19/12/2025
எமது திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி.!
எமது SWO நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய சைவ மன்றத்தின் நிதி உதவியின் கீழ், முதற்கட்டமாக எமது இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 2025.12.15ஆம் திகதி எமது பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை எமது அமைப்பின் உப தலைவர் திரு.அ.சதானந்தம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திரு.எஸ்.சங்கீர்த்தன் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபர் திரு. சந்திரசேகரம் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் விபுலானந்தா ஆண்கள் இல்ல முகாமையாளர், எமது நிறுவன இணைப்பாளர் மற்றும் பணியாளர்கள், திலகவதியார் மகளிர் இல்ல முகாமையாளர் மற்றும் பணியாளர்கள், தையல் ஆசிரியை, எமது நிறுவன ஆலோசகர்கள், இல்ல நிர்வாகிகள், வாழ்வாதார உதவி பெறும் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இல்லக் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.