02/06/2025
*வைகாசி விசாக திருவிழா அழைப்பிதழ்*
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் *கல்லூர்* கிராமத்தில் அமைந்துள்ள *காவடி சித்தர்* வளாகத்தில் அருள்பாலிக்கும் நமது *தருமமிகு வழித்துணை முருகன்* (தினசரி அன்னதான மடம்) கோவிலில் வருகின்ற *(08-06-2025) ஞாயிற்றுக்கிழமை* அன்று காலை *கணபதி ஹோமம்* நடைபெறும். பிறகு பக்தர்கள் *பால்குடம்* மற்றும் *காவடி* எடுத்து வழித்துணை முருகனுக்கு *பால் அபிஷேகம்* செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
மேலும் *வைகாசி விசாக தினமான (09-06-2025) திங்கட்கிழமை* காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நமது *தருமமிகு வழித்துணை முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்* செய்யபட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் *சிறப்பு அன்னதானமாக அறுசுவை உணவு* மற்றும் வடை பாயசத்துடன் *மதிய உணவு* பரிமாறப்படவுள்ளது.
*பக்தகோடிகள்* அனைவரும் *வைகாசி விசாக திருவிழாவில்* கலந்து கொண்டு முருகப்பெருமானின் *அருளை பெறுமாறு* கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அன்னதானத்தை சிறப்பிக்க அனைவரும் வருக! வருக!
இங்ஙனம்
என்றும் இறைப்பணியில்
*முருகன் அடிமை முத்துசாமி*
9500881261
9360089059
#வைகாசி #விசாகம் #முருகன் #முருகா #கோவில் #கோயில் #முருகன்கோவில்