Salam Cultural Center & Masjith-ul-Salam.

Salam Cultural Center &  Masjith-ul-Salam. Islamic Organization
www.salamculturalcenter.webs.com
“No one has ever become poor by giving.”

Early in the Eighty[1980] the Center started as Salam mosque its function and activities on a small scale, from cottage situated at the mavadi junction Akkaraipattu. But the Board of Trustees of the mosque aspired to build a new impressive cultural Center in a way suiting its prestigious position and the important Islamic role it plays, and also, to be one of the landmarks of Akkaraipattu City.

Thus, an overall project comprising a mosque, a Quran Matharasa, a library, Thawa programme, free medical camp.and a lecture hall, was planned. The Board of Trustees directed their attention to start with the first phase of Three this project: The Salam Cultural centar.

26/03/2026

ஒரு மனிதன் ஒரு கிராமவாசியிடம் கேட்டான்: "மற்றவர்களைப் போல நீ ஏன் அதிகமாகப் பேசுவதில்லை?"

அதற்கு அவர் பதிலளித்தார்: "நான் அதிகமாகப் பேசினால் தவறுகள் இழைப்பேன், அமைதியாக இருந்தால் பாதுகாப்பாக இருப்பேன்."

அவன் மீண்டும் கேட்டான்: "அப்படியானால் நீங்கள் மௌனத்தையே விரும்புகிறீர்களா?"

அதற்கு அவர்: "இல்லை, நான் பாதுகாப்பையே விரும்புகிறேன்... ஏனெனில் அது வருத்தமில்லாத லாபம்."

உன்னுடைய நாவைக் கட்டவிழ்த்து விட்டால் அது உன்னை அழிவில் தள்ளும்.

அதைக் கட்டுப்படுத்தினால் அது உன்னைக் காப்பாற்றும்."

19/03/2026

❤️ திருமணத்திற்கு முன்பே உங்கள் பிள்ளைகளுக்கான தாயைத் தேர்ந்தெடுங்கள்!

👶🏻 திருமணம் என்பது வெறும் காதல் உணர்வோடு மட்டும் முடிந்துவிடும் ஒன்றல்ல; அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு! உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களிடமே இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:
"இந்த பெண் என் பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கத் தகுதியானவரா?"

⚠️ உங்கள் முடிவு வெறும் வெளித்தோற்றத்தை (அழகை) மட்டும் அடிப்படையாகக் கொண்டிருந்தால், வாழ்க்கையின் நிஜமான பொறுப்புகள் வரும்போது நீங்கள் தடுமாறலாம்.

உங்களுக்குத் தேவைப்படுபவர்:

✔️ சோதனைகள் மற்றும் அழுத்தங்களின் போது உறுதியாக நிற்பவர்.

✔️ செல்வச் செழிப்பான காலங்களில் நன்றியுள்ளவராக இருப்பவர்.

✔️ குடும்பத்தை ஞானத்துடன் வழிநடத்தி, ஆதரவளிக்கக் கூடியவர்.

✔️ பிள்ளைகளை அன்போடும் விழிப்புணர்வோடும் வளர்ப்பவர்.

✔️ ஒரு மனைவியாகவும் தாயாகவும் தனது கடமைகளைச் சரியாகச் சமநிலைப்படுத்துபவர்.

🎯 உங்கள் தேடல் மேலோட்டமாக இருக்க வேண்டாம்!

இன்பத்திலும் துன்பத்திலும், அன்போடும் பொறுமையோடும் உங்களோடு வாழக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடுங்கள்.

🔹 அழகு என்பது காலப்போக்கில் மங்கிவிடும். ஆனால் ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் உண்மையான அன்பு என்றும் நிலைத்திருக்கும். உங்கள் முடிவானது உங்கள் வாழ்க்கையையும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் வளப்படுத்தும் தரநிலைகளைக் கொண்டிருக்கட்டும். 💕

அத்தகைய நற்பண்புகளும் ஒழுக்கமும் கொண்ட ஒரு பெண்ணை நீங்கள் கண்டால், அவரை இருகரம் பற்றி உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் அவர் தூய தங்கம் (தங்கக்கட்டி) போன்றவர்!

தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ்

18/08/2023

Be awereness scarm!

இத்தோடு மூணாவது நபர். அதில் இருவர் உயர் தரம் படிக்கும் மாணவர்கள். அக்கரைப்பற்றில் இருக்கும் எனது சட்டத்தரணி அலுவலகத்தில் வந்து சந்தித்தார்கள்.

ஒரு வெப்சைட். அதில் பல வகையான பொருட்கள் இருக்கும்.ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், தளபாடங்கள்.

பிரமிட் முறையில் லிங்க் ஒன்றினூடாக கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் 3 நாட்களுக்கு test trial வழங்கப்படும்.

பல பெகேஜ்கள் இருக்கின்றன.முதலாவது பெக்கேஜ் 1500.00 இரண்டாவது 2500.00 மூன்றாவது 9000.00 அடுத்தது 25000.00அடுத்தது 75000.00

நீங்கள் முதல் பெக்கேஜைத் தெரிவு செய்து அதற்குரிய பொருட்களை வாங்க வேண்டும். சுமார் 15 tasks இருக்கின்றன. நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்களுக்கு வராது. நீங்கள் வாங்குவது மாத்திரமே.வாங்க வாங்க அதற்கேற்றாற்போல் உங்களுக்கு கொமிஷன் கிடைக்கும். அது உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

“எப்படி பொருட்களை வாங்குவீர்கள் என்று கேட்டேன்?”

“சுமார் மூன்று வங்கிகளின் கணக்கிலங்கள் தரப்படுகின்றன. அக்கணக்கிலக்கங்களுக்கு பணத்தை வைப்புச் செய்ய வேண்டும்.தேடிப்பார்த்தேன். ஹட்டன், மாவனெல்ல, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் கிளைகளில் இருக்கிறது.”

“எப்படி அவர்களைத் தொடர்பு கொள்வீர்கள்?”

“ஒரு டெலிகிராம் கணக்கு.ஒரு அமெரிக்க நம்பர் அல்லது ஐக்கிய ராச்சிய இலக்கத்தினூடாக வட்சப்பில் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களோடு பேச முடியாது. மெசேஜ் மாத்திரம் பண்ணலாம். “

இதைச் செய்வதால் வெப்சைட்காரர்களுக்கு என்ன லாபம்?

அவர்களில் வெப்சைட் இணையத்தில் தேடப்படும்போது முன்னிலையில் நிற்கும்.அதனால் அவர்கள் வியாபாரம் பெருகும் என புருடா விட்டிருக்கிறார்கள்.

“எப்படி உங்கள் கமிஷனை அல்லது உங்கள் முதலை மீளப்பெறுவீர்கள்? “

“அந்த வெப்சைட்டுக்குள் போய் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். உங்கள் கணக்கிலக்கத்தில் நீங்கள் போட்ட காசு வந்து சேரும்”- என்றான் ஒரு ஏஏல் படிக்கும் மாணவன்.

“சரி காசு உங்கள் எக்கவுண்டுக்கு வந்ததா?”
“இல்லை.”

முதலாவது வந்த மாணவர் 240,000 பணத்தை வைப்பிலிட்டிருக்கிறார். முதலும் இல்லை. கொமிஷனும் இல்லை.

இரண்டாவது மாணவர் 9000 போட்டுவிட்டு ஏதோ ஒன்று சரியாக இல்லாததால் என்னைச் சந்திக்க வந்துருந்தார்.

ஆதாரங்களுக்காக வியாரப்பதிவு சான்றிதழ், Inland Revenue கடிதம் எல்லாம் காட்டுகிறார்கள்."

