சிறகுகள் அமையம்

சிறகுகள் அமையம் கல்விக்கான இலட்சியப் பயணம்... It's a social service organization which conducted service to develop Tamil student's education and social development mainly.

நுவரெலியா ருக்வூட் தமிழ் வித்தியால மாணவர்களுக்கு சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டமூடாக புத்தகங்கள் வழங்கி வைக்கப...
15/06/2026

நுவரெலியா ருக்வூட் தமிழ் வித்தியால மாணவர்களுக்கு சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டமூடாக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாணவரகளின் வாசிப்பு திறனை விருத்தி செய்யும் வகையிலான புத்தகங்கள் அமைய செயற்பாட்டாளர்களால் நேரடியாக பாடசாலைக்குச் சென்று கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையானது நுவரெலியா மாவட்டத்தில் மிக உயரத்தில் காணப்படும் பாடசாலையாகும். குறித்த பாடசாலைக்கு பெளதீக ரீதியிலான தேவைப்பாடும் பெருமளவில் காணப்படுவதுடன்; போக்குவரத்து சார்ந்த சிக்கல் நிலையினையும் எதிர்நோக்குகின்றனர்.

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரை கெளரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு!இந்தப் பண்புக்கமைய பேராசிரியர் ...
11/06/2026

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரை கெளரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு!

இந்தப் பண்புக்கமைய பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களை போற்றுவதும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன் உதாரணமானவராக அறிமுகம் செய்வதும் எமது தலையாய கடமையாகும்.

பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு தலை சிறந்த கல்விமான், உலகப்புகழ் ஈட்டிய அறிஞர், ஆறு ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அவர் எம் மண்ணிற்கு ஆற்றிய சேவை மகத்தானது.

இவர் ஒரு தேசப்பற்றாளர். மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். இவரது வாழ்க்கை இந்த மண்ணோடு பிணைந்தது. இந்த மண்ணினதும் மக்களதும் போராட்ட வாழ்வின் பளுக்களை சுமந்துகொண்டார்.

எத்தனையோ அவலங்கள், துன்பங்கள் மத்தியிலும், எதற்கும் அஞ்சாத துணிவுடன் இந்த மண்ணைப்பற்றி நின்ற மக்களுக்கு பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்கினார். தளர்ந்து போகாத உறுதிப்பாட்டிற்கும் ஒரு உன்னத உதாரணமானவராக விளங்கினார்.
தன்னலமும், தற்பெருமையும் அகன்று நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது, இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகின்றது. இந்த வகையில் பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு அழகான மனிதர். அவரிடமுள்ள இந்த அகத்தின் அழகுதான் மக்களை கவரும் மாண்பாக விளங்குகின்றது.

இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியானவர்களை அறிமுகம் செய்ய வேண்டியது அனைவரினதும் பொறுப்பு மிக்க கடமையாகும்.

பேராசிரியர் அவர்களின் நினைவு தினத்தில் நினைவு கூர்வதுடன், அவர்தம் சிறப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு பயணிக்கும் தலைமுறையினை உருவாக்க செயற்படுவோம்.

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர்
தன்னை மொண்டு நெறிதரும் மக்கள்
எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதிய தோர் உலகம் செய்வோம்!

சிறகுகள் அமையம்
2026.06.11

மொறட்டுவைப்  பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான  வழிகாட்டல்கற்கைநெறி - கட்டிடக்கலை,நில...
10/06/2026

மொறட்டுவைப் பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான வழிகாட்டல்

கற்கைநெறி - கட்டிடக்கலை,நிலத்தோற்றக் கட்டிடக்கலை(Architecture,Landscape Architecture)

11.06.2026 : வியாழன் இரவு 7.30 மணி

Join Zoom Meeting
https://learn.zoom.us/j/98375095137?pwd=sfmbbLPsxe0WPamVh6pTOepGDaRdoF.1

Meeting ID: 983 7509 5137
Passcode: 26@Siraku

மொறட்டுவைப்  பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான  வழிகாட்டல்கற்கைநெறி -  நவநாகரிக வடிவம...
10/06/2026

