06/05/2026
PAVE has created an empowered network of youth leaders and community advocates who are driving inclusive social change 💪🏽.
PAVE STORIES 👨💼👩💼
My journey with PAVE has been truly transformative, both personally and professionally. Like many others, I began as a volunteer with PAVE, taking my first steps into community engagement and advocacy work.
Later, I was given the opportunity to serve as Team Leader of Advocacy Group. In this role, I was able to lead and implement our advocacy initiatives more effectively.
One of the most meaningful experiences was working closely with persons with disabilities, addressing issues related to their voting rights, and amplifying their voices to the Election Office and community-level platforms. PAVE provided me with a strong platform to be their voice.
Subsequently, I served as the Jaffna District PAVE Coordinator, where I had the opportunity to implement four advocacy initiatives. During this journey, I worked closely with diverse groups including youth, transgender communities, persons with disabilities, and marginalized communities.
PAVE also enabled me to directly engage with community-based organizations and government institutions, especially the Election Office, making our advocacy efforts more impactful and meaningful.
Overall, PAVE has strengthened my skills and given me a powerful experience of working closely with communities and creating real social impact 🤝✨
PAVE உடனான என் பயணம் என்னை தனிப்பட்டும், தொழில்முறையிலும் மிகுந்தளவில் மாற்றியமைத்த ஒரு அர்த்தமுள்ள அனுபவமாகும். எல்லோரையும் போலவே, நான் முதலில் PAVE அமைப்பில் ஒரு தன்னார்வத் தொண்டராக என் பயணத்தைத் தொடங்கினேன்.
பின்னர், பரிந்துரை முன்னேடுப்பு (Advocacy) குழுவின் தலைவராக செயல்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப் பொறுப்பில், எமது பரிந்துரை செயற்பாடுகளை வழிநடத்தி, திறம்பட முன்னெடுக்க முடிந்தது.
குறிப்பாக, இயலாமை கொண்ட நபர்களுடன் நெருக்கமாக பணியாற்றி, அவர்களின் வாக்குரிமை தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அவற்றை தேர்தல் அலுவலகம் மற்றும் சமூக மட்டங்களுக்கு கொண்டு சென்று அவர்களின் குரலாக செயல்படுவதற்கு PAVE எனக்கு ஒரு வலுவான தளமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட PAVE இணைப்பாளராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்து, நான்கு பரிந்துரை முன்னேடுப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. இதில், இளைஞர்கள், திருநர் சமூகத்தினர், இயலாமை கொண்ட நபர்கள் மற்றும் விளிம்புநிலையிலுள்ள சமூகக் குழுக்கள் என பல்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்றும் அனுபவமும் கிடைத்தது.
சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்கள், குறிப்பாக தேர்தல் அலுவலகத்துடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி, எமது பரிந்துரை செயற்பாடுகளை முன்னெடுக்க PAVE ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.
மொத்தத்தில், PAVE எனது திறன்களை மேம்படுத்தி, சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு வலுவான மற்றும் அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்கியுள்ளது 🤝✨
Nila Nila