30/05/2026
பிறப்பென ஒரு நாள் - போன்றே
இறப்பென ஒரு நாள் - சேர்ந்தே
ஞானமும் பெற்று -
கௌதமர் மிளிர்ந்திட்ட திருநாள்
நினைவாய் சுடர்களை ஏற்றி
வனப்பில் மகிழ்ச்சியைக் கூட்ட
கூண்டில் ஒளியினை அடக்கின்
கூண்டும் வெளிச்சத்தில் மிதக்கும் போலே
கருணையும் கலையும்
காற்றினில் வியாபிக்க
அன்பும் தானமும் தழைத்து
மண்ணில் சமாதானமும் நிலவட்டும்
புனித நாளை கூறி
புனிதம் பெருகப் போற்றி
வைகாசி மாத பெளர்ணமியில் புத்தரின் பாதையில் வாழவேண்டிய நோக்கங்களோடு வெசாக் தினத்தை கொண்டாடும் சகோதர உறவுகளுக்கு இதயபூர்வமான வெசாக் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...!
✍️ ம.பானுஜன்
🎨 ப.நவின்