இந்த ஏமாற்று வேலையில் பாடசாலை மாணவர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள்.
ஒரு போலியான வெப்சைட்டை உருவாக்கிவிட்டு மாணவர்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். அவர்கள் போட்ட காசு திரும்பி வராது. ஒரு சிலருக்கு திரும்பி வந்திருந்தால், அது பலரை உள்ளே ஈர்ப்பதற்கான அவரின் மாகடிங் வியூகம்.
விபரம் தெரியாத வயது. மாணவர்கள் இந்த வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்.

இது பரவாயில்லை. மாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு.அவர் கொஞ்சம் பெரிய வயதுக்காரர்.
“ என்ன விஷயம்”
“ சேர், ஒரு வெப்சைட் ஒண்டு..”
“ கொஞ்சம் பொறுங்கொ.எவ்வளவு காசி இதுவரைக்கும் டிபோசிட் பண்ணி இரிக்கியல்”
“35 லெச்சம்”

11/08/2023
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா?சம்வவம் 1ஷாணி 16 வயது பள்ளி செல்லும் மாணவி ,  மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி அது...
02/08/2023

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா?

சம்வவம் 1
ஷாணி 16 வயது பள்ளி செல்லும் மாணவி , மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி அதுபோல் பேரழகி. பள்ளி செல்லும் இளவல்களின் மங்காத பேசு பொருள். பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை. பெற்றோர் இருவரும் மிகப்பெரும் நிறுவனங்களில் 6 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிற பெரும்புள்ளிகள். இதனால் அவள் போகின்ற வருகின்ற வழிகளெல்லாம் வாலிபக் கூட்டம். இந்த தொல்லைகளை தவிர்ப்பதற்காக அவள் பயணிப்பதற்கென்றே ஒரு சொகுசு கார் அதற்கென்று தனியான ஒரு நம்பிக்கையான, மிக நம்பிக்கையான ட்ரைவர். இப்படியாக மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வந்த அந்தப் பெண்பிள்ளை ஒருநாள் வயிற்று வலியால் அவதிப்படுகிறாள். உடனே மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகிறாள். வைத்திய பரிசோதனைகளின் போது அவளது வயிற்றில் இரண்டு மாத சிசு வளர்வது கண்டு பிடிக்கப்படுகின்றது. இந்த செய்தியை கேள்வியுற்ற பெற்றோர்கள் இருவருமே மயங்கி விழுந்து விடுகின்றனர். கதை போல் இருந்தாலும் இது உண்மை. கடைசியிலே அந்த குழந்தைக்கு காரணம் அவள் அங்கள், அங்கள் என்று அன்போடு அழைக்கின்ற, பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் நம்பிக்கையானவர், மிக நம்பிக்கையானவர் என முத்திரை குத்தப்பட்ட வாகனச் சாரதி தான் என்பது தெளிவாகின்றது.

சம்பவம் 2
ஐந்து வயதுள்ள சின்மயி மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில் பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை . எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள் , முறண்டுபிடிக்கிறாள், ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக தூங்குவது கிடையாது . முன்னரைப் போல் சிரித்த முகம் இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள். இப்படி சில வாரங்களாக இருந்தவள் ஒருநாள் திடீர் திடீரென காரணமில்லாமல் சிரிப்பதும் அழுவதும் இடை இடையே தனியே கதைப்பதுமாக , மொத்தமாக ஒரு பைத்தியத்தின் உருவமாக மாறி விடுகிறாள். இப்பொழுது வைத்தியத்திற்காக அனுமதிக்கப்படுகிறாள். பல் வேறுபட்ட பரிசோதனைகளை செய்துகொண்டு எல்லாமே நோமல் என வருகின்றது. கொஞ்சம் ஆழமாக அவருடன் கதைத்த போது, கவுன்சலிங் செய்தபோது போது அவள் வீட்டிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக வருகின்ற ஐம்பது வயது ஆசிரியரினால் கடந்த ஒரு மாதமாக தொடர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்ற விஷயம் வெளியே வருகின்றது. தொடர் பாலியல் துன்புறுத்தலினால் ஏற்பட்ட மனப்பிரள்வே இவ்வாறான நிலைமைக்குத் காரணம் எனவும் கண்டறியப்படுகிறது.

