29/07/2026
ஏறாவூர் மகளிர் நல ஆலோசனை மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஊடாக தொழில் முயற்சிக்கான தையல் இயந்திரம் வழங்கல் நிகழ்வு
ஏறாவூர் மகளிர் நல ஆலோசனை மற்றும் அபிவிருத்தி மையத்தின் உறுப்பினரான திருமதி சித்தி றமீஸா (கைம்பெண்) அவர்களுக்கு, தொழில் முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் ZOJE Power Digital தையல் இயந்திரம் 2026 ஜூலை 28 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் ஏறாவூர் மெகா பவர் இடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, மையத்தின் தலைவர் திருமதி சேகு பரிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர் பிரதேச செயலாளர் திரு எஸ். முஸம்மில் அவர்களினால், தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பயனாளியான திருமதி சித்தி றமீஸா அவர்களுக்கு குறித்த தையல் இயந்திரம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் நல ஆலோசனை மற்றும் மேம்பாடு மையத்தின்
மகளிரின் பொருளாதார வலுவூட்டலையும் சுயதொழில் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய உதவித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மையம் தெரிவித்துள்ளது.
Wwcd.