Society of St.Vincent De Paul - Puliyanthivu Batticaloa

Society of St.Vincent De Paul - Puliyanthivu Batticaloa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Society of St.Vincent De Paul - Puliyanthivu Batticaloa, Charitable organisation, Batticaloa.

The St Vincent de Paul Society is a lay Catholic organisation that aspires to live the gospel message by serving Christ in the poor with love, respect, justice, hope and joy, and by working to shape a more just and compassionate society.

06.05.2026 இறைபாதம் அடைந்த காந்திகிராமம் புனித செபமாலை மாதா ஆலய புனித வின்சென்ட் டி போல் ஆலோசனை சபையின் முன்னாள் செயலாளர...
06/05/2026

06.05.2026
இறைபாதம் அடைந்த காந்திகிராமம் புனித செபமாலை மாதா ஆலய புனித வின்சென்ட் டி போல் ஆலோசனை சபையின் முன்னாள் செயலாளரும், உறுப்பினருமாகிய சிவயோகநாதன் காமலீட்ரா விஜயகுமாரி (விஜயா) அவர்களின் குடும்பத்தாருடன் புனித மரியாள் பேராலய புனித வின் சன்ட் டி போல் சபையினர் துயர் பகிர்கிறோம்.

அவரின் ஆன்மா இறைவன் இல்லத்தில் அமைதியில் இளைப்பாறட்டும்

புளியந்தீவு புனிதவின் சன்ட் டி போல் சபையினரால் உயிர்ப்பு விழா நிகழ்வாக (05.04.2026) தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்...
06/04/2026

புளியந்தீவு புனிதவின் சன்ட் டி போல் சபையினரால் உயிர்ப்பு விழா நிகழ்வாக (05.04.2026) தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கு ரூபாய் 3,000/- பெறுமதியான உலர் உணவப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

01.04.2026மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம். - “மாற்றத்திற்காக அழைக்கப்படும் நவீன குழந்தைகள்”புனித மரியாள் பேரால...
01/04/2026

01.04.2026
மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம். - “மாற்றத்திற்காக அழைக்கப்படும் நவீன குழந்தைகள்”
புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையினரின் ஏற்பாட்டிலும், அனுசரணையிலும் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான “மாற்றத்திற்காக அழைக்கப்படும் நவீன குழந்தைகள்” எனும் தொனிப்பொருளில் தவக்கால தியானம் 01.04.2026 பங்கில் நடைபெற்றது. சிந்தனை இலகுபடுத்தினராக அருட்தந்தை ரெவல் அ.ம.தி கலந்து கொண்டார்.

21.03.2026 - வருடாந்த நோயாளர்களுக்கான விஷேட திருப்பலி.தூய வின் சன்ட்டி போல் சபையினரின் பெரும் பணிகளில் ஒன்றான நோயாளர்களு...
21/03/2026

21.03.2026 - வருடாந்த நோயாளர்களுக்கான விஷேட திருப்பலி.
தூய வின் சன்ட்டி போல் சபையினரின் பெரும் பணிகளில் ஒன்றான நோயாளர்களுக்கான விசேட திருப்பலியும் எண்ணை பூசுதல் வழிபாடும் இன்று புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையினரால் ஆயத்தம் செய்யப்பட்டு, மறை மாவட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை பிறைனர் செலர் அடிகளினால் நிறைவேற்றப்பட்டது.

