06/10/2022
24.09.22 அன்று காக்காவேரி சமுதாயக் கூடத்தில் பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து டாக்டர் திருமதி. செல்வராணிஅவர்கள் தலைமையில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் திருமதி. செல்வராணி அவர்கள் வளர் இளம் பெண்களிடம் தன்சுத்தம் பற்றியும், சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகள் உட்கொள்ளும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களான பேரிச்சை, மீன், முட்டை, பச்சைக்காய்கறிகள், பழம் வகைகள், கீரை வகைகள் தினமும் உட்கொள்ள வேண்டும் என்று கூறினார். பின்பு 30 கிராமங்களில் இருந்து வந்திருந்த வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள், தைராய்டு, தலைவலி, வயிற்று வலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கி மருந்துகள் எழுதி வழங்கினார். மேலும் 50 பெண்களுக்கு Hb டெஸ்ட் எடுக்கப்பட்டு Hb level குறைவாக உள்ளவர்களுக்கு மருந்துகள் எழுதி மருந்து சீட்டு வழங்கினார். மேலும் Hb level மற்றும் அதிக உடல் நிலை பாதிப்பு உள்ள 14 பெண்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு reference வரச்சொன்னார். மேலும் இதில் 30 கிராமங்களில் இருந்து மொத்தம் 110 வளர் இளம் பெண்கள் பயன்பெற்றனர்.