இருந்து சசி என்பவரால் வழங்கப்பட்டது.

05/12/2024

🛑மிக அவசரமான உதவி இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய யாராகிலும் எம் உறவுகள் முன்வரவும் நன்றிகள் 🙏

05/12/2024

தென்மராட்சி கொடிகாமம் J/328 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியிலுள்ள வீதியானது வெள்ளநீர் வடியாமல் உள்ளதால் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளப் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இதனைப் பொறுப்பானவர்கள் அவதானித்து அப்பகுதிவாழ் மக்களிற்கு வீதிப் புனரமைப்பைச் செய்ய முன் வருமாறு வேண்டுகின்றோம்…

Address

K. K. S Road Kondavil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Kalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share