Udhayam YC Rayigam UD

Udhayam YC Rayigam UD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udhayam YC Rayigam UD, Youth Organization, Rayigam, Ingiriya.

 #இளைஞர்_யுவதிகளேஎதிர்வரும் 2025-06-08ம் திகதி ஞாயிற்றுகிழமை மாலை 4:30 மணியளவில் றைகம் தோட்டம் மேல் பிரிவு சனசமூக நிலையத...
05/06/2025

#இளைஞர்_யுவதிகளே
எதிர்வரும் 2025-06-08ம் திகதி ஞாயிற்றுகிழமை மாலை 4:30 மணியளவில் றைகம் தோட்டம் மேல் பிரிவு சனசமூக நிலையத்தில் எமது உதயம் இளைஞர் மன்றத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் நிர்வாக தெரிவு மற்றும் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளோம்.

எனவே 15-29 வயதிற்குற்ப்பட்ட றைகம் தோட்ட மேல் பிரிவு இளைஞர் யுவதிகளை தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

இங்ஙனம்
உதயம் இளைஞர் மன்றம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
20/04/2024

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 #மரம்_வளர்ப்போம்_மண்_வளத்தை_காப்போம்சுற்றாடல் அமைச்சு மற்றும் கடற்படையினரின் பங்களிப்புடன் களுத்துறை மாவட்ட செயலகம் மற்...
25/06/2023

#மரம்_வளர்ப்போம்_மண்_வளத்தை_காப்போம்

சுற்றாடல் அமைச்சு மற்றும் கடற்படையினரின் பங்களிப்புடன் களுத்துறை மாவட்ட செயலகம் மற்றும் அலையன்ஸ் நிதி நிறுவனத்துடன் இணைந்து மர நடுகை வேலைத் திட்டம் 2023-06-25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது மன்றத்தின் தலைவர் ர.சுரேஷ் குமார் தலைமையில் நடைப்பெற்றது.

இங்கிரிய மேல் பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகா மாரியம்மன் ஆலய பிரதம குரு அவர்களின் கரங்களால் மரம் நடுகை வேலைத்திட்டம் இனிதே ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ குறிஞ்சி மாக மாரியம்மன் ஆலய வளாகம், சரஸ்வதி கனிஷ்ட தமிழ் வித்தியாலய பாடசாலை மைதானம் மற்றும் றைகம் மேல் பிரிவு சனசமூக நிலையம் உட்பட பொது இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் திருமதி. தர்ஷி கரவிட மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பு உத்தியோகத்தர் திருமதி.ஜீ.புஸ்பகுமாரி, இங்கிரிய பிரதேச செயலக இளைஞர் மன்ற பொறுப்பாதிகாரி திரு.மகேஷ் கங்கந்த, இங்கிரிய தொகுதியின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஸ்ரீநாத் மற்றும் களுத்துறை சிறகு ஒன்றியத்தின் மகளீர் அணி தலைவி தில்ரூபா ஆகியோர் கலந்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

“கோகிலம்” நூலாசிரியருக்கு பாராட்டும் கௌரவிப்பும்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஹய்கெயா பெக்கிங் சர்விஸ் நிறுவனத்தின...
22/03/2023

“கோகிலம்” நூலாசிரியருக்கு பாராட்டும் கௌரவிப்பும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஹய்கெயா பெக்கிங் சர்விஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முத்துலிங்கம் துரைராஜா அவர்களின் நிதி உதவியில் இங்கிரிய, றைகம் மேல் பிரிவை சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் கோகிலேஷ்வரியின் “கோகிலம்” நூல் வெளியீடு களுத்துறை சிறகு ஒன்றியம் ஏற்பாட்டில் 2023-03-19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது களுத்துறை மண்ணுக்கே பெருமை சேர்த்த “கோகிலம்” நூலினை எழுதி வெளியீட்ட செல்வி.யோ.கோகிலேஷ்வரி அவர்களை றைகம் மேல் பிரிவு உதயம் இளைஞர் மன்றம் சார்பில் பாராட்டியும் கௌரவித்தும் இலங்கையின் “இளம் எழுத்தாளர்” எனும் விருதும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் றைகம் கீ/பி ஆலய குருக்கள் பல்கலைகழக வரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதி, ஆலய தலைவர்கள், தோட்ட தலைவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

படப்பிடிப்பு : Akila Balasuriya Photography

03/12/2022
உதயம் இளைஞர் மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க Lions Club of Colombo Grandway நடாத்திய தரம் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடசாலை ...
03/12/2022

உதயம் இளைஞர் மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க Lions Club of Colombo Grandway நடாத்திய தரம் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடசாலை மாணவர்களுக்கான இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு 2022 நவம்பர் மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை றைகம் கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அப்பியாஷ புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு மாணவ மாணவிகளுக்கான கண் பரிசோதனை மற்றும் ஓர் முதியோருக்கான சக்கரை நாற்காலியும் வழங்கப்படவுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன்.சுகந்த், லயன். ஆர். ஜான்ஷ்டன், லயன்.தர்மலிங்கம் தமிழ்செல்வன் மற்றும் லயன்.K.கமலராஜ் இங்கிரிய இளைஞர் மன்ற பொறுப்பாதிகாரி திரு மகேஷ் சின்தக கங்கந்த, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஸ்ரீநாத் மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.ஆனந்தகுமார், உபஅதிபர் ஆசிரியர் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தது குறிப்பிடதக்கது.

Lions Club of Colombo Grandway மற்றும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர் யுவதிகள் பாடசாலை அதிபர் மற்றும் அசிரியர்கள் நிகழ்வில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் உதயம் இளைஞர் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வாறான ஒரு சேவையை எமது மாணவ சமூகத்துக்கு வழங்குவதில் உதயம் இளைஞர் மன்றம் பெருமிதம் கொள்கிறது.

களுத்துறை இளைஞர் யுவதிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு எனும் தொனிபொருளில் 2022 நவம்பர் மாதம் 2ம் 3ம் திகதிகளில் பண்டாரகமையி...
07/11/2022

களுத்துறை இளைஞர் யுவதிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு எனும் தொனிபொருளில் 2022 நவம்பர் மாதம் 2ம் 3ம் திகதிகளில் பண்டாரகமையில் ஓர் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் இங்கிரிய பிரதேச செயலகத்தின் இளைஞர் மன்ற பொறுப்பாதிகாரி திரு மகேஷ் சின்தக கங்கந்த இங்கிரிய பிரதேசத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி புஷ்ப குமாரி இவர்களுடன் எமது மன்றத்தின் சார்பில் கழகத்தின் தலைவர் கோ. துஷாந்தன் மற்றும் ரா.லோஷனா ஆகியோர் கலந்துக்கொண்டதுடன், அதன் போது மதம்,கலாசாரம்,ஒற்றுமை மற்றும் எதிர்கால தலைவர்களின் ஆளுமை தலைமைத்துவ விருத்தி,இளைஞர்களின் கடமை பணிகள் என்பவற்றிக்கான சிறப்பு விரிவுரைகள் வழங்கப்பட்டது.

அவ்விரு நாட்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கிய குறிப்பிடதக்கது.

Address

Rayigam
Ingiriya

Telephone

+94761897155

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udhayam YC Rayigam UD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share