மொறட்டுவைப் பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான வழிகாட்டல்

கற்கைநெறி - நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் | Fashion Designing & Product Development
@
11.06.2026 : வியாழன் மாலை 4.00 மணி

Join Zoom Meeting
https://learn.zoom.us/j/98375095137?pwd=sfmbbLPsxe0WPamVh6pTOepGDaRdoF.1

Meeting ID: 983 7509 5137
Passcode: 26@Siraku

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில்,  யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு எதிர...
10/06/2026

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு எதிரில் அமைந்துள்ள சுப்பிரமணியம் பூங்காவில் நூல் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.

எழுத்தாளர் நீலவண்ணன் (செங்கை ஆழியான் / கலாநிதி குணராசா) எழுதிய “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது” என்ற புத்தகம் வாசிக்கப்பட்டது. இந்நூல், 1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இனவெறி வன்முறைகளையும், அதன் விளைவாக யாழ்ப்பாணப் பொது நூலகம் மற்றும் ஈழநாடு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவங்களையும் பதிவு செய்கிறது. தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத காயமாக பதிந்துள்ள அந்த நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய ஆவணமாக இந்நூல் விளங்குகிறது.

இந்நிகழ்வில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நூல் வாசிப்புடன் இணைந்து, வரலாற்று நினைவுகளைப் பாதுகாப்பதன் அவசியம், நீதிக்கான போராட்டங்களில் நினைவுகூரலின் பங்கு, மற்றும் இளைய தலைமுறையினரின் பொறுப்பு ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வரலாற்று நினைவுகளையும் அனுபவங்களையும் இன்றைய தலைமுறைக்கு கடத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. “நினைவுகளைப் பாதுகாப்பது என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூர்வதல்ல; அது எதிர்காலத்தை கட்டியெழுப்பும் செயற்பாடாகும்”

இவ்வாறான கற்றல் மற்றும் கலந்துரையாடல் தளங்களை எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுத்து, வரலாற்றறிவு, சமூகப் பொறுப்பு மற்றும் விமர்சன சிந்தனை கொண்ட இளைஞர் தலைமுறையை உருவாக்குவதற்கு சிறகுகள் அமையம் உறுதியளிக்கின்றது.

பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான  வழிகாட்டல்++++++++++++++++++++++07.06.2026 :  ஞாயி...
07/06/2026

பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான வழிகாட்டல்
++++++++++++++++++++++

07.06.2026 : ஞாயிறு இரவு 7.30 மணி

மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
கற்கைநெறி - Bachelor of Design

Join Zoom Meeting
https://learn.zoom.us/j/98375095137?pwd=sfmbbLPsxe0WPamVh6pTOepGDaRdoF.1

Meeting ID: 983 7509 5137
Passcode: 26@Siraku

பல்கலைக்கழக மாணவர்கள் வளவாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

நினைவுகூர்வதன் மூலம், நாம் எதிர்க்கின்றோம்.நினைவுகூர்வதன் மூலம், நாம் மீண்டும் எழுகின்றோம்.நினைவுகூர்வதன் மூலம், நாம் மற...
01/06/2026

நினைவுகூர்வதன் மூலம், நாம் எதிர்க்கின்றோம்.

நினைவுகூர்வதன் மூலம், நாம் மீண்டும் எழுகின்றோம்.

நினைவுகூர்வதன் மூலம், நாம் மறுபடி கட்டியெழுப்புவோம்.

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவை நாம் இன்று கடக்கும் வேளையில், வெறும் துயரத்தோடு மட்டுமல்லாமல்—ஆழ்ந்த சிந்தனையோடும் மனவலிமையோடும் நாம் ஒரு கணம் மௌனிக்கின்றோம்.

