Student Excellent Education Development Society

Student Excellent Education Development Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student Excellent Education Development Society, Non-Governmental Organization (NGO), 55/3, Baily Cross Road, Batticaloa.

SEEDS அமைப்பின் செயலாளர் எங்கள் செயல் வீரருக்குஅகவை தின நல்வாழ்த்துக்கள் Kirupairetnam Navaneethan
17/04/2025

SEEDS அமைப்பின் செயலாளர்
எங்கள் செயல் வீரருக்கு
அகவை தின நல்வாழ்த்துக்கள்
Kirupairetnam Navaneethan

https://seedshelp.com/ மாணவர்களுக்கு சிறந்த  கல்வியை வழங்கும் நோக்கில் உருவாக்கம் பெற்ற SEEDS அமைப்பானது . தற்போது  மட...
24/02/2025

https://seedshelp.com/

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் உருவாக்கம் பெற்ற SEEDS அமைப்பானது . தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பல உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்..
இதற்கு தொண்டர் அடிப்படையில் பல சமூக ஆர்வலர்கள் எம்மோடு இணைந்து செயற்படுகின்றனர்.
அவர்களுக்கு எமது அமைப்பின் பாராட்டுக்களும் நன்றிகளும்....

இவர்களைப்போல் தொண்டர் அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்காக செயற்பட்டு அம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்களை எங்களுடன் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் .

நன்றி

எம்முடன் இணைந்து செயற்பட கீழ் உள்ள படிவத்தை பூரணப்படுத்தி எமக்கு அனுப்புங்கள் .

https://forms.gle/gyKXfL3NYbZfu8PF9

Student Excellent Education Development Society

SEEDS
24/05/2024

SEEDS

இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களினுடைய பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கோடு எமது மாணவர் மேன்மை கல்வ...
27/04/2024

இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களினுடைய பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கோடு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் இலவச செயலமர்வுகள் பிரதேச ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக நேற்றைய தினம் (26.04.2024) வெல்லாவெளி பிரதேசப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் மட்/பட்/திக்கோடை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்...
25/04/2024

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் கிராம புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்குடன் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள வவுனதீவு பிரதேச மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது எதிர்வரும் 27.04.2024, 28.04.2024ம் திகதிகளில் மட் /மமே/ குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்...
25/04/2024

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் கிராம புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்குடன் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொக்கட்டிச்சோலை பிரதேச மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது எதிர்வரும் 27.04.2024, 28.04.2024ம் திகதிகளில் மட் /மமே/கொக்கட்டிச்சோலை ராமகிருஷ்னா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்...
25/04/2024

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் கிராம புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்குடன் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள திக்கோடை பிரதேச மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது எதிர்வரும் எதிர்வரும் 26.04.2024,27.04.2024 ம் திகதிகளில் மட் /பட்/ திக்கோடை கணேசா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்...
25/04/2024

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் கிராம புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்குடன் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள வெல்லாவெளி பிரதேச மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது எதிர்வரும் 26.04.2024,27.04.2024 ம் திகதிகளில் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

எமது SEEDS அமைப்பின் அலுவலகம் 55/3 வெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு எனும் விலாசத்தில் இன்று (10.04.2024) உத்தியோகபூர்வம...
10/04/2024

எமது SEEDS அமைப்பின் அலுவலகம் 55/3 வெயிலி குறுக்கு வீதி மட்டக்களப்பு எனும் விலாசத்தில் இன்று (10.04.2024) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எமது அமைப்பின் நிறுவகர், போசகர் தலைவர்,இணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பிரதேசமட்ட உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வு வரவேற்புரை நிறுவகரின் பிரதான உரை மற்றும் தலைவரின் கருத்துரையின் பின்னரான அலுவலகத்தை திறக்கும் நிகழ்வு என வெகுவிமர்சியாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் நிறுவகர் கருத்து தெரிவிக்கையில் இந்நாளில் இந்த சங்கத்தினை திறந்து வைப்பதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் காரணம் நமது நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் நமது குழந்தைகளின் கல்வி தரத்தினை உயர்த்த நாம் முன்னெடுக்கும் உயரிய பணிக்கான தொடக்க நாளான இன்று முதல் பல மாணவ செல்வங்களின் கல்வி தரம் உயரும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை ஆகவே இது மகிழ்வுக்குரிய நாள் என்பதில் மாற்றம் இல்லை இந்த சங்கத்தினுடாக அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் எனும் தூரநோக்கில் நிறுவப்பட்ட அமைப்பே இந்த சங்கமாகும் ஆகவே இன்றைய இந்த நாளில் எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பை இட்டு தான் மகிழ்வதாகவும் மென்மேலும் இவ் அமைப்பு விருந்தி அடைய வேண்டும் எனவும் கூறினார்

மேலும் செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு விரைவாக எதிர்வரும் வாரங்களில் எமது அமைப்பினால் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

- நிர்வாகசபை-

புதுவருடத்தில்  கல்விக்கான எமது மற்றுமொரு சேவை ************************************************************எமது மாணவர்கள...
06/01/2024

புதுவருடத்தில் கல்விக்கான எமது மற்றுமொரு சேவை
************************************************************

எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எமது #மாணவர்_மேன்மை_கல்வி_அபிவிருத்திச்_சங்கம் _ அமைப்பானது இம்முறை 5 ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பல மாணவர்களுக்கு அவர்களின் தேவைகருதி பல் வேறுபட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது .

இதன் ஓர் அங்கமாக - மட்/ ககு/ கஜமுகன் வித்தியாயாலயம் - தேவபுரம் பாடசாலையில் 148 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் எமது கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி - """""சந்திரமோகன் டிலக்சனா""'''" அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது .

அத்துடன் மட்/ ககு / இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம் - முறக்கொட்டான்சேனை பாடசாலையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து பெருமைசேர்த்த செல்வி - """""""சந்திரசேகரன் டிபோஷினி """""' அவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் SEEDS அமைப்பின் தலைவர் ,செயலாளர்,பொருளாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர் .

இதற்கான உதவியை வழங்கிய நிதி வழங்குனருக்கு எமது அமைப்பின் சார்பாகவும் ,மாணவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

நன்றி
SEEDS

Address

55/3, Baily Cross Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 04:30
Tuesday 08:30 - 04:30
Wednesday 08:30 - 04:30
Thursday 08:30 - 04:30
Friday 08:30 - 04:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Excellent Education Development Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share