04/04/2024
#அரிய_வாய்ப்பு_மீண்டும்_வருகிறது...
ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது(Eascca Hospice) தொடர்ந்து நடாத்திவரும் ''நோயாளர் பராமரிப்பு(Patient Care)'' இலவச இரண்டுநாள் வதிவிடப் பயிற்சி நெறியானது அனைவருக்கும் மிகவும் பிரயோசனமான ஒன்றாக அமைந்துள்ளது.
நமது வீட்டிலிருக்கும் நோயாளர்கள், வயோதிபர்கள், வலதுகுறைந்தவர்கள் , விஷேட தேவையுடையவர்கள் போன்றோரை ''அடிப்படை மருத்துவ அறிவோடு எவ்வாறு பராமரிப்பது'' என்பது பற்றிய அறிவினை இப்பயிற்சிநெறி அனைவருக்கும் வழங்குகின்றது.
இன்றுவரை சுமார் 1200 இற்கும் அதிகமானவர்கள் நாடளாவிய ரீதியில் இதில் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள்.
ஆண் , பெண் இருபாலாரும் கலந்துகொள்ளக்கூடிய, வயதெல்லைகளற்ற இவ் வதிவிடப் பயிற்சிநெறியில் கலந்துகொள்ள தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கான இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
பயிற்சிநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகின்றது. சான்றிதழ் கடடணமாக ரூபாய் 1000 மாத்திரம் செலுத்தவேண்டும்.
பயிற்சிநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வாரமும், வாரநாட்களான புதன் வியாழன் மற்றும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறும்.
இம்மாதம்(ஏப்ரல்) 17,18(புதன் வியாழன்), 20,21(சனி ஞாயிறு), 24,25(புதன் வியாழன்), 27,28(சனி ஞாயிறு) ஆகிய தினங்களில் வகுப்புக்கள் நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள் ... உங்களுக்கு பங்குபற்ற இயலுமான திகதி, உங்களது முழுப்பெயர், முகவரி மற்றும் வாட்ஸாப் இலக்கம் ஆகியவற்றினை 0777557553 எனும் வட்ஸப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள்.
ஏனையவர்களும் கலந்துகொண்டு பயன்பெற இந்தப் பதிவினை அதிகமதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
நோயாளர் பராமரிப்பு பயிற்சிநெறி இணைப்பாளர்,
கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம், ஏறாவூர்.