25/07/2026
Transforming a Bus Stop into a Space for Awareness and Positive Change | Vaddakandal
As part of a community needs assessment conducted in Vaddakandal, community members identified concerns regarding the increasing vulnerability of young people to harmful behaviours, including drug abuse, smoking, and alcohol use. They highlighted that some young people who discontinue their education after completing O/L or A/L examinations often gather at the local bus stop, which had gradually become a space associated with these negative activities.
Understanding the importance of creating a safer and more positive environment, we decided to transform the bus stop into a space that promotes awareness and community responsibility. Under the coordination of Uthayapalan Mathanky, this initiative was started with the support and active participation of community members, the local school, and children from the area.
Children, including some young people who had dropped out of school, came together to contribute their time, creativity, and effort to bring a positive change to the space. Through their small hands and collective action, they helped redesign the bus stop with messages promoting awareness about the harmful effects of drug abuse, smoking, and alcohol use.
This community-driven initiative demonstrates the power of participation, where even small contributions from children and community members can create meaningful social change and inspire a healthier, safer environment for everyone.
விழிப்புணர்வுக்கான ஒரு புதிய இடமாக மாறிய வட்டக்கண்டல் பேருந்து தரிப்பிடம்
வட்டக்கண்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சமூகத் தேவைகள் மதிப்பீட்டின் போது, போதைப்பொருள் பாவனை, புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பாவனை போன்ற தீய பழக்கங்களால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக சமூக மக்கள் தங்களுடைய கவலைகளை பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக, O/L அல்லது A/L பரீட்சைகளை முடித்த பின்னர் சில இளைஞர்கள் மேலதிக கல்வியை தொடராமல் இடைநிறுத்துகின்றனர் என்றும், அவர்கள் ஒன்றுகூடும் இடமாக உள்ளூர் பேருந்து தரிப்பிடம் மாறியுள்ளது என்றும் சமூக மக்கள் தெரிவித்தனர். அந்த இடம் சில சந்தர்ப்பங்களில் மதுபானம், புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற தீய செயல்களுடன் தொடர்புபட்ட இடமாக மாறி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலைமையை மாற்றி, அந்த இடத்தை இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கான ஒரு நல்ல செய்தியை வழங்கும் விழிப்புணர்வு மிக்க இடமாக மாற்றுவதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. உதயபாலன் மாதங்கியின் ஒருங்கிணைப்பின் கீழ், சமூக மக்களின் மற்றும் பாடசாலையின் ஆதரவுடன் இந்த மாற்றப் பயணம் தொடங்கப்பட்டது.
சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், மேலும் கல்வியை இடைநிறுத்திய சில பிள்ளைகளும் இந்த முயற்சியில் இணைந்து தங்களுடைய சிறிய கைகளால் பேருந்து தரிப்பிடத்தை மாற்றும் பணியில் பங்கேற்றனர். அவர்களின் படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் ஆர்வத்தின் மூலம், போதைப்பொருள் பாவனை, புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பாவனையின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு புதிய இடமாக அந்த பேருந்து தரிப்பிடம் மாற்றப்பட்டது.
இந்த சிறிய முயற்சி, சமூக மாற்றம் என்பது பெரிய செயல்களால் மட்டும் உருவாகாது; சமூக மக்களின் பங்களிப்பு மற்றும் சிறுவர்களின் பங்கேற்பு போன்ற சிறிய முயற்சிகளாலும் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.
#சமூகமாற்றம்