நூலகம் என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல; அது நமது அறிவு, அடையாளம் மற்றும் கூட்டு நினைவுகளின் அடையாளமாகும். அதன் இழப்பு இன்றும் ஆழமாக உணரப்பட்டாலும், கல்வி, கற்றல் மற்றும் மறுசீரமைப்புக்கான ஒவ்வொரு முயற்சியிலும் அதன் ஆன்மா தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நினைவு கூர்தல், கல்வி நோக்கிய சிறகுகள் அமையத்தின் நோக்கத்துடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. இங்கு மறுசீரமைப்பு என்பது வெறும் கட்டமைப்புகளை மீண்டும் நிறுவுவது மட்டுமல்ல; அது மனங்களை வளர்ப்பதும், சமூகங்களை வலுவூட்டுவதும், எதிர்கால சந்ததியினருக்காக அறிவைப் பாதுகாப்பதுமாகும்.

இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும்:

சாம்பலிலிருந்து நாம் எதையும் மறந்துவிடவில்லை—மாறாக, உறுதியான நோக்கத்தோடு மீண்டும் கட்டியெழுப்புவோம்.

"மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது!" – புத்தக வாசிப்பும் கலந்துரையாடலும் 📚✨புத்தகம்: நீலவண்ணன் அவர்களின் "மீண்டும் யாழ்ப்பாண...
30/05/2026

"மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது!" – புத்தக வாசிப்பும் கலந்துரையாடலும் 📚✨

புத்தகம்: நீலவண்ணன் அவர்களின் "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது!"

எப்போது?: 31.05.2026 ஞாயிறு | மாலை 4.00 மணி

எங்கே?: யாழ் சுப்பிரமணியம் பூங்கா (யாழ் பொது நூலக முன்றல்)

வரலாற்றை மீளாய்வு செய்ய அனைவரையும் அழைக்கின்றோம்!

அழைப்பு - சிறகுகள் அமையம்

🚀 CMX Connect Jaffna Chapter – Official Launch!) – உத்தியோகபூர்வ தொடக்க விழா! யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகக் கட்டமைப்பாளர்க...
30/05/2026

🚀 CMX Connect Jaffna Chapter – Official Launch!) – உத்தியோகபூர்வ தொடக்க விழா!

யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகக் கட்டமைப்பாளர்களுக்கான (Community Builders) ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது!

யாழ்ப்பாண சேல்ஸ்போர்ஸ் ஓஹானா Salesforce Ohana மற்றும் சிறகுகள் அமையம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிஎம்எக்ஸ் கனெக்ட் யாழ்ப்பாணம் கிளையின் (CMX Connect Jaffna Chapter) உத்தியோகபூர்வ தொடக்க விழாவில் எங்களுடன் இணையுங்கள்!

இவ்விழா சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்கால சமூகக் கட்டமைப்பாளர்களை ஒன்றிணைத்து, ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மேலும் வலுவான சமூகங்களை ஒன்றாகக் கட்டியெழுப்பவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

📅 திகதி: மே 31, ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல்
📍 இடம்: கிளவுட் ஹப் - YSFO (Cloud Hub by YSFO)
https://share.google/riTRWu6IxnIuVaHbY
🔗 இப்போதே பதிவு செய்யுங்கள் (RSVP): tinyurl.com/cmx-chapter-launch

💡 *"தமிழ் அரசியலின் இலக்கும் வழி வரைபடமும்"* | இளையோர் பயிலரங்கம் - சிறகுகள் அமையம்மாறிவரும் அரசியல் சூழலில், தமிழ் தேசி...
23/05/2026

💡 *"தமிழ் அரசியலின் இலக்கும் வழி வரைபடமும்"* | இளையோர் பயிலரங்கம் - சிறகுகள் அமையம்

மாறிவரும் அரசியல் சூழலில், தமிழ் தேசியம் நோக்கி நாம் பயணிக்க வேண்டிய பாதை எது? நம் இலக்குகள் என்ன? அவற்றுக்கான வழி வரைபடம் எவ்வாறு அமைய வேண்டும்?

🎙️ கருத்துரையாளர் : திரு. சி.அ. யோதிலிங்கம்
(அரசியற் பார்வையாளர், சட்டத்தரணி)

📅 24.05.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⌛ மாலை 04.00 மணி
📍 சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பலாலி வீதி, உரும்பிராய்.

Address

209 Palaly Road, Kondavil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when சிறகுகள் அமையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிறகுகள் அமையம்:

Share