31/12/2025
21.12.2025ஏழைகளின் அன்புப்பணிக்கு மரியாள் பேராலய பீடப்பணியாளர்கள் தங்களது போஷகருடன் வருகைதந்து நன்கொடை தந்தனர்இவர்கள் அன...
22/12/2025

21.12.2025
ஏழைகளின் அன்புப்பணிக்கு மரியாள் பேராலய பீடப்பணியாளர்கள் தங்களது போஷகருடன் வருகைதந்து நன்கொடை தந்தனர்
இவர்கள் அனைவருக்கும் செபத்துடன் கூடிய வாழ்த்துக்கள்

21.12.2025புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையின் வருடாந்த கிறிஸ்மஸ் விழா மகிழ்வின் பகிர்வு இம்முறை பங்கு ம...
21/12/2025

21.12.2025
புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையின் வருடாந்த கிறிஸ்மஸ் விழா மகிழ்வின் பகிர்வு இம்முறை பங்கு மண்டபத்தில் புனித வின்சன்ட் டி போல் சபையின் குடும்பங்களோடு நடைபெற்றது. நிகழ்வில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அடிகளின் ஆசீரோடு தேவையிலுள்ள குடும்பங்களுக்கு புது ஆடை,உலர் உணவுப் பொருட்கள் , மற்றும் பண உதவி போன்றவை வழங்கப்பட்டு கிறிஸ்து பிறப்பின் மகிழ்வின் பகிர்வு நிகழ்வு நடைபெற்றது. கொடையாளர்களுக்கு எமது விஷேட நன்றிகள்.

யேசு பிறப்பு பெருவிழாவை ஆன்மீகஉணர்வுடன் கொண்டாட அழைப்பு!-பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித்  இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக...
04/12/2025

யேசு பிறப்பு பெருவிழாவை ஆன்மீக
உணர்வுடன் கொண்டாட அழைப்பு!
-பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்த அவர்,

"நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர் அகதி முகாம்களில் உள்ளனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு எந்த உடைமைகளும் இன்றி தவிக்கிறார்கள்.
இப்படியான சூழலில் நாம் எப்படி ஆடம்பரமான வெளிப்படையான கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, "இந்த நத்தார் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி, ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண் செலவுகளால் மேற்கொள்ளப்படும் கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு" இறை விசுவாசிகள் அனைவருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

"யேசு பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுங்கள், ஆனால் அதை ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளுடனும், தேவையில் இருப்பவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதன் மூலம் செய்யுங்கள்" என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Copied from Holy Mary

“மனமகிழ்ந்து கொடையளியுங்கள் “ Society of St.Vincent De Paul, St.Mary’s Cathedral Puliyanthivu.தேவையுள்ள குடும்பங்கள் நீங...
01/12/2025

“மனமகிழ்ந்து கொடையளியுங்கள் “
Society of St.Vincent De Paul, St.Mary’s Cathedral Puliyanthivu.

தேவையுள்ள குடும்பங்கள் நீங்கள் இரங்கிக் கொடுப்பதால் மகிழ்ந்து வாழட்டும்.
நீங்கள் விரும்பியதை, உங்களால் முடிந்ததை எதிர்வரும் 12.12.2025 முன்னர் எமக்கு கொடையளியுங்கள்.

29.09.2025புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையினரால் யூபிலி ஆண்டின் புனிதரின் திருவிழா சிறப்பு சொல்பாடாக பங...
28/09/2025

29.09.2025
புனித மரியாள் பேராலய புனித வின்சன்ட் டி போல் சபையினரால் யூபிலி ஆண்டின் புனிதரின் திருவிழா சிறப்பு சொல்பாடாக பங்கு மறைக்கல்வி மாணவர்கள் பங்கு மக்களுக்குமான வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் - 2025
பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான அருளாளர் பிரட்றிக் ஓசானம் , புனித வின்சன்ட் டி போலின் வாழ்க்கையும் பணி வாழ்வும் புனித வின்சன்ட் டி போல் சபையின் செயல்பாடுகள் சார்ந்த விடயங்களை உள் வாழ்ங்கி நடத்தப்பட்ட போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு இன்று ஆலோசனை சபையின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது நடைபெற்றது.

Address

Batticaloa
30000

Telephone

+94773534160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Society of St.Vincent De Paul - Puliyanthivu Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Society of St.Vincent De Paul - Puliyanthivu Batticaloa:

Share