சம்பவம்-3
முராசில் 13 வயது ஒரு சூறத்தான ஹிப்ழு மாணவன். அடிக்கடி வயிற்று நோவு , மலச்சிக்கல் மற்றும் சிறுநீரில் கிருமித் தொற்று என வைத்தியத்திற்காக வருகின்ற ஒரு பையன். தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கடைசியாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வைத்திய பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவனுக்கு சிபிலிசு எனும் பாலியல் நோய் இருப்பதாக கண்டு பிடிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அவனது உஸ்தாத் தான் என்பதும் இறுதியிலேயே தெரியவருகிறது .

இவைகளெல்லாம் நான் கடந்த காலங்களில் சந்தித்த பல்வேறுபட்ட பாலியல் துஷ்பிரயோகங்களின் ஆழ அகலத்தை தெளிவுபடுத்துகின்ற ஒரு குறுக்கு வெட்டுமுகம் மட்டுமே. எல்லாவற்றையும் எழுதப் போனால் ஒரு தொடர் கட்டுரையே வந்துவிடும்.

பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மருத்துவ பீடத்தில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் சட்டமருத்தவத்திலும், சிறுவர் மருத்துவத்திலும் படித்தபோது இவைகள் எல்லாம் இங்கே நடக்கின்றதா இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். இவைகள் எல்லாம் எங்கோ உலகின் ஒரு மூலையில் வெள்ளைக்காரர்களால் செய்யப்படும் அல்லது கதைகளில் மட்டுமே சாத்தியமாருக்கின்ற செயல்கள் என்று உறுதியாக நம்பியவர்களின் தலைவன். அதன்பின் பயிற்சி வைத்தியராக மற்றும் சிறு பிள்ளை வைத்தியராக , பயிற்சி வைத்திய நிபுணராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றிய காலப்பகுதிகளில் நான் கண்டு , கேட்டு, பெற்ற அனுபவங்களின் மூலம் இந்த எண்ணம் தலைகீழாக மாறிவிட்டுருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நான் கேட்பவைகளை, பார்ப்பவைகைளை எல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் குழந்தைகளை வெளியே விடவே மாட்டீர்கள்.

பொது­வாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­னது பல்­வேறு வடி­வங்­களில் நடைபெறுகிறது. இது உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Physical abuse), உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Psychological abuse), பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Sexual abuse), உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Emotional abuse ), புறக்­க­ணிப்பு ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோகம் (Neglect) எனப் பல்­வேறு கோணங்­களில் சிறு­வர்கள் மீது பிரயோகிக்கப் படுகிறது. இதில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்­மை­கா­ல­மாக அதி­க­ரித்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ள­து.

மதரு­மா­ரினால் பாலியல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகும் சிறு­வர்கள், ஆசிரி­யர்களினால், ஆலோ­சகர்­க­ளினால் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாகும் மாண­வர்கள், வைத்­தி­ய­ரினால் பாலியல் இம்­சைக்­குக்கு உள்­ளாகும் நோயாளிச் சிறு­வர்கள், தந்­தை­யினால் வன்­பு­ணர்­வுக்கு ஆளாகும் மகள், அண்­ண­னினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாகும் தங்கை, மாமா­வினால் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாகும் மரு­மகள் என்று துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகும் சம்­ப­வங்கள் தினமும் நடந்­தே­று­வதை நீங்களும் ஊடகச் செய்­திகள் மூலம் அறி­ந்துதான் இருப்பீர்கள். ஆனால் மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவது மட்டுமல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும், நிர்வாகிகளும், அமைப்புக்களும் , ஏன் ஊர் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும் போது மட்டுமே இந்த சிறுவர் துஸ்பிரயோகம் வியாபித்திருக்கும் விஸ்தீரணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சமூகமாக நாம் முன்னேற இன்னும் நிறைய தூரம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடை பெற கார­ண­மென்ன, துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்­த­கை­ய­வர்­களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்­ப­டு­கி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாது­காக்­கலாம் அதற்­கான முறை­யான பொறி­மு­றைகள் எவை போன்ற பூரண அறிவை பெறு­வது மிக அவ­சி­ய­மாகும். இவை குறித்த முறை­யான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கை­கள் முறை­யா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலும் பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள் மற்றும் பொது­மக்கள் மத்­தியில் கிராமம் மற்றும் நகரம் தோறும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும். இவைகள் எல்லாவற்றையும் இப்பத்தியில் எழுவது நடைமுறை சாத்தியமற்றது எனினும் ஒரே ஒரு அடிப்படையை புரிந்து கொண்டால் இவைகளை தடுத்துக் கொள்ள முடியும்.

பாலியல் விட­யத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்­பி­வி­ட­லா­காது என்பது தான் அந்த அடிப்படை. ஒருவர் எவ்வளவு நல்லவராகவும் நம்பிக்கையானவராகவும் இருக்கலாம் அது போல் உங்களுக்கு தெரியாத நிலையில் அவர் கெட்டவராகவும் இருக்கலாம். நல்லது, கெட்டது என்ற இரண்டு குணங்களும் ஒரே மனிதனிடம் ஒரே நேரத்தில் இருக்கலாம். யாரும் 100% நல்லவர் கிடையாது. சந்தர்ப்பம், சூழல் என்பவைகள் தான் ­நல்லவர், கெட்டவர் என்பதை தீர்மானிக்கிறது. சிம்பிளாக சொல்வதென்றால் ஒருவரின் நெட் ப்ரவுசிங்ஹிஸ்ட்றி (internet browsing history ) இன்னும் ஒருவருக்கு தெரியாத வரைக்கும் அவர் நல்லவர் தான் என்பது இன்றய உலகில் உள்ள நல்ல மனிதனுக்கான அளவு கோலாக இருக்கிறது. இந்த ஒன்றை புரிந்து கொண்டால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்றால் , இவர்கள் நமது உறவி­னர்கள், நன்­றாக நம்­முடன் பழ­கு­ப­வர்கள், சாது­வான மனிதர்கள் என்று சொல்லும் எல்லா நல்ல மனி­தர்கள் மீதும், அயலார், ரியுசன் மாஸ்டர், ஓதிக்கொடுக்கும் ஹஸரத், சமய குருக்கள் என இப்படியாக ஆள் வேறுபாடு இன்றி எல்லோர் மீதும் எமது கவனக் குவிப்பு அவ­சியமாகின்றது. அதே போன்று தன் உற­வுக்­காரர், அல்­லது அயல் வீட்டார், அல்­லது நண்­பர்கள் என எவராவது கொஞ்சம் மேல­தி­க­மாக, சந்தேகப்படும் படியாக பிள்­ளை­க­ளுடன் குலாவும் போது, தூக்கி அணைத்து முத்­த­மிடும் போது, விழிப்­பாகச் செயல்­படுதல் எதிர் காலத்தில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க உதவியாக இருக்கும் .

பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான உபாயங்களாக இருக்கின்றன

உற­வினர் வீடு, அய­லவர் வீடு, நண்பர் வீடு என அழைப்­பிற்கோ அல்­லது தமது தேவையின் நிமித்­தமோ ஆண் பிள்­ளையையோ அல்லது பெண் பிள்­ளை­யையோ இரவை கழிப்­ப­தற்­காக அல்­லது உறங்கச் செல்லவதற்காக எக்காரணம் கண்டும் அனு­ம­திக்­காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்­பெறும் விசேட வைப­வங்­களின் போது அல்லது பிற­வீ­டு­களில் நடக்கும் வைப­வங்­களின் போது தம் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பிள்­ளை­களுக்கு பிறர் வழங்கும் அன்­ப­ளிப்­புகள் (டொபி, சொக்லட், விளை­யாட்டுப் பொருட்கள்) மீது கணிப்பாக இருத்தல் வேண்டும் அதே போன்று இவற்றைப் பெற்­றோரின் அனு­மதி இன்றி பெற்­றுக்­கொள்ளக் கூடாது என்ற கண்­டிப்­பு­டனும் விளக்­கத்­து­டனும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதற்கு மேலதிகமாக குழந்­தை­க­ளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்­தாலும் முத­லா­வது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்­பாக தாயும்- பிள்­ளையும், தந்தையும் -பிள்ளையும் உறவு நெருக்­க­மா­ன­தாக இருக்க வேண்டும். ஏற்­க­னவே நன்­றாக பழ­கிய உற­வினர், நண்பர், அயலார் தம் வீட்­டிற்கு வந்­ததும் அவர்­களைக் காணப்­பி­டிக்­காது ஒழிந்து கொண்டால் அல்­லது பயந்தால், அல்­லது அழுதால் அவர்­களின் சிறு விளை­யாட்டுப் பேச்­சுக்கும் ஆத்­திரம் கொண்டால் அதன் அர்த்தம் அவர்கள் மூலம் விரும்­பா­த­தொன்றை பிள்ளை சந்­தித்­துள்­ளது, பிள்ளை பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை புரிந்து கொள்ள கூடியவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் எந்தப்பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது என்ற கிராமிய தத்துவத்தை தெரிந்து கொண்டால் குறைந்த பட்சம் அவதானமாகவாவது இருப்பது தான் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய வழியாக தென்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கொஞ்சம் மேலதிகமாக அவதானமாக இருப்பதும்
அதற்கேற்ப கண்காணிப்புக்களை மேற்கொள்வதுமே காலத்தின் தேவையாகவும் உள்ளது. இது ஒன்றுதான் வளரும் பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியுமான மிகச்சிறந்த வேலியாக இருக்கிறது

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் குழந்தைகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று..

சிறுவர்களை பாதுகாப்போம் அவர்கள் வாழ்வதற்கு நல்லதொரு சூழலை ஏற்படுத்துவோம்.

Dr PM.Arshath Ahamed
MBBS, MD PEAD

பிற் குறிப்பு : The untochables
இது உலகப் புகழ்பெற்ற புகைப்படம். சிறுவர்கள் எல்லாம் யார் யாரால் துன்புறுத்தப்படுகிறார்கள், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகின்றன ஒரு ஆவணம்.

09/02/2021

Alhamthullillah.. Our completed Masjidul Salam.
May allah bless them with his rahmath and barakath for those helped to build this masjid in any such a way ❤.
Jazakallku kair

85% work has been completed & looking for your kind support to be complete our masjid ASAP.
27/09/2020

85% work has been completed & looking for your kind support to be complete our masjid ASAP.

24/02/2020
24/02/2020

Kindly looking for your support for plastering work for our masjid.
For the time being need 50 bags cements..
Thanks.

A.allikkum ww. Looking for kind donation to build this attached picture of masjid in my area Sri Lanka. If you would lik...
16/09/2019

A.allikkum ww.

Looking for kind donation to build this attached picture of masjid in my area Sri Lanka.

If you would like to contribute, kindly welcoming your fixed sathaqqa for you and your family for the sack of Allah.

Jazakallaku kair.

https://salamculturalcenter.webs.com

Address

Salam Cultural Center, Mavadi Junction, Akkaraipattu-21
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Salam Cultural Center & Masjith-ul-Salam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Salam Cultural Center & Masjith-ul-Salam